Friday, August 22, 2014

பொய்யும் புரட்டும்......
     2010-ல் கொடைக்கானல் மலைப்பகுதியில் (Unmanned) ஆளில்லா தொலைபேசியகங்களுக்கு Long stay ஊழியர்களை பணியமர்த்தும்போது அனைத்து Non-Executive சங்கங்களையும் நிர்வாகம் அழைத்துப் பேசியது.
அக்கூட்டத்தில்
வத்தலக்குண்டு கோட்டத்திலிருந்து ஊழியர்களை அனுப்புவது,
ஏற்கனவே மலைப்பகுதியில் 2 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியிருந்தால் அந்த ஊழியருக்கு விதிவிலக்கு.
மலைப்பகுதிக்கு செல்பவர்களுக்கு Tenure 1 ஆண்டுகாலம்.
Tenure முடித்தவுடன் அவரது பழைய இடத்திற்கு மாற்றப்படுவார் அல்லது அவர் கேட்ட இட்த்திற்கு மாற்றப்படுவார் என முடிவெடுக்கப்பட்ட்து.
அந்த அடிப்படையில்தான் மலைப்பகுதியில் 2 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியிருந்ததால் தோழர்.O.மச்சக்காளை TM அவர்களுக்கு அன்று விலக்கு அளிக்கப்பட்டது.
அனைத்து சங்கங்களும் ஒத்துக்கொண்ட Existing Policyயை கடைப்பிடிக்க வேண்டுமென்றால் தோழர்.O.மச்சக்காளை TM அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும். ஆனால் BSNLEU அன்று ஒத்துக்கொண்டதை இன்று மறுக்கிறது. நிர்வாகமும் தலையாட்டுகிறது.
வத்தலக்குண்டு கோட்ட்த்தில் Long Stayல் முதலாவதாக இருப்பவர் தோழர். பிச்சைக்கண்ணு TM. அவர் Sales Teamல் வேலை பார்க்கிறார். அவருக்கு மாற்றல் போடவில்லை, காரணம் கேட்டால்
அவருடைய Headquarters திண்டுக்கல் ஏனென்றால் அவருடைய JTO திண்டுக்கல்லில் இருக்கிறார் என்று சொல்கிறது BSNLEUவும் நிர்வாகமும்.
ஆனால் 26-06-14 அன்று வத்தலக்குண்டில் நடைபெற்ற வத்தலக்குண்டு கிளை மாநாட்டில் தோழர். பிச்சைக்கண்ணு TM. கிளைச் செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல்லில் பணிபுரிபவர் வத்தலக்குண்டு கிளையில் உறுப்பினராக இருக்கமுடியுமா? BSNLEU சங்க அமைப்பு விதி அனுமதிக்கிறதா? நிர்வாகமும் அனுமதிக்கும்?
இப்படி பொய்யும் புரட்டும் எத்தனை நாளைக்கு?


Wednesday, August 20, 2014

அநீதி களைய.. 
மாநிலச்செயலர் அறப்போர்.. 
  • மதுரை மாவட்டத்தில் கொடைக்கானல் மலைப்பகுதியில் டென்யூர் முடித்த 3 TM களுக்கு மாற்ற்ல் தர இழுத்தடிக்கும்  மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும்
  • மாற்றுச் சங்கத்திற்கு சாதகமாக தினம் ஒரு கொள்கையை உருவாக்கும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும்
  • உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பின்பு இரவு 10மணிக்கு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒத்துக்கொண்ட 2 TMகளின் மாற்றல் உத்தரவை மறுநாள் மறுக்கும்  மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும் 
  • மாற்றல் கொள்கை பற்றி  கருத்துக் கேட்பு கூட்டம் என்று சொல்லி அனைத்துச் சங்கங்களையும் அழைத்து கருத்து திணிப்பு கூட்டம் நடத்திய மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும்
  • பிரச்னையைத் தீர்ப்பதிற்குப் பதில் NFTE சங்கத்தை பழிவாங்க நினைக்கும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும்
  • கார்ப்பரேட் உத்தரவு, மாநில நிர்வாகத்தின் வழிகாட்டுதல் எதையும் மதியாத மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும்
  • மாநிலச் செயலரை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்யும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் 
மாநிலச்செயலர் தோழர்.பட்டாபி 28/08/2014 முதல் 

காலவரையற்ற  உண்ணாவிரதம் 

தோழர்களே... அநீதி களைந்திட.. அணி திரள்வீர்..