Friday, August 28, 2015


31-08-2015 அன்று பணி ஓய்வு பெறும் 
தோழர். M.லட்சம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
நமது மதிப்பிற்குரிய மாநிலத்தலைவர்  தோழர் M. லட்சம் அவர்கள்  வரும் 31-08-2015 அன்று பணி ஓய்வு பெறுகிறார். அவரைப் பற்றிய சிறு குறிப்பு....

மதுரை நாகமலை புதுக்கோட்டை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்து முதுகலை பட்டப்படிப்பில் சேர்ந்து படித்துக் கொண்டிருக்கும்போது அவரது மூத்த சகோதரரின் முயற்சியால் சென்னை ITC கம்பெனியில் எழுத்தர் பணி கிடைத்ததும் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு பணியில் சேர்ந்தார்.

சுமார் 3 ஆண்டுகளுக்குப்பின் 1983 ஜனவரி18-ல் தபால் தந்தி துறையில் அன்றைய தமிழ்நாடு வட்டம், செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் தொலைபேசி நிலையத்தில் டெலிபோன் ஆபரேட்டராக பணியில் சேர்ந்தார்.
பணியில் சேர்ந்த நாளிலிருந்து தொழிற்சங்க பணியில் தன்னை இணைத்துக் கொண்டவர். கிளைச் செயலராக பொறுப்பேற்று திறம்பட செயலாற்றியவர். தோழர். காமராஜ் மீதான தாக்குதல், தோழர்கள் NK,SSK மீதான காவல்துறையில் பொய் புகார், காஞ்சி கோட்டச் செயலர் சங்கரன் மீதான காவல்துறை பிரச்னைகளை வென்றெடுக்க முன்நின்றவர்.

அதன்பின்பு மதுரை தொலைதொடர்பு மாவட்டத்தில் தனது சொந்த ஊருக்கு அருகிலுள்ள கம்பத்திற்கு மாற்றலாகி பணியில் சேர்ந்தார். மதுரை மாவட்டத்தில் கம்பம் கிளைச் செயலர், தொடர்ந்து மாவட்டச் சங்க நிர்வாகி, LJCM உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளை ஏற்று திறம்பட பணியாற்றியவர். 2005ல் கோவையில் நடந்த தமிழ் மாநில மாநாட்டில் மாநிலச் சங்கத்தில் அமைப்புச் செயலராக பொறுப்பேற்று இன்று NFTE  என்ற மாபெரும் இயக்கத்தின் மாநிலத் தலைவராக மாண்போடு செயலாற்றி வருகிறார். அவரது செயல்பாட்டில் என்றைக்குமே ஊனம் தடையாக இருந்ததில்லை.

இலாகாவில் டெலிபோன் ஆபரேட்டர், DE அலுவலக எழுத்தர், இன்றுவரை டெலிபோன் பில் கவுண்டர் கிளார்க் என எந்தப் பணியென்றாலும் சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறார்.

தொழிற்சங்கத்தில் மட்டுமல்ல அவரது  சொந்த ஊரான கே.கே.பட்டியில் நகர் நலக்கமிட்டியின் செயலாளராகவும் சமுதாயக் கமிட்டியின் செயலாளராகவும் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். பல்வேறு பிரச்னைகளுக்கு சொந்த பந்தங்களுக்கு அப்பாற்பட்டு நியாயமான, சுமூகமான தீர்வை சொல்பவர் என்ற நற்பெயரும் அவருக்கு உண்டு. திராவிட கொள்கைகளில் அழுத்தமான பார்வை கொண்டவர்.

தி.மு.கவின் தீவிரமான  தொண்டர் என்றபோதிலும் மற்ற கட்சியினரிடமும் கனிவாக பழகக் கூடியவர். தனது கட்சி சார்பாக தனி தொழிற்சங்கம் துவக்கப்பட்டபோதிலும் தனது இறுதிநாள்வரை NFTE இயக்கத்தில் தான் பணியாற்றுவேன் என தனது கட்சித் தலைவர்களிடம் ஆணித்தரமாக கூறியவர். அத்தகைய மனிதநேயமிக்க மாநிலத் தலைவர் தோழர். லட்சம் வரும் 31.08.2015 அன்று இலாகா பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.

அவரது தொழிற்சங்க செயல்பாட்டிற்கும் பொதுச் சேவைக்கும் உறுதுணையாக நின்றவர்கள் அவரது மனைவியும் 2குழந்தைகளும். மூத்த பெண் சூர்யாவிற்கு திருமணம் முடிந்து விட்டது. அவரது கணவர் சந்திரசேகர் சென்னையில் சாப்ட்வேர் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். ஒரு பெண் குழந்தை உள்ளது. அவரது இளைய மகன் ரவிவர்மா டிப்ளமோ படிப்பை முடித்துவிட்டு உரக்கடை நடத்தி வருகிறார்.

அவரது தொழிற்சங்க பணியும் பொதுச் சேவையும் தொடர வாழ்த்துக்கள்.....



Tuesday, August 25, 2015

TTA இலாகா போட்டித்தேர்வு முடிவுகள் 

07/06/2015 அன்று நடைபெற்ற TTA இலாக்கா போட்டித்தேர்வு முடிவுகள்  வெளியிடப்பட்டுள்ளன. 

தமிழகத்தில் உள்ள  439 காலியிடங்களுக்கு 74 தோழர்கள் மட்டுமே தேர்வு பெற்றுள்ளனர். இரண்டு தோழர்களின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மதுரை மாவட்டத்தில் தேர்ச்சி பெற்றுள்ள கீழ்க்கண்ட 
தோழர்களை வாழ்த்துகின்றோம்.

P.நாகநாதன்@ நாகு, TM,99400657,போடிநாயக்கனூர்
Pநாராயணன் TM, 99600155,ஒட்டன்சத்திரம்
R.துரைமாரியப்பா,TM,20000226,ஆண்டிபட்டி 
T.ராஜேந்திரன்,TM,99500534,சின்னாளபட்டி
R.சேகர்,TM,99415435,சின்னமனூர்.

Monday, August 17, 2015


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர். சுதாகர் ரெட்டி  AITUC செயலாளர் தோழர். தார் அவர்களுடன் நமது ஒருங்கிணைப்பாளர் தோழர். சேது 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர். ஏ.பி. பரதன் மற்றும் AITUC செயலாளர் தோழர். தார் அவர்களுடன் நமது தலைவர்கள்  சேது, பட்டாபி, SSG, காமராஜ் ஆகியோர் 






மாநிலச்செயலர்கள்  கூட்ட முடிவுகள்

நமது NFTE  சங்கத்தின் மாநிலச்செயலர்கள் கூட்டம்  டெல்லியில் ஆகஸ்ட் 10 மற்றும் 11 தேதிகளில் நடைபெற்றது. கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

Ø  தேசம் முழுவதுமுள்ள BSNL  செல் கோபுரங்களைத் தனியாகப் பிரித்து புதிய துணை நிறுவனம் ஏற்படுத்த முயற்சிக்கும்  அரசின் மோசமான முடிவை எதிர்த்து அனைத்து சங்கங்களையும் ஒன்றிணைத்து  போராட்டக்களம் காண மத்திய சங்கம் முழு முயற்சி செய்ய வேண்டும்.

Ø  BSNL நிறுவனத்தை சீர்குலைக்கும் மற்றொரு முயற்சியாக  நமது அகன்ற அலைவரிசை இணைப்புகளில் உருவாகும் பழுதுகளை நீக்கும் பணியை சில குறிப்பிட்ட மாநிலங்களிலும், மாவட்டங்களிலும் தனியாருக்கு விடுவதற்கு எத்தனிக்கும் நிர்வாகம் தனது ஊழியர்கள் மீது நம்பிக்கை வைத்து மேற்கண்ட மோசமான முடிவைக் கைவிட வேண்டும்.

Ø  DELOITTEE  குழு பரிந்துரையின் பாதகங்களை மாநிலச்செயலர்கள்  கூட்டம் விரிவாக விவாதித்தது.  DELOITTEE  குழு பரிந்துரை அமுலாக்கத்தில்  எந்தவொரு இறுதி முடிவு எடுப்பதற்கும்   முன்பு சங்கங்களைக் கலந்து ஆலோசித்து ஒருமித்த கருத்து ஏற்பட்ட பின்னரே முடிவுகளை அமுலாக்க வேண்டும்.

Ø  உற்பத்தியோடு இணைந்த போனஸ் வழங்கும் விவகாரத்தில் தற்போதைய போனஸ் குழுவின் செயல்பாடுகளை மாநிலச்செயலர்கள் கூட்டம் பாராட்டுகிறது. வரும் தீபாவளிக்குள் சாதகமான முடிவு எட்டப்பட வேண்டும். அவ்வாறு எட்டப்படாத பட்சத்தில் மத்திய சங்கம்  போராட்ட அறிவிப்பு செய்திட வேண்டும்.

Ø  ஊழியர்கள் பெயர் மாற்றக்குழுவின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியது. அதே நேரம் அதிருப்திக்கு ஆளான SR.TOA தோழர்களின் பெயர் மாற்றம் மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும். NE-10ல் உள்ள தோழர்கள்  என்றும், NE-9ல் உள்ள தோழர்கள் உதவிக் கண்காணிப்பாளர்கள் என்றும் அழைக்கப்பட வேண்டும்.

Ø  இந்தியத் தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிராகச் செயல்படும் மத்திய அரசின் மோசமான தொழிலாளர் விரோதக் கொள்கைகளை எதிர்த்து செப்டம்பர் 2ல் நாடு முழுக்க நடைபெறவுள்ள அகில இந்திய வேலை நிறுத்தத்தில் NFTE முழுமையான பங்கு பெற வேண்டும்.