Friday, August 23, 2013

அதிகாரிகள் சங்கங்களுக்கான அங்கீகார விதிகள்:-

அதிகாரிகள் சங்கங்களுக்கான புதிய அங்கீகார விதிகளை உருவாக்க குழு அமைக்கப்பட்டு அந்த குழு தனது பரிந்துரைகளை தந்துள்ளது. புதிய அங்கீகார விதிகளுக்கான நகல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன் மீதான கருத்துக்களை அதிகாரிகள் சங்கங்கள் 31/08/2013க்குள் தெரிவிக்க வேண்டும். •3 ஆண்டுக்கொரு முறை தேர்தல் நடைபெறும். •தேர்தல் CHECK OFF முறையில் சந்தா பிடித்தத்தின் மூலம் நடைபெறும். •35 சதம் அல்லது அதற்கு மேல் வாக்கு பெற்ற சங்கம் முதன்மைச்சங்கமாகவும், 15 சதத்திற்கு மேல் வாக்கு பெற்ற சங்கம் இரண்டாவது SUPPORTIVE அமைப்பாகவும் அங்கீகரிக்கப்படும். •ஓய்வு பெற்றவர்கள் பதவியில் இருக்க முடியாது. •ஒருவர் இரண்டு அமைப்புக்களில் /சங்கங்களில் பதவியில் இருக்க முடியாது. •தலைவர்,உதவித்தலைவர்,செயலர்,உதவிச்செயலர் மற்றும் பொருளர் பதவிகளில் 4 முறைக்கு மேல் பதவி வகிக்க முடியாது. •செயலர்,உதவிசெயலர் மற்றும் பொருளர் பதவிகளுக்கு மாற்றல் வசதி உண்டு. •அகில இந்திய அளவில் 15 நிர்வாகிகளும், மாநிலத்தில் 9 நிர்வாகிகளும்,மாவட்ட மட்டத்தில் 4 நிர்வாகிகளும் இருக்க வேண்டும். •தங்கள் சங்கத்தின் பத்திரிகை,இணையதளம் சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களையும் நிர்வாகத்திடம் அளிக்க வேண்டும்

Wednesday, August 21, 2013

ஆகஸ்ட் 21
ஜீவா பிறந்த நாள்
”தாங்கொண்ட கொள்கை தழைக்கப் பெரிதுழைப்பார்
  தீங்கு வரக்கண்டு சிரித்திடுவார் - யாங்காணோம்
 துன்பச் சுமைதாங்கி சீவானந்தம் போன்ற
 அன்புச் சுமை தாங்கும் ஆள்”     
- பாவேந்தர் பாரதிதாசன்

தமிழகத்தின் தென்கோடியில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குக்கிராமத்திலே பிறந்தவர் ‘சொரிமுத்து’ என்ற வினோதப் பெயருடன் வளர்ந்தவர் – ஜீவானந்தம் என்ற பெயரால் புகழ் பரப்பியவர். தொழிலாளர் இயக்கத்திற்கும பொதுவுடைமைத் தத்துவத்திற்கும் ஜீவ நாடியாக துடித்து, சமதர்ம்ப் பெருந்தொண்டுகள் புரிந்து, தம் கொள்கைகளுக்காகப் போராடி வாழ்கைக் களத்தில் வீர மரணம் எய்தினார். இது ஒரே வாக்கியத்தில் ஜீவாவின் கதை.
இவரது அரசியல் பிரவேசமும், தனித்தமிழ் முழக்கமும் சுயமரியாதைக் கர்ச்சனையும், தேசீய ஆவேசமும் எல்லாம் இவரைக் கம்யூனிசப் பாதையில் திரும்பிச் சமதர்ம சமுதாயக் குறிக்கோளை நோக்கிச் செலுத்தி விட்டன. இதற்குப் பரிசு தடியடியும் மாறி மாறி சிறைவாசமும், நாடு கடத்தலும் ஆகிய ஒரே பயங்கர வாழ்வு!
பயங்கரம் என்பது பார்ப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும்தான்; இவருக்கல்ல. 
“அன்பின் உருவமாய், பண்பின் களமாய், தியாகத்தின் சின்னமாய், உழைப்பின் உறைவிடமாய் விளங்கிய ஜீவா அவர்களைக் கண்ட கண்கள், பேச்சினைக் கேட்ட செவிகள், வளர்ந்த சிந்தனைகள் உண்மையிலேயே மண்ணில் பயனுற்றனவாகும். அவர் புகழ் போற்றி, ஜீவாவின் கருத்துக்களைப் பரப்புவோமாக,”
“குளிரும் சுடுதலும் உயிருக்கு இல்லை;
  சோர்வு வீழ்ச்சிகள் தொண்டருக்கு இல்லை;
  எடுமினோ அறப்போரினை”

– பாரதி

Tuesday, August 20, 2013

17-08-2013 அன்று நடைபெற்ற செயலகக் கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

லோக்கல கவுன்சில் உறுப்பினர்கள்:-

S.சிவகுருநாதன்,SSO,GM அலுவலகம், மதுரை
K.முருகேசன்,TSO,GM அலுவலகம்,மதுரை
C.விசயரங்கன்,STSO, திண்டுக்கல
S.கோவிந்தராஜ்,T.M., திண்டுக்கல்
R.முனியாண்டி,TTA, தேனி

ஒர்க்ஸ் கமிட்டி உறுப்பினர்கள்:-
  • மதுரை SSA:
S.சிவகுருநாதன்,SSO,GM அலுவலகம், மதுரை
P.நாகநாதன், T.M., போடி
K.R.கலாவதி, STSO,தல்லாகுளம், மதுரை

  • மதுரை கோட்டம்:
P.இளங்கோவன், TSO,தல்லாகுளம், மதுரை
K.அழகர்சாமி, T.M., NCR Exge, மதுரை
S. பத்ரிநாராயணன்,T.M,பெருங்குடி, மதுரை

  • திண்டுக்கல் கோட்டம்:
G.செபஸ்டியான்,T.M, திண்டுக்கல்
P.மீனாட்சி சுந்தரம்,T.M, திண்டுக்கல்
O.மச்சக்காளை,T.M, வத்தலக்குண்டு

  • தேனி கோட்டம்:
M.லட்சம்,TSO கம்பம்
S.ஜான்சன் மாணிக்கராஜன்,STSO தேனி
R.கார்த்திகேயன், TTA, கம்பம்