Tuesday, April 28, 2015


பெருந்திரள் பட்டினிப்போர் - CGM அலுவலகம் முன்பாக
29-04-2015 காலை 10 மணிக்கு
இயக்க மாண்பைக் காத்திட
பொய் வழக்கை உடைத்தெறிந்திட
திரண்டிடுவோம் சென்னையில்!

நாடு காத்திட.. நமது BSNL காத்திட 
நமது இரண்டு நாள் போராட்டம்..
நாடு முழுக்க நடந்து முடிந்துள்ளது.

கட்டபொம்மன்கள் காலமாகி விட்டாலும்...
எட்டப்பன்கள் மட்டும் எப்போதும் இறப்பதில்லை..
எந்த இயக்கத்திலும்.. 
எந்த போராட்டத்திலும்..
எந்த வேள்வியிலும்...
எட்டப்பன்கள் தங்கள் 
எட்டிக்குணத்தை.. 
எப்போதும் காட்டத்தவறுவதேயில்லை...
இதற்கு நமது  பகுதியும் விதிவிலக்கில்லை..

அதன் அடையாளங்கள்தான் ..
சென்னையில் தோழர்.மதிவாணன் மீது 
நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலும்...

நமது மாநிலச்செயலர் உள்ளிட்ட 
தமிழகத்தலைவர்கள் மீது 
தொடுக்கப்பட்டிருக்கும் போலி வழக்குகளும்...

இந்த அற்ப பதர்களை 
பாரதி சென்னையில்
பார்த்திருப்பான் போலும்..
எனவேதான் 
நெஞ்சு பொறுக்குதில்லையே  -இந்த 
நிலை கெட்ட மனிதரை 
நினைந்து விட்டால்.. 
என்று நொந்து பாடினான்..

எழுந்து நடப்பதற்கும் வலிமையற்ற 
எண்ணிலா மன நோயுடைய..
இந்த புல்லர்களை...
பொறியற்ற விலங்குகளை...
அவர்களுக்கு துணை போகும் 
அறிவிலிகளை..
தக்க விதத்தில் தண்டிப்போம்..

பயிர்களை விளைப்பது மட்டும் விவசாயமல்ல..
பாழும்  களைகளை களைவதும் விவசாயமே..

BSNLலில்...
களைகளைக் களைவோம்..
பயிர்களைக் காப்போம்..

Saturday, April 25, 2015

சென்னை தொலைபேசி மாநிலச் செயலர் மதிவாணன் அவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து மதுரை CTMX வாசலில் 24-04-15 காலை 11 மணிக்கு நடைபெற்ற ஆர்ப்பாட்ட பதிவுகள்:


 

Wednesday, April 22, 2015

இன்றைய செய்தி:
வெற்றிகரமாக நடைபெற்ற 2 நாள் வேலைநிறுத்தக்
கோரிக்கைகளின் மீதான பேச்சுவார்த்தை 
DOT செயலருடன் 27ந்தேதி மாலை 5 மணிக்கு 
நடைபெறும் என நமது பொதுச் செயலரும் 
FORUM தலைவருமான தோழர். C. சிங் SMS
மூலம் தெரிவித்துள்ளார்.
" Dear Comrade,The meeting to discuss strike issues with 
Secretary DOT is rescheduled to 27 April at 05.00pm. C.Singh.GS"
திண்டுக்கல் வாடிக்கையாளர் சேவை மையம் முன்பாக 
வேலைநிறுத்த 2வது நாளான இன்று 22-04-2015 
காலை  11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
இண்டோர் கிளையின் உதவிச் செயலர் தோழர்.N.சுப்பிரமணி 
தலைமையேற்க 
NFTE சார்பாக தோழர். S.கோவிந்தராஜ்,  
FNTO சார்பாக தோழர் P.முருகேசன், 
TEPU சார்பாக தோழர் S.உதயசூரியன், 
ஓய்வூதியோர் நலச் சங்கம் சார்பாக தோழர்.அழகர் ஆகியோர் வேலைநிறுத்தக் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

திண்டுக்கல் இண்டோர் கிளையின் போராட்ட விளக்கக்
கூட்டம் 18-04-2015 அன்று மாலை 6 மணிக்கு மனமகிழ்
 மன்றத்தில் நடைபெற்றது. 
மாநிலத் தலைவர் தோழர்.M.லட்சம், தோழர்.K.முருகேசன்
கலந்து கொண்டு போராட்டத்தின் கோரிக்கைகள் மற்றும்
ஜெய்ப்பூர் மத்திய செயற்குழு முடிவுகளை விளக்கி 
உரையாற்றினர்.








Tuesday, April 14, 2015

இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

ஏப்ரல் - 14

அண்ணல் அம்பேத்கார் பிறந்த தினம்

Sunday, April 5, 2015

மாதம் தோறும்  ம் தேதி
 சம்பளம் உறுதியாக்கிட !
EPF முறைகேடு ஒழித்திடஒழுங்குபடுத்திட! 
மாநிலம் தழுவிய போராட்டம் மே மாதம் 
அறைகூவலிட்ட TMTCLU மாநில செயற்குழு 

      கடலூரில் 2-04-2015 அன்று நடைபெற்றதுகாலை 9-30 மணிக்கு தோழர்.தமிழ்மணி அவர்கள் தேசியக்கொடி ஏற்றதோழர்.K.சேது அவர்கள் TMTCLU சங்கக்கொடியை ஏற்றி செயற்குழுக் கூட்டத்திற்கு தலைமை வகித்தார். TMTCLU கடலூர் மாவட்டச் செயலர் தோழர்.G.ரங்கராஜ் வரவேற்புரை நல்க செயற்குழு இனிதே துவங்கியதுமாநில துணைத் தலைவர் தோழர்.V.லோகநாதன் அஞ்சலியுரையாற்றிட,தஞ்சை தோழர். S.நடராஜன் துவக்கவுரையாற்றினார்.மாநில பொதுச்செயலர் தோழர். R.செல்வம் சங்கத்தின் செயல்பாட்டு அறிக்கையை சமர்ப்பித்து விளக்கவுரையாற்றினார். TMTCLU மாநிலப் பொருளர் தோழர்.M.விஜய் ஆரோக்கியராஜ் வரவு-செலவு கணக்கை சமர்ப்பித்து பேசினார். தோழர்.கிள்ளிவளவன் அமைப்பு நிலைபற்றி பேசினார். கடலூர் மாவட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டசெயலர் தோழர்.T.மணிவாசகம், NLC ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கப் பொதுச்செயலர் தோழர். K.வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநிலத்தலைவர் தோழர்.லட்சம்,   தோழர்கள். மாநில துணைப் பொதுச்செயலர் தோழர்.சுப்ரமணியன்-விழுப்புரம், மாநில துணைத்தலைவர் தோழர். E.கோபாலகிருஷ்ணன்-மதுரை, V.நல்லுசாமி-ஈரோடு, செல்வராஜ்-சேலம், மாரிமுத்து-காரைக்குடி, கலைவாணன்-தஞ்சாவூர்,முனியன்தர்மபுரி, முருகேசன்மதுரை, மாரி-காரைக்குடி, , கடலூர் மாவட்டசெயலர் தோழர்.இரா.ஸ்ரீதர் ஆகியோர் பேசினர்.


தோழர்.தமிழ்மணி,தோழர்.சென்னகேசவன், தோழர்.காமராஜ், தோழர்.ஆர்.கே. ஆகியோர் சிறப்புரையாற்ற, மாநிலசெயலர் தோழர்.பட்டாபி நிறைவுரையாற்றினார். TMTCLU கடலூர் மாவட்டத் தலைவர் தோழர்.குமார் நன்றியுரை வழங்கினார்.


கடலூரில் TMTCLU  மாநிலச்செயற்குழுவை சிறப்பாக நடத்திட்ட கடலூர் மாவட்டச் செயலர் தோழர்.ஸ்ரீதர் மற்றும் கடலூர் மாவட்டச் சங்கத் தோழர்கள் அனைவருக்கும் மனமார்ந்த  நன்றியும் பாராட்டுக்களும்.




புதுச்சேரி CPI மாவட்டச்செயலர் T.மணிவாசகம்

NLC ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கப் பொதுச் செயலாளர் K.வெங்கடேசன்
மாநிலத் தலைவர் M.லட்சம்
மாநிலப் பொருளாளர் விஜய் ஆரோக்கியராஜ்


இணைப்பொதுச் செயலாளர். தமிழ்மணி
NFTE அகில இந்தியச் சங்க சிறப்பு அழைப்பாளர்
கடலூர் மாவட்டச் செயலர் ஸ்ரீதர்

Wednesday, April 1, 2015

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 01.04.2015 முதல் பஞ்சப்படி (VDA) உயர்ந்துள்ளது.

UnSkilled
A Class நகர தொழிலாளர்களுக்கு  DA ரூ16/-  உயர்ந்துள்ளது
( ஊதியம் ரூ.332 லிருந்து ரூ.348 ஆக உயர்ந்துள்ளது)
B Class நகர தொழிலாளர்களுக்கு  DA ரூ14/-  உயர்ந்துள்ளது
( ஊதியம் ரூ.276 லிருந்து ரூ.290 ஆக உயர்ந்துள்ளது)
C Class நகர தொழிலாளர்களுக்கு DA ரூ11/-  உயர்ந்துள்ளது
( ஊதியம் ரூ.222 லிருந்து ரூ.233 ஆக உயர்ந்துள்ளது)