Wednesday, September 30, 2015

வெற்றி வாகை சூடிய தோழர்களுக்கு வாழ்த்துக்கள் 
================================================
29/09/2015 அன்று நடைபெற்ற புதுவை மாவட்ட மாநாட்டில்  
புதிய நிர்வாகிகள் தேர்வில் கருத்தொற்றுமை ஏற்படாத
காரணத்தால் ஜனநாயக வழியில் தேர்தல் நடைபெற்றது. 

“முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும் 

படுபயனும் பார்த்துச் செயல்
 

எனும் வள்ளுவரின் வாக்கிற்கிணங்க செயல்பட்டு வரும் தோழர்.P.காமராஜ்
அவர்களின் தலைமை ஏற்று தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தோழர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.

மாவட்டத்தலைவர் : தோழர்.தண்டபாணி 
மாவட்டச்செயலர்   : தோழர்.செல்வரங்கன் 
மாவட்டப்பொருளர் : தோழர்.தேவதாஸ் 

ஆகியோர் தலைமையிலான  புதிய நிர்வாகிகள்
சிறப்புடன் செயல்பட  நமது வாழ்த்துக்கள்.

துணைநலம் ஆக்கம் த்ருஉம் வினைநலம் 
வேண்டிய எல்லாந் தரும்.”- குறள்.


Thursday, September 3, 2015

அஞ்சலி
நெல்லை NFTE மாவட்டத்தலைவர் தோழர்.பாபநாசம் அவர்களின் துணைவியார் உடல் நலக்குறைவால் இன்று இயற்கை எய்தினார். நமது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகின்றோம்.

Tuesday, September 1, 2015

AITUC 
CITU - INTUC 
BMS - HMS -  SEWA -LPF 
AIUTUC  -TUCC - AICCTU - UTUC 
===============================
11 மத்திய சங்கங்களின் 
12 அம்சக் கோரிக்கைகள் 
=================================
மத்திய அரசே...
  1. குறைந்தபட்சக்கூலி மாதம் ரூ.15000/= வழங்கு..
  2. குறைந்தபட்ச  ஓய்வூதியம் மாதம் ரூ.3000/= வழங்கு..
  3. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்து...
  4. வேலையில்லாக் கொடுமையை மட்டுப்படுத்து...
  5. பொதுத்துறை பங்கு விற்பனையைக் கைவிடு..
  6. நிரந்தரப்பணிகளில் குத்தகை  ஊழியர்  முறையை ரத்து செய்.. 
  7. போனஸ், பணிக்கொடை மற்றும் வைப்பு நிதி உச்சவரம்பை உயர்த்து...
  8. அனைத்து தொழிலாளருக்கும் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்..
  9. நடைமுறையில் உள்ள தொழிலாளர் சட்டங்களை  உறுதியாக அமுல்படுத்து... எவருக்கும் சட்ட விலக்கு அளிக்காதே..
  10. தொழிற்சங்கப் பதிவு உரிமைகளை நடைமுறைப்படுத்து..
  11.  தொழிலாளர் நலச்சட்டங்களில் தொழிலாளருக்கு எதிரான மாற்றங்களைச் செய்யாதே..
  12. இரயில்வே... ஆயுள் காப்பீடு மற்றும் இராணுவத்துறைகளில் அந்நிய முதலீட்டை அனுமதிக்காதே..

=============================================
NFTE 
BSNLEU - BTEU - FNTO 
BSNLMS - SEWA BSNL -TEPU 
NFTBE - BTUBSNL - SNATTA -BSNLOA 
=================================
BSNL  நிறுவன 
11 ஊழியர் சங்கங்களின்
10 அம்சக்கோரிக்கைகள்...
=================================

 மத்திய அரசே... BSNL நிர்வாகமே...
  1. BSNLலில்  தனியார் நுழைவு மற்றும் பங்கு விற்பனையைக் கைவிடு...
  2. செல் கோபுரங்களைத் தனியாகப் பிரிக்கும் முடிவைக் கைவிடு...
  3. BSNL வளர்ச்சிக்கான கருவிகள் வாங்க உரிய நிதி உதவி செய்..
  4. BSNL உடன் BBNL நிறுவனத்தை இணைத்திடு...   MTNLநிறுவனத்தை இணைக்காதே..
  5. ஊழியர் விரோத DELOITTEE குழு பரிந்துரைகளை அமுல்படுத்தாதே...
  6. BSNLலில் விருப்ப ஓய்வை அமுல்படுத்தாதே...
  7. அலைக்கற்றைக்கட்டணம்  ரூ.4700/= கோடியை உடனடியாகத் திருப்பி வழங்கு..
  8. அனைத்து சொத்துக்களையும் BSNL பெயரில் மாற்றல் செய்..
  9. இலாபம் இல்லாவிடினும் குறைந்தபட்ச போனஸ் வழங்கு...
  10. BSNL நேரடி நியமன ஊழியர்களுக்கு 30 சத ஓய்வூதியப்பலன்கள் வழங்கு...

மத்திய அரசிற்கு 11 மத்திய சங்கங்களும் 
இணைந்து போராட்ட அறிவிப்புக் கொடுத்துள்ளன..
நமது நிறுவனத்தில் 10 சங்கங்கள் இணைந்தும் 
FNTO சங்கம் 14/08/2015 அன்று தனியாகவும் 
போராட்ட அறிவிப்பு செய்துள்ளன...

தோழர்களே...
ஆண்டுகள் 68 உருண்டோடியும்...
அல்லல் வாழ்வு அகன்றபாடில்லை...

நாம்...
வீதிகளில் இறங்கினால் மட்டுமே..
விதிகளை  உருவாக்கலாம்... 

நாம்...
வீதிகளில் இறங்கினால் மட்டுமே...
விதிகளைக் காக்கலாம்...

நாம்...
வீதிகளில் இறங்கினால் மட்டுமே..
விதிகளை  மாற்றலாம்... 

நாம்...
வீதிகளில் இறங்கினால் மட்டுமே...
நாட்டைக்காக்கலாம்...
நம்மையும் காக்கலாம்...

புதிய விதி சமைக்க...
புதிய தேசம் படைக்க..
புதிய களம் காண்போம் தோழர்களே...
29-08-2015 அன்று மாநிலத் தலைவர் தோழர். லட்சம் அவர்களுக்கு நடைபெற்ற பணி நிறைவு பாராட்டு விழா காட்சிகள்.

விழா நாயகன் மேடைக்கு வருகிறார்.
மேடையில் விழாவிற்கு தலைமையேற்ற கம்பம் துணைக்கோட்டப் பொறியாளர்கள் திரு. R.முத்துச்சாமி மற்றும் M.பாஸ்கரன்.
வந்தோரை வரவேற்கும் விழா நாயகன்

விழாவினை ஒருங்கிணைக்கும்  தோழர். K.முருகேசன்

விழாவினை துவக்கி வைத்த தோழர். குடந்தை ஜெயபால்

மேடையில் கம்பம் MLA திரு. ராமகிருஷ்ணன், தோழர்.லட்சம், அவரின் மனைவி திருமதி.மல்லிகா, மாநிலச் செயலர் தோழர். பட்டாபி, போடி SDE திரு. ராமசாமி, குடந்தை ஜெயபால்

கம்பம் MLA திரு. ராமகிருஷ்ணன் அவர்கள் தோழர். லட்சம் அவர்களுக்கு சால்வை அணிவிக்கிறார்.



கம்பம் MLA திரு. ராமகிருஷ்ணன் அவர்களின் பாராட்டுரை 


மாநிலச் செயலர் தோழர்.பட்டாபி நினைவு பரிசு வழங்குகிறார்.





மாநிலச் செயலர் தோழர்.பட்டாபி அவர்களின் பாராட்டுரை


வாழ்த்துரை வழங்கிவிட்டு அமர்ந்திருக்கும் தோழர்கள். தமிழ்மணி, விசயரங்கன் மற்றும் தோழர். சேது