Friday, June 28, 2013


தமிழக மீனவர்களுக்காக, இலங்கை தமிழர்களுக்காக நாடாளுமன்ற மேலவையில்  தொடர்ந்து போராடும்   தோழர். து.ராஜா மீண்டும் மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அவரது மக்கள் சேவை தொடர்ந்திட வாழ்த்துகிறோம்.
 
மாநிலச் செயற்குழு படங்கள்

Thursday, June 27, 2013

பயனுள்ள,ஆக்கபூர்வமான  மாநிலச்  செயற்குழு

தமிழ் மாநிலச்சங்கத்தின்  செயற்குழு  வேலூரில்  25.06.2013 காலை  10.30  மணிக்கு  மாநிலத்தலைவர்  தோழர்.நூருல்லா தலைமையில்  துவங்கியது. 
தேசியக் கொடியை தோழர். தமிழ்மணியும், சம்மேளனக் கொடியை தோழர். மதியழகனும் விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே ஏற்றி வைத்தனர்.
வேலூர் மாவட்டச் செயலர் அல்லிராஜாவும், மாநிலத் துணைச்செயலர் தோழர். சென்னகேசவனும் வரவேற்புரை நிகழ்த்த, தோழர்.லோகநாதன் அஞ்சலியுரை நிகழ்த்தினார். அதன்பின் ஆய்படுபொருள்  ஏற்புக்கு வைக்கப்பட்ட  பின்,  ஏற்கப்பட்ட ஆய்படு பொருளினைப்பற்றி மாநிலச்செயலர்   சுருக்கமாக  விளக்கி  விவாதத்தினை துவக்கிவைத்தார்.  உடனடியாக  சில  தோழர்கள்  எழுந்து  ஓய்வு பெற்றவர்கள்  தொழிற்சங்க  பதவிகளில்  இருக்கக்கூடாது  என்று  கூறி,  சிறப்பு  பிரதிநிதிகளாக  மதுரை  மாநாட்டில்  தேர்வு  செய்யப்பட்ட தோழர்கள்  சேது,  ஜெயபால்  ஆகியோரை  உடனடியாக  பதவி  நீக்கம் செய்தாக வேண்டும்  என்று  வலியுறுத்தி  கண்டன  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  அதனைப்பற்றி  அமைப்பு நிலையில்  விவாதிக்கலாம்  என்று  தலைவரும்  மாநிலச்செயலரும்  கூறிய  பின்னரும்  இது தொடர்ந்தது.  அதன்  பின்னர்  தோழர்  செல்வசுப்ரமணியம்  பேசினார். திரும்பவும்  சிறப்பு பிரதிநிதிகள்  பிரச்னையை  எழுப்பி  பணி ஓய்வுபெற்ற  இருவரை  அப்போதே  பதவி  நீக்கம்  செய்ய வேண்டி  13 தோழர்கள்  வெளிநடப்பு  செய்தனர்.  அவர்களை  உள்ளே  வருமாறு அழைக்கச்சென்ற  குழுவிடம் மேலும்  சிலரை  சிறப்பு பிரதிநிதிகளாக சேர்த்தால்  தாங்கள்  உள்ளே  வருவதாக  ஒரு  சிலர் கூறினர்.அதனை மாநிலச் செயற்குழு நிச்சயமாக பரிசீலிக்கும் என தெரிவித்த பின்னர்  திடீரென  வந்த  ஒரு தொலைபேசி அழைப்புக்குப்பின் அந்த 13 தோழர்களும் மதியம் 1.30 மணிக்கு  மண்டபத்தை  விட்டு  சென்றுவிட்டனர்.

அதன் பின்,  தடையின்றி  ஆய்படு  பொருளினை ஒட்டிய  விவாதம் தொடர்ந்தது. நடந்து  முடிந்த ஆறாவது  உறுப்பினர்  சரிபார்ப்பு தேர்தல்,ஜூன்  12  வேலை  நிறுத்தம், 78.2 சத கிராக்கிப்படி இணைப்பு, 2007 -க்குப்பின்  பணியில் சேர்ந்த  ஊழியருக்கு அதன் பலனை கிடைக்கச்செய்வது,  கிராக்கிப்படி இணைப்பினால் எழுந்துள்ள ஊதியத்தில்  தேக்கம், 78.2-  ஒய்வூதியர்களுக்கும் விஸ்தரித்து உத்தரவுமாநிலக்கவுன்சில்,  மாவட்டக்கவுன்சில் நியமனங்கள்,  JTO தேர்வில்  பாட வரையறைக்கு  வெளியிலிருந்து கேள்விகள்,  சேலம்,ஈரோடு,  மதுரை  ஆகிய  மாவட்டங்களின் TTA தேர்வு  முடிவுகள்,  BSNL / MTNL மீதான  அமைச்சர்கள் குழுபோனஸ்மகளிர் பிரச்ச்னைகள்அலவன்சுகள்,  அமைப்பு  விதிகளுக்கு  முரணாக  மாநிலத்தில் வெளியிடப்படும் சுற்றறிக்கைகள்,  வலைதள அவதூறுமாநிலச்செயலர்  கிளையின் ex-officio delegate என்பதை மறந்து அவருக்கு அறிவிப்போ  தகவலோ  இன்றி  கிளை  மாநாடுகளை நடத்தும்  போக்கு  ஆகியன  பற்றி  நீண்ட  விவாதங்களுக்குப் பின் தீர்மானங்கள்  இயற்றப்பட்டன.
மாலையில்,  மேல்மட்டச்செய்திகளையும்ஜூன்  12 வேலைநிறுத்த அறிவிப்பு,  அதன் மீதான  தீர்வு, 78.2% IDA இணைப்பு  ஆகியன பற்றி விரிவாகப்பேசுவார்  என  பெரிதும்  எதிர்பார்க்கப்பட்ட சம்மேளனச்செயலர்  தோழர்  ஜெயராமன் கடலூர்  மாவட்ட பிரச்னைகளை  மட்டுமே  பேசினார்.  கடலூர்  மாவட்ட  மாநாட்டை ஒட்டி  எழுந்துள்ள  பிரச்னைகளை  ஆய்வு  செய்ய  மாநிலச்சங்கம் ஒரு ஆய்வுக்குழு  அமைக்க  வேண்டும்  என்று  கூறி  அவர்  உரையினை முடித்துக்கொண்டார்.

மாநிலச் செயற்குழுவில் மதுரை மாநில மாநாட்டின் வரவு செலவு கணக்குகள் ஒப்படைக்கப்பட்டது. மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்திட உதவிய அனைத்து மாவட்டச் செயலர்களுக்கும், மாநிலச் செயலர், சம்மேளனச் செயலர், தோழர்கள் ஜெயபால், தமிழ்மணி, கோபாலகிருஷ்ணன் ஆகியோருக்கும் மதுரை மாவட்டச் சங்கத்தின் சார்பாக தோழர்கள் ராஜகோபால், லட்சம், விஜயரங்கன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கெளரவித்தனர்
இரவு  9.15  வரை  மாநில  செயற்குழு  நடைபெற்று  வெற்றிகரமாக முடிந்தது. 


  • வெளிநடப்பு  செய்த  13  செயற்குழு  உறுப்பினர்களை தேனீர்  அருந்துமாறும்,  உணவருந்துமாறும்  பல  முறை மாநிலச் சங்கமும்,வேலூர்  மாவட்டத் தோழர்களும்  வேண்டிக் கேட்டுக்கொண்டும் அவர்கள்  தேனீரோ,  உணவோ  அருந்தாமல் மறுத்துவிட்டனர். வெளிநடப்புக்குப்பின்  சுமார்  மணி  நேரம் மேடையில் இருந்த  சம்மேளனச்செயலரும்  இதையே  செய்தார். அவருக்கு பலமுறை  மோர்  தந்தும்  அருந்த மறுத்துவிட்டார். 
  • தோழர்  ஜெகனின்  கொள்கைப்படியே  தோழர்  பட்டாபி  மோர் உட்பட எதையும்  உட்கொள்ளாமல்  மாநிலச் செயற்குழு முடியும் வரையில் உண்ணாவிரதமிருந்தார்.

Thursday, June 13, 2013

78.2% IDA  01-01-2007 முதல் அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்பட்டாலும் HRA, Skill upgradation allowance,Medical allowance for outdoor treatment with voucher and etc. 68.8% IDA இணைப்பு அடிப்படையில் தான் வழங்கப்படும் என BSNL நிர்வாகம் இன்று உத்தரவு வெளியிட்டுள்ளது.
உத்தரவு நகல்: சொடுக்கவும்
 

 Joint Forum தலைவர்களிடம் உறுதியளித்தபடி பிரச்னைகளை தீர்த்து வைத்த GM அவர்களுக்கு நன்றி. 

Tuesday, June 11, 2013

அங்கீகாரம் பெற்ற பின் தலைமையேற்று நடைபெற்ற கூட்டுப் போராட்டத்தின்
முதல் வெற்றி
78.2% IDA இணைப்புக்கான உத்தரவை BSNL நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது. 

ஒவ்வொரு பிரச்னையிலும் சாதாரண தொழிலாளியின் உணர்வுகளை பிரதிபலித்து மத்திய சங்கத்திற்கு வழிகாட்டும் மாநிலச் செயலரின் அறிவாற்றலை தொழிலாளர்கள் தெரிந்துதான் மதுரை மாநாட்டில் தேர்ந்தெடுத்தோம். 
எத்தனை தரந்தாழ்ந்த விமர்சனங்கள் வந்தாலும், தான் கற்ற மார்க்சிய கொள்கை அடிப்படையில் தொழிலாளி நலனுக்காக தங்கக்காசு/வெள்ளிக்காசு என எதையும் எதிர்பார்க்காமல் தோழர் குப்தா/ஜெகன் ஆகியோரை மனதில் இருத்தி தொழிற்சங்கப் பணியாற்றும் தோழனே! பட்டாபியே!! உன் சேவை தொடரட்டும். 

மதுரையில் தோழர்.வெங்கடாசலம் SDE அவர்களுக்கு ஒட்டன்சத்திரம் மாறுதல் போடப்பட்டது. SNEA மாவட்டச் சங்கம்  10-06-2013 அன்று மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் என போராட்ட அறிவிப்பு கொடுத்தது. அனைத்துச் சங்க மாவட்டச் செயலர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
Forum of BSNL Unions/Associations சார்பாக NFTE மாவட்டச் செயலர், BSNLEU மாவட்டச் செயலர், AIBSNLEA மாவட்டச் செயலர் ஆகியோர் காலை 11 மணிக்கு நிர்வாகத்தைச் சந்தித்து  தோழர்.வெங்கடாசலம் SDE அவர்களின் மாற்றலை ரத்து செய்து மாவட்டத்தில் சுமுகமான நிலையை உருவாக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். நீண்ட நெடிய விவாதத்திற்குப்பின் CGM அவர்களிடம் ஒப்புதல் பெற்ற பின்      19-06-2013க்குள் மாற்றல் உத்தரவை ரத்து செய்வதாக உறுதியளித்தார். 
தோழியர். ஜெயலட்சுமி SDE அவர்களின் CCL ஒப்புதல் வழங்கப்படும் எனவும் அவர்களுக்கு போடப்பட்ட மாற்றல் உத்தரவை ரத்து செய்யவும் உறுதியளித்தார்.

இத்தகவலை SNEA சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்தோம். 
மதிய உணவு இடைவேளையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்துச் சங்க மாவட்டச் செயலர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசினர்.