Monday, January 12, 2015

தேசிய இளைஞர் தினம் - சுவாமி விவேகானந்தர்
ஜனவரி 12 

 சுவாமி விவேகானந்தர் - பெயரை உச்சரிக்கும் தருணங்களிலேயே மனதில் ஒரு அபூர்வ ஆளுமையும், அவருக்கே உரித்தான தீட்சண்யமும், கம்பீர தோற்றமும் நிழலாடும். வலிமையே வாழ்வு முழுதும் போதித்தவர். கீழை தேசத்தின் மகிமையை உலகமெங்கும் எடுத்து சென்றவர், வேதாந்தத்தின் விளக்கம்ஒரு ஆன்ம ஒளி, இருண்ட தேசத்தின் வெளிச்ச விடிவெள்ளி என அவருக்கு நிறைய பக்கங்கள்.  அவரின் உருவத்திற்கும்அவரின் செயல்பாட்டுக்கும் அவர் என்றென்றும் இளைஞர்.

அவரின் பிறந்த நாளை இளைஞர் தினமாய் கொண்டாடுவது மிக மிக பொருத்தமானதே.


அது சுவாமி விவேகனந்தர் தன தாய் புவனேஸ்வரி அவர்களிடம் துறவுக்காய்ய் அனுமதி கேட்டிருந்த காலம். ஒரு நாள் திடீரென நீ துறவு நெறிக்கு செல்லலாம் என அனுமதி தந்தார். சுவாமிஜி அவர்கட்கு ஆச்சர்யம். அதற்கான விளக்கத்தை அவரின் அம்மா தந்தார். ஒவ்வொரு நாளும் பழம் சாப்பிட, நறுக்க ஒரு கத்தியை அவரின் அம்மா எடுத்து வர சொல்வார். அன்று சுவாமிஜி கத்தியை தரும் பொழுது, கத்தியின் கூர் முனை அவரின் புறம் இருந்தது. அதை சுட்டி காட்டிய அவரின் அம்மா, உனது இதயம் எல்லா தியாகத்துக்கும் தயார் ஆகி விட்டது. இனி உன் முன் யார் வேண்டுமானாலும் பயம் இன்றி வந்து செல்லலாம் என சொன்னார். 
ஒவ்வொரு மனிதனும் இறைவனாக மாறலாம் என்பது அவர் கொடுத்த புது வெளிச்சம்.. அவர் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்..  

Tuesday, January 6, 2015

07-01-2015 அகவை 95
வாழ்த்துகிறோம்! வணங்குகிறோம்!!
தபால் மற்றும் தொலைதொடர்பு துறையில்
குறிப்பாக தமிழகத்தில் 
எண்ணற்ற தோழர்களுக்கு 
மார்க்சிய அறிவையும் 
தோழமையுணர்வையும் 
போராட்ட உணர்வையும்
கற்றுத் தந்தவர்.
தயக்கமின்றி கருத்துக்களை
முன்வைப்பவர்
விமர்சனம் ,கண்டனம்,பாராட்டு
அனைத்தையும் ஏற்றுக்கொண்டவர்
நூல்கள் பல எழுதியவர்.

சிவகங்கையில் நடைபெற்ற NFPTE வைரவிழாவில் தோழர். D.ஞானையா
ஆற்றிய உரை.... இங்கே சொடுக்கவும் http://tindeck.com/listen/jpcn

 



Monday, January 5, 2015

தொழிற்சங்க பிதாமகன் தோழர். O.P.குப்தா நினைவு நாள் - ஜன்வரி 6
சிந்தனைகளை, கொள்கைகளை நினைவுகூர்ந்து அதன் வழி நடப்போம்!
" SAVE BSNL " என்ற முழக்கத்தோடு 
நாடு தழுவிய தொடர் தர்ணா போராட்டம்
ஜனவரி 6,7,8 தேதிகளில்
மதுரை மாவட்டத்தில் 
ஜனவரி 6ம் தேதி மதுரையிலும்
ஜனவரி 7ம் தேதி திண்டுக்கல்லிலும்
ஜனவரி 8ம் தேதி போடியிலும்
(தேனியில் 144 தடை உத்தரவு இருப்பதால்) 
தர்ணா போராட்டம் நடைபெறும்.
தோழர்கள், தோழர்கள் திரளாக கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றியடையச் செய்ய வேண்டுகிறோம்.



























Sunday, January 4, 2015

தேனியில் நடைபெற்ற AITUC மாநில மாநாட்டு காட்சிகள்
NFTE -BSNL மாநிலச் செயலர் தோழர். பட்டாபி வாழ்த்துரை




AITUC பொதுச் செயலாளர் தோழர். குருதாஸ் தாஸ் குப்தா Ex.M.P சிறப்புரை

CPI மாநிலச் செயலர் தோழ்ர். தா.பாவுடன்  
 மாநாட்டு வரவேற்புக் குழு தலைவரும்
 தேனி மாவட்ட CPI மாவட்டச் செயலருமான தோழர். தங்கம்
வரவேற்புக் குழுவில் பணியாற்றிய NFTE-BSNL தோழர்கள்