Monday, September 10, 2012

நம்பிக்கை தந்திட்ட கருத்தரங்கம்:
மதுரை SSAவில் 08-09-2012 அன்று நிர்வாகமும் அனைத்துச் சங்கங்களும் இணைந்து நமது தரைவழி / பிராட்பேண்ட்/ மொபைல் சேவை பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கத்தை நடத்தியது.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள்/ஊழியர்கள் 150 பேர் பங்கேற்றனர்.
  • தயாரித்து வழங்கப்பட்ட 45 கேள்விகளுக்கு கலந்துகொண்ட அனைவரும் தங்களது பகுதியிலுள்ள அனைத்து அதிகாரிகள்/ஊழியர்களின் கருத்துக்களை எழுத்து மூலம் பதிவு செய்தனர்.
  • DGM(HR) துவக்கவுரை நிகழ்த்த அனைத்து மாவட்டச் செயலர்களும் அதிகாரிகளும்/ஊழியர்களும் விவாதத்தில் பங்கேற்றனர்.
  • மதுரை அமெரிக்கன் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் முனைவர் திரு.பிரபாகரன் அவர்கள் விழிப்புணர்வு உரையாற்றினார்.
இறுதியாக GM அவர்கள் தொகுக்கப்பட்ட கருத்துக்களுக்கு விளக்கமளித்து உரையாற்றினார். லேண்ட்லைன் சரண்டரை கூட்டாக சேர்ந்து தடுப்பது, பிராட்பேண்ட் எண்ணிக்கையை அதிகரிப்பது, புதிய இணைப்பு/ MNP மூலமாக மொபைல் எண்ணிக்கையை உயர்த்துவது, அதன் மூலம் மதுரை மாவட்ட வருவாயை உயர்த்துவது என நமது கடமையை இணைந்து செய்திடுவோம் எனக்கூறி கருத்தரங்கை நிறைவு செய்தார்.
இந்த கருத்தரங்கம் அதிகாரிகள்/ஊழியர்களிடையே ஒரு உத்வேகத்தை / இணைந்து பணியாற்றக்கூடிய சூழ்நிலையை  ஏற்படுத்தும், அதன்மூலம் மதுரை SSA வளர்ச்சியை நோக்கி  நடைபோடும் என்று நம்புகிறோம். 

No comments:

Post a Comment