Saturday, January 26, 2013


அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்!

Thursday, January 24, 2013

பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பான அறிக்கையை நீதிபதி வர்மா தலைமையிலான குழு 23-01-2013 அன்று உள்துறை அமைச்சகத்திடம் அளித்துள்ளது.
அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
  • பாலியல் கொடுமைக்கு உடல்ரீதியாக ஆளாகும்போது தற்காப்புக்காக தடுக்கும் உரிமையை வழங்குவதற்காக இந்திய தண்டனைச் சட்டம் 100வது பிரிவில் திருத்தம் கொண்டுவர வேண்டும்.

  • பெண்களுக்கு எதிரான வன்முறையின்போது சட்டத்தை மீறுவோரையும் அதைத்தடுப்பதற்கு சட்ட ரீதியான கடமையை செய்யத் தவறிய அரசு அலுவலர்களுக்கும் அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை.

  • பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை.

Sunday, January 13, 2013


மார்கழிப் பெண் விடை பெற்று, தை மகளை வரவேற்கும் திருவிழாதான் பொங்கல்திருவிழா..
மார்கழி மாதத்தின் கடைசி நாளைத்தான் போகிப் பண்டிகையாக கொண்டாடுகிறோம். இந்த பண்டிகையின் பெயர் போக்கிப் பண்டிகை என்பதாகும். இது நாளடைவில் மருவி போகி என்றாகி விட்டது.
பழைய கழிதலும், புதியன புகுதலும் என்ற பழமொழியே போகியின் தத்துவம். வீட்டில் உள்ள தேவையற்ற பொருள்களை அப்புறப்படுத்தி, வீட்டை சுத்தப்படுத்தி அசுத்தங்களை போக்குவதால் அது போக்கிப் பண்டிகைஎன்றழைக்கப்படுகிறது.
அன்றைய தினம், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பது இதில் உள்ள தாத்பர்யமாகும்.

இதையொட்டியே பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகு படுத்துகிறார்கள். பொங்கல் சமயத்தில் வீடு புதுப் பொலிவுடன் காணப்படும். இது கிராமங்களில் பொங்கல் சமயத்தில் காணக் கிடைக்கும் இனியகாட்சியாகும்.
வீட்டின் வாசலில் மாக்கோலமிட்டு வாசலில் மாவிலை கட்டி பூஜைகள் செய்து இறைவனை வழிபடுவர். அது மட்டுமில்லாது, வீடுகளிலும் அரிசிக்கோலம், பெயிண்டுகளால் கோலமிட்டு அழகுபடுத்துவது தமிழர் பண்பாடு.

பொங்கல்பண்டிகை:
தை முதல் நாளன்று தைப் பொங்கல் அல்லது பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படும் பண்டிகை பொங்கலாகும்.
வீட்டில் சூரியக் கோலமிட்டு, மாவிலை தோரணங்கள் கட்டி வீட்டை அலங்கரிப்பார்கள்.
பொங்கலுக்கு தமிழர் திருநாள் என்பதைப் போல் உழவர் திருநாள் என்ற சிறப்புப் பெயரும் உண்டு. உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்பதற்கேற்ப, உழவர் திருநாள் கொண்டாடப்படுகிறது.
உழவர்கள் இந்தப் பண்டிகையை சிற்பாக கொண்டாடுவார்கள். வருடம் முழுவதும் வயலில் வியர்வை சிந்த உழைத்த உழவர்கள் பகலவனுக்கு நன்றிதெரிவிக்கும் விதமாக இந்த பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.
தை பிறந்தால் வழி பிறக்கும் இது ஆன்றோர் வாக்கு. தை திருநாளில் இது வரை இருந்து வந்த துன்பங்கள் நீங்கி நல்வழி பிறக்கும் என்றநம்பிக்கையோடு இந்த பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

Tuesday, January 8, 2013

தோழர் குப்தா இயற்கையுடன் கலந்தார்.

மகத்தான மனிதன் காலத்தால் அழியாத காவிய மகன் உடல் தகனம் செய்யப்பட்டது. இடுகாட்டிற்கு அவரது பூதவுடலை அவரது மகன்கள் சலீல்,கபில் மற்றும் குடும்பத்தார் வேனில் எடுத்து வந்தனர்.

இராணுவ அதிகாரிகளும் இறுதி மரியாதை செலுத்திட வந்திருந்தனர்.

தொழிற்சங்க தலைவர்கள் சந்தேஷ்வர் சிங், நம்பூதிரி, அபிமன்யூ, ஜெயபிரகாஷ், துவா, ராஜ்பால், கோயல், சித்ரபாசு, எம்.பி.சிங், சுரேஷ்குமார்,கோலி, பக்‌ஷி, ஆர்.கே, பட்டாபி, அஞ்சல் தலைவர்கள் மற்றும் டெல்லி தோழர்கள் மயானத்தில் உறவினர்களுடன் கூடியிருந்தனர். தோழர். குப்தாவின் உடலுக்கு உறவினர்களுக்கு அடுத்து மலரஞ்சலிதனை செய்தனர்.

தமிழகத்திலிருந்து மயானத்திற்கு வந்திருந்த தோழர்கள் ரத்னா, என்.கே, வீரராகவன், பாட்சா ஆகியோர் மாலை அணிவித்து வணங்கினர்.

உடல் எரியூட்டப்பட்டபின்னர் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. தோழர்கள் சந்தேஷ்வர் சிங், நம்பூதிரி, அபிமன்யூ, ஆர்.கே, பட்டாபி, ஜெயபிரகாஷ், பக்‌ஷி, சுரேஷ்குமார் மற்றும் அஞ்சல் தலைவர்கள் குப்தாவின் மகத்தான வாழ்வுதனை நினைவு கூர்ந்து, அவரது சிறந்த பண்புகளை தொடர்ந்து கடைப்பிடிக்க உறுதி கூறினர்.

பின்னர் சம்மேளன அலுவலகத்தில் தலைவர்கள்  சந்தேஷ்வர் சிங், துவா, மதிவாணன், சித்ரபாசு, ஜெயராமன், ஆர்.கே, பட்டாபி கூடினர். குப்தா பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்ட புகைப்படங்களை சம்மேளன அலுவலகப் பணியாளர்கள் எடுத்து வைத்து துக்கத்தை பகிர்ந்துகொண்டனர்.

டெல்லியில் வருகிற 15 அன்று மத்திய, பொதுத்துறை, மத்திய சங்க தலைவர்கள் மற்றும் தோழர்கள் பங்கேற்கும் மாபெரும் அஞ்சலி நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அனைத்து சங்க தலைவர்கள் திரண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர். சென்னையில் தோழர்கள் முத்தியாலு, முரளி, ஆறுமுகம், மனோஜ், விஜயகுமார்,  வள்ளிநாயகம், லிங்கமூர்த்தி, கிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன், நடராஜன், சோமசுந்தரம், பரிமளாஜெகன், ஏ.டி.ஆர், சிவா மற்றும் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செய்தனர்.

Monday, January 7, 2013

மறைந்த தோழர். குப்தாவின்  உடல் இன்று (07-01-2013) காலை 11 மணிக்கு டெல்லியில் தகனம் செய்யப்பட்டது.
அதன்பின் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில்
NFTE பொதுச் செயலர் சந்தேஷ்வர் சிங், ஆர்.கே,
தமிழ் மாநிலச்செயலர் பட்டாபி,

BSNLEU தலைவர் நம்பூதிரி, பொதுச்செயலர் அபிமன்யூ,
FNTO பொதுச்செயலர் ஜெயப்பிரகாஷ் ,
BSNLMS பொதுச்செயலர் சுரேஷ்குமார்,
Joint Forum தலைவர் M.K.பக்‌ஷி,
ஆகியோர் பங்கேற்றனர்.

Sunday, January 6, 2013

 தோழர். O.P.குப்தா காலமானார்.

சிறு குழுக்களாக சிதறிக்கிடந்த தபால் தந்தி ஊழியர்களை ஒன்றிணைத்து UPTW-NFPTE ஆகிய மாபெரும் இயக்கத்தை உருவாக்கிய ஒப்பற்ற தொழிற்சங்க மேதை.
இந்திய தொழிற்சங்க வரலாற்றில் ஒரு மைல்கல்.

தொலைபேசிதுறை தொழிற்சங்கத்தில் ஒரு சகாப்தம்.

தன் வாழ்க்கையை தொழிலாளர்களுக்காக அர்ப்பணித்த ஒப்பற்ற தொழிற்சங்க தலைவன்

Friday, January 4, 2013


6வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நாள் : 16-04-2013

ஓட்டு எண்ணிக்கை : 18-04-2013

முடிவு அறிவிக்கப்படும் நாள் :  18-04-2013


பணியைத் துவக்குவோம். வெற்றி பெறுவோம்.


இழந்த போனஸ்

நேரடி BSNL நியமன ஊழியருக்கான ஓய்வூதியம்

கருணை அடிப்படையிலான நியமனம்

பெண் ஊழியர்களுக்கு குழந்தை பராமரிப்பு விடுமுறை

பெண் ஊழியர்களுக்கு மாதத்திற்கு ஒரு நாள் சிறப்பு விடுப்பு

ஆகிய கோரிக்கைகளை வென்றெடுக்க  மத்திய சங்கம் முழு முயற்சி எடுத்து வருகிறது.

மத்திய சங்கத்தை வலுப்படுத்த தேர்தல் களத்தில்

பணியைத் துவக்குவோம். வெற்றி பெறுவோம்.

Tuesday, January 1, 2013

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்