Thursday, February 28, 2013

BSNLEU சங்கத்தின் மற்றுமொரு சா(வே)தனை:

மிகுதிநேரப்படி (OTA) மணிக்கு ரூ.21.15 லிருந்து ரூ.15.85ஆக குறைத்து உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
 
இனிமேல் ஒருநாள் மிகுதிநேரப்படி(OTA) ரூ.159 லிருந்து ரூ.119ஆக குறைத்து வழங்கப்படும்.

JTO 35% & 15% இலாகா போட்டித்தேர்வு

JTO 35% & 15% இலாகா போட்டித்தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு நாள்: 02-06-2013
 
முயற்சி எடுத்த மாநிலச் சங்கத்திற்கு நன்றி.
 
தகுதியுள்ள தோழர்கள் தேர்வுக்கு தயாராக வேண்டுகிறோம்.
 
தேர்வெழுதும் தோழர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
உண்மை, தூய்மை, சுயநலமின்மை இந்த மூன்றையும் பெற்றிருப்பவனை பிரபஞ்சம் முழுவதும் எதிர்த்தாலும் அதை எதிர்த்து நிற்கக்கூடிய ஆற்றல் அவனுக்கு உண்டு.
                                                -சுவாமி விவேகானந்தர்
 
தோழர் சேதுவுக்கு வந்த குறுஞ்செய்தி:
 
 After retirement comrades please concentrate on party work only, don't indulge in petty groupisim!.Stop snooping your dirty nose in our Cuddalore SSA-NFTE. We will defeat your stooge by thumping margin. by S.Anandhan, Asst.Dist.Sec-Cuddalore District.
 
மூத்த தோழருக்கு அறிவுரை வழங்கிய இளம்தோழருக்கு நன்றி. எல்லா மாவட்டச் சங்கத்திலும் துணைச் செயலர்கள் இருக்கின்றார்கள்.  
 
வானளாவிய அதிகாரம் படைத்த கடலூர் மாவட்டச் சங்க துணைச் செயலர் தோழர்.ஆனந்தன் அவர்களே!
 
உங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி உங்கள் மாவட்டத்தில் மாநில மாநாட்டிற்காக வசூல் பண்ணிய பணத்தில் வரவேற்புக்குழுவிடம் கொடுத்ததுபோக மிச்சமுள்ள பணத்தையும்  மீதமுள்ள ரசீது புத்தகங்களையும் வரவேற்புக்குழுவிற்கு அனுப்பினால் மிக்க நன்றியோடு உங்களை பாராட்டுவோம்.
 
பண்பாடுமிக்க சம்மேளன செயலர் தோழர்.ஜெயராமன் அவர்களின் மாவட்டத்திலிருந்து இத்தகைய மரியாதையற்ற செயலை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

Tuesday, February 26, 2013



 கிளைச்செயலர்கள் கருத்தரங்கம் &
 தேர்தல் பிரச்சார துவக்கவிழா.


26-02-2013 அன்று சேலத்தில் தேர்தல் பிரச்சார துவக்க விழாவும் கிளைச் செயலர்கள் கருத்தரங்கமும் மாநிலத் தலைவர் தோழர்.நூருல்லா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. தோழர்கள் ஆர்.கே, முத்தியாலு, தமிழ்மணி, சேது, ஜெயபால் ஆகியோர் பங்கேற்று தோழர்கள் தேர்தல் களத்தில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என எழுச்சியுரையாற்றினர்.






மாநிலச் செயலர் பட்டாபி நமது நிறுவனம் எதிர்கொண்டுள்ள பிரச்னை, அதை நாம் எவ்வாறு எதிர்கொள்வது, அங்கீகாரத்திற்கு பின்னர் நாம் கவனம் செலுத்த வேண்டிய பிரச்னைகள், தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என விளக்கமாக உரையாற்றினார்.

அங்கீகாரத்தை நோக்கி NFTE-BSNL என்ற தேர்தலுக்கு பயன்படக்கூடிய தேர்தல் சிறப்பு ஒலிக்கதிரை தோழர்.ஆர்.கே  வெளியிட நமது சின்னத்தின் அடையாளமாக ஒன்பது மூத்த தோழர்கள் பெற்றுக்கொண்டனர்.

கிட்டத்தட்ட 200 கிளைகளிலிருந்து 600 கிளைச்செயலர்களும் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். கிளைச்செயலர்கள் கருத்தரங்கில் பங்கேற்று தங்களது கருத்துக்களை முன்வைத்தனர். 



விழாவினை சிறப்பாக நடத்திய சேலம் நூருல்லா, பாலகுமார், வெங்கட்ராமன் தலைமையிலான அனைத்து தோழர்களுக்கும் மதுரைமாவட்டச் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள்

Monday, February 25, 2013

வத்தலக்குண்டு, நிலக்கோட்டை கிளைகளின் இணைந்த மாநாட்டுக் காட்சிகள்:     23-02-2013 மாலை 5 மணி


 
கொடைக்கானல் கிளை மாநாட்டுக் காட்சிகள் - 23-02-2013 காலை 10 மணி
 



Friday, February 22, 2013

சேலத்தில் நடைபெறும் கிளைச் செயலர்கள் கூட்டம், தேர்தல் பிரச்சார துவக்க விழா மற்றும் ” BSNL நிதி ஆதாரம் ”  கருத்தரங்கில்

கலந்துகொள்பவர்களுக்கு Spl.CL க்கான உத்தரவு. .....சொடுக்கவும்

Saturday, February 16, 2013

JTO இலாகா தேர்வு:

கடந்த 13-02-2013 அன்று மாநிலச் செயலர் JTO இலாகா தேர்வை விரைவில் நடத்தக்கோரி மாநில நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்ததன் அடிப்படையில் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அப்பேச்சுவார்த்தையில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான சலுகை, வயது வரம்பு 50 என்பது எந்த ஆண்டுக்கான பதவிகளுக்கு தேர்வு எழுதுகிறார்களோ அந்த அடிப்படையில்தான் கணக்கிட வேண்டும், தேர்வு அறிவிப்பு தேதியன்று கணக்கிடக்கூடாது எனக்கோரியுள்ளோம்.

தமிழ் மாநில நிர்வாகம் இதற்கான விளக்கங்களைப் பெற்று வரும் 25-02-2013 அல்லது அதற்கு முன்னர் JTO இலாகா தேர்வுக்கான அறிவுப்பு வெளியிடப்படும் என உறுதியளித்துள்ளது..



 

Friday, February 15, 2013

இரங்கல் செய்தி
திரு. அய்யனார் DGM & SC/ST Liasion Officer  அவர்கள் மாரடைப்பால் இறந்துவிட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
 அவரது மறைவால் வாடும் அவர்தம் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அங்கீகாரத்தை நோக்கி அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!! வணக்கம். 6வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் 16-04-2013 அன்று நடைபெறும். BSNLக்கே உரிய புதிய அங்கீகார விதிகளின்படி தேர்தல் நடைபெற உள்ளது. 15 சதம் பெரும் இரு சங்கங்கள் அங்கீகாரம் பெறும். 7 சதம் பெறும் சங்கம் தேசிய,மாநில,மாவட்ட JCMல் ஒருவர் இடம்பெறலாம். புதிய அங்கீகார விதிகள் உருவாக்கப் பாடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தோழர்.குருதாஸ்தாஸ் குப்தா, நமது மாநில மாநாட்டில் பங்கேற்ற AITUC பொதுச்செயலாளர் G.L.தார், நமது பொதுச்செயலாளர் தோழர்.C.சிங், தலைவர் தோழர். இஸ்லாம், மாநிலச் செயலர் தோழர்.பட்டாபி ஆகியோருக்கு மாவட்டச் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். பிப்ரவரி 4,5 தேதிகளில் நடைபெற்ற விரிவடைந்த மத்திய செயற்குழுவில் தற்போதுள்ள கூட்டணிச் சங்கங்களோடு (BSNL Workers Alliance) தேர்தலை சந்திப்பது, மேலும் SNATTA , SEWA BSNL –ன் ஆதரவைக்கோருவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் ஏற்பட்ட இழப்புகளை மீட்டெடுக்க, BSNL நிறுவனத்தை லாபமீட்டும் துறையாக மாற்றிட அங்கீகாரத்தை பெறுவோம் என்ற சூளுரையோடு மத்திய செயற்குழு நிறைவுபெற்றது. மாவட்டத்திலிருந்து தோழர்கள் முருகேசன், விஜயரங்கன்,லட்சம்,சேது ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்டச்செயற்குழு: 10-02-2013 அன்று மதுரையில் செயற்குழு மாவட்டத் தலைவர் தோழர்.C.விஜயரங்கன் தலைமையில் நடைபெற்றது. தோழர்கள் சேது,லட்சம், பரிமளம் ஆகியோர் ஓங்கோல் மத்திய செயற்குழு முடிவுகளைப் பற்றியும், 78.2 IDA இணைப்புக்கான போராட்டங்கள், பிப்ரவரி 20,21 பொதுவேலைநிறுத்தத்தில் பங்கேற்க வேண்டியதின் அவசியத்தையும் விளக்கிப் பேசினர். அமைப்புநிலை விவாதத்தில் மாவட்டச் சங்க நிர்வாகிகள்,கிளைச்செயலர்கள் பங்கேற்றனர். மாநில மாநாட்டிற்காக பணியாற்றிய அனைவருக்கும் வரவேற்புக்குழு தலைவர் தோழர். P.ராஜகோபால் தலைமையில் பொதுச்செயலர் தோழர்.K.சேது சால்வை அணிவித்து கெளரவித்தார். வரவேற்புக்குழு பொதுச்செயலர் தோழர்.K.சேது அவர்களுக்கு அனைவரும் சேர்ந்து சால்வை அணிவித்து கெளரவித்தோம். மதுரை வருவாய் மாவட்டத்திற்கு தோழர்கள் S.ராஜேந்திரன், R.ராஜேந்திரன் (TM,MEL), திண்டுக்கல் மாவட்டத்திற்கு தோழர்கள் S.கோவிந்தராஜ், (TM,DDG), I.சுரேஷ்பாபு,(TM, Pachaloor), தேனி வருவாய் மாவட்டத்திற்கு தோழர்கள் S.ஜான்சன் மாணிக்கராஜன் (STSO, TEI), B.சுருளிராஜ்(TM,CBM), மகளிர் குழுவிற்கு தோழியர்கள் T.பரிமளம், இந்திராணிசுந்தர்ராஜ் ஆகியோர் தேர்தல் பணிக்குழு கன்வீனர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேற்கண்ட தோழர்கள் அந்தந்த பகுதியிலுள்ள மாவட்டச் சங்க நிர்வாகிகள், கிளைச் செயலர்களுடன் கலந்துபேசி தேர்தல் பணிக்குழுக்களை அமைத்து தேர்தல் பணியைத் துவக்கிட மாவட்டச் செயற் குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. • பிப்ரவரி 20,21 பொதுவேலைநிறுத்தம்: அரசியல் பேதமின்றி அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள்,பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் என அனைவரும் ஓரணியில் திரண்டு போராட அறைகூவல் விடப்பட்டுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக தொழிலாளர் விரோதக் கொள்கைகளை கடைப்பிடிக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், தினந்தோறும் பெட்ரோல்,டீசல் விலையேற்றத்தால் ஏறும் விலைவாசி உயர்வைக் கண்டித்தும், நமது BSNL நிறுவனத்தின் விரிவாக்கத்திற்கு முட்டுக்கட்டைபோடுகின்ற, பங்கு விற்பனை செய்யத் துடிக்கின்ற, VRS திட்டத்தை அமுல்படுத்த நிர்ப்பந்திக்கின்ற மத்திய அரசைக் கண்டித்தும் நடைபெறும் இப்போராட்டத்தில் அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டுகிறோம். • பிப். 26 செவ்வாய்கிழமையன்று சேலத்தில் கிளைச்செயலர்கள் பங்கேற்கும் கருத்தரங்கமும் 6வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் பிரச்சார துவக்க விழாவும் நடைபெற இருக்கிறது. கிளைச்செயலர்கள்,மாவட்டச் சங்க நிர்வாகிகள், முன்னணி தோழர்கள் திரளாக பங்கேற்க வேண்டுகிறோம். • பிப்.23-ல் நடைபெறும் கொடைக்கானல், வத்தலக்குண்டு, நிலக்கோட்டை கிளை மாநாடுகளில் மாநிலச் செயலர் தோழர். பட்டாபி பங்கேற்கிறார். தோழர்கள் திரளாக கலந்துகொள்வீர். • தேர்தல் அறிவிப்பு: தேர்தல் அறிவிப்பு நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுவிட்டது. 18 சங்கங்கள் தேர்தலில் பங்கேற்க விண்ண்ப்பித்துள்ளன. கிளைச்செயலர்கள் கிளைக்கூட்டங்களை அலுவலகத்திற்குள் நடத்தி தேர்தல் பணியைத் துவக்க வேண்டுகிறோம். தேர்தல் களம் தயார். பொறுப்புக்கள் நிறைந்த பொறுப்புள்ள சங்கம் NFTE என்ற மாநிலச் செயலரின் கூற்றை நிருபிக்கும் தருணமிது. தொழிலாளர்கள் தங்களது வாக்குகளை அச்சமின்றி பயன்படுத்தும் சூழலை உருவாக்குவோம். அங்கீகாரத்தை நோக்கி பயணிப்போம். தோழமை வாழ்த்துக்களுடன், தோழமையுள்ள, 13-02-2013 மதுரை-2 K.முருகேசன்
GPF காலதாமதம்:
அகில இந்திய தலைவர் இஸ்லாம் அவர்கள் டைரக்டர்(நிதி) அவர்களைச் சந்தித்து  GPF காலதாமதத்தைப்பற்றிப்பேசியுள்ளார்.
 ஓரிரு தினங்களில் பட்டுவாடாவிற்கு ஏற்பாடு செய்வதாக டைரக்டர்(நிதி) உறுதியளித்துள்ளார்.
 
வரும் நிகழ்வுகள்:
 
  • பிப்ரவரி 23  காலை 10 மணி
கொடைக்கானல் கிளை ஆண்டுவிழா & புதிய உறுப்பினர்களுக்கு வரவேற்பு
 
இடம்: கொடைக்கானல் தொலைபேசி நிலையம்
 
பங்கேற்பு: மாநிலச் செயலர் பட்டாபி, மற்றும் மாநில,மாவட்டச் சங்க நிர்வாகிகள்
 
  • பிப்ரவரி 23  மாலை 5 மணி
வத்தலக்குண்டு, நிலக்கோட்டை கிளைகளின் ஆண்டுவிழா  
 
இடம்:வத்தலக்குண்டு தொலைபேசி நிலையம்
 
பங்கேற்பு: மாநிலச் செயலர் பட்டாபி, மற்றும் மாநில,மாவட்டச் சங்க நிர்வாகிகள்

Tuesday, February 12, 2013

6 வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

18 சங்கங்கள் தேர்தல் களத்தில் உள்ளன.

Saturday, February 9, 2013


வெற்றிக்கு கட்டியங்கூறிய ஓங்கோல் மத்திய செயற்குழு



















தமிழகத்திலிருந்து 70க்கும் மேற்பட்ட தோழர்கள் செயற்குழுவில் கலந்துகொண்டனர்.
 மதுரை மாவட்டத்திலிருந்து மாவட்டச் செயலர் முருகேசன், மாநில துணைத் தலைவர் லட்சம், மாநில அமைப்புச் செயலர் விஜயரங்கன், தோழர். சேது ஆகியோர் கலந்துகொண்டனர்.
 

  
அகில இந்திய தலைவர் தோழர்.இஸ்லாம் தேசியக்கொடியை ஏற்றி வைக்க, மூத்த  தோழரும் முன்னாள் ஆந்திர மாநிலத்தின் செயலாளருமான மதுசூதனராவ் சம்மேளனக்கொடியை ஏற்றி வைத்தார். தோழர்.குப்தாவின் நினைவு ஸ்தூபிக்கு அனைவரும் மலரஞ்சலி செலுத்திவிட்டு அரங்கினுள் நுழைந்தனர்.
தோழர்.மதுசூதனராவ் தனது 45 ஆண்டுகால குப்தாவுடனான அனுபவங்களை நினைவு கூர்ந்து அஞ்சலி உரை ஆற்றினார்  


பொதுச் செயலர், துணைப்பொதுச்செயலர் உரைக்குப்பின்னர் மாநிலச் செயலர்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.

அனைவராலும் கவனிக்கப்பட்ட நமது மாநிலச் செயலர் பட்டாபியின் சிறப்பான உரையிலிருந்து ....

அங்கீகாரம் இல்லாத நிலையிலும் நமது சங்கம் கடந்த 2 ஆண்டுகளில் செய்த சாதனைகளை பட்டியலிட்டு, மத்திய சங்கத்திற்கு பாராட்டினை தெரிவித்தார்.

·       இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர்.குருதாஸ் தாஸ் குப்தா, AITUC செயலாளர் தோழர். G.L.தார் ஆகியோரின் முன்முயற்சியாலும் பொதுச்செயலர், தலைவர் ஆகியோரின் தொடர் முயற்சியாலும் BSNLக்கென்று புதிய அங்கீகார விதிகளை உருவாக்கியது.
·      டிஸ்மிஸ் செய்யப்பட்டாலும் DOT காலத்திற்கான பென்சனை பெற்றுத் தந்தது.
·      பதவி உயர்வின்போது மறுக்கப்பட்ட HRA பெற்றுத் தந்தது.
·      அதிகாரிகளைவிட மேம்பட்ட ஊதிய நிர்ணயமுறை
·      பெண் ஊழியர்கள் MRS திட்டத்தில் தனது பெற்றோர் அல்லது கணவரது பெற்றோரை விருப்பத்தின் அடிப்படையில் சேர்த்துக்கொள்ள உத்தரவு.
·      விடுப்பை காசாக்குதல் பணத்திற்கு வருமான வரி விலக்கு பெற்றுத் தந்தது.
·      10 வருட சேவைக்குப்பின் முழு ஓய்வூதியம்
·      கருணை அடிப்படை பணிக்கு 3வருட நிபந்தனை நீக்கம்.
·      2007ல் பதவி உயர்வுக்குப்பின்னர் விருப்ப அடிப்படையில் புதிய ஊதிய நிர்ணயம்
·      கட்டாய மாற்றலில் சென்றவர்கள் திரும்பி வர விருப்ப மாற்றல் வழங்க புதிய முறை.

நாம் வெற்றிபெற ஒவ்வொரு மாநிலச் சங்கமும் எவ்வளவு வாக்குகளை பெறவேண்டும் என புள்ளி விபரங்களுடன் வேண்டுகொள் விடுத்தார்.

நாம் அங்கீகாரத்திற்குப்பின்னர் கவனம் செலுத்த வேண்டிய கோரிக்கைகளை முன்வைத்தார்.

·          SC/ST ஊழியர்களுக்கு பதவி உயர்வில் 1 ஆண்டு சலுகை.
·          கருணை அடிப்படை பணிக்கு SC/ST ஊழியர்களுக்கு 55 புள்ளிகளில் தளர்வு.
·          நிரப்பப்படாத SC/ST காலியிடங்களுக்கு சிறப்பு ஆளெடுப்பு தேர்வு
·          பெண் ஊழியர்களுக்கு மாதத்திற்கு ஒரு நாள் சிறப்பு விடுப்பு
·          மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதைப்போல குழந்தை பராமரிப்பு விடுப்பு
·          B.E, M.B.A  படித்தவர்களுக்கு 10% சிறப்பு ஒதுக்கீடு
  


இறுதியாக பொதுச்செயலரும் தலைவரும் நம்பிக்கை தரக்கூடிய எழுச்சியுரையால் உற்சாகத்துடன் நிறைவுபெற்றது விரிவடைந்த தேசிய  செயற்குழு.