Friday, January 31, 2014

விருதுநகர் மாவட்டச் சங்கத்தில் போட்டி தவிர்க்கப்பட்டு ஒருமனதாக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

என்ன கொடுத்தும் ஒற்றுமை
என்னைக் கொடுத்தும் ஒற்றுமை 
என்று சொன்ன குப்தாவின் வழியில்
ஒற்றுமையைக் கட்டிய தோழர்களே!
வீர வணக்கம்!!
”உம்முடைய உறவை துண்டித்து வாழ்பவனுடன் நீ சேர்ந்து வாழு. உமக்கு அநீதம் இழைத்தவனை மன்னித்து விடும்”
    நபிகள் பொன்மொழி(44)
கட்டுப்ப்டாதவர்களைக் கண்டித்து
கண்ணியம் காத்தவர்களை கட்டியணைத்து
சக்கணனும் ஜாபரும் இணைந்து பணியாற்ற
கட்டளையிட்டு ஒற்றுமைக்கு வழிகாட்டிய
தோழர்.வெ.அழகிரிசாமி Ex.M.P அவர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றியும் பாராட்டுக்களும்!

பட்டாசு 
பார்ப்போரை
பரவசப்படுத்தும்!

”குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வீரன் அல்ல. மாறாக, கோபம் வரும் போது தன்னைத்தானே அடக்கி கொள்பவனே வீரன் ஆவான்”.-நபிகள் பொன்மொழி(32)

எந்தச் சூழ்நிலையிலும்
குருவை விட்டுக் கொடுக்காத தோழனே!
நின் பணி சிறக்க வாழ்த்துகிறோம்!!

Monday, January 27, 2014

விருதுநகர் மாவட்ட மாநாடு

விருதுநகர் மாவட்ட மாநாடு 25/01/14 அன்று இராஜபாளையத்தில் மாவட்டத் தலைவர் தோழர்.M.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. 
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தோழர்கள் திட்டமிட்டுக்குவிந்ததால் இராஜபாளையம் மினி மதுரையாக  காட்சியளித்தது.

மாநிலச்செயலர் தோழர். பட்டாபி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தோழர்.லிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  தோழர்.அழகர்சாமி,
முன்னாள் சட்டமன்ற  உறுப்பினர் தோழர். இராமசாமி,

பொதுமேலாளர் திருமதி.இராஜம் மற்றும் அதிகாரிகள்

சம்மேளனச் செயலர் தோழர்.ஜெயராமன்,
மாநிலப் பொருளாளர் தோழர்.அசோக்ராஜ்,
மாநிலத் துணைச் செயலர் தோழர்.சுப்ப்ராயன்,
மதுரை மாவட்டச் செயலர் தோழர்.சிவகுருநாதன்
ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நிர்வாகிகள் தேர்வில் ஒருமித்த கருத்து உருவாக்கப்படாததால்
தேர்தலை சந்திப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. 

·        30/01/2014 அன்று புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் விருதுநகர் மாவட்டச் சங்க அலுவலகத்தில் நடைபெறும். 

·        மாநிலச் சங்க நிர்வாகிகள் தோழர்.மாரி(காரைக்குடி)  மற்றும்  தோழர். அசோக்ராஜ்(புதுச்சேரி)
ஆகியோர் தேர்தல் பொறுப்பாளர்களாக செயல்படுவார்கள்.

விறுவிறுப்பான காரம் நிறைந்த விருதுநகரில்.. 
ஊழியர்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து 
அவர்களை மகிழ்வித்திடும் மத்தாப்பாக..
கேளாச்செவியான நிர்வாகத்தின் செவிப்பறையைப்பிளந்திடும் 
சிவகாசிப்பட்டாசாக..
புதிய தலைமை.. வந்திட.. வென்றிட..
வாழ்த்துகின்றோம்..
 

Saturday, January 11, 2014

நிர்வாகத்தின் எதேச்சதிகாரப் போக்கைக் கண்டித்து போராடிய மதுரை அஞ்சல் பகுதி தோழர்களுக்கு மதுரை மாவட்டச் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களையும் வீரவணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.



ஒப்பற்ற 
லிக்திர் பொன்விழா 

வாள்  முனையினும் வலியது பேனா முனை
ஐம்பது ஆண்டுகள் தொழிலாளி வர்க்கத்தின் 
கூர்முனையாய் செயலாற்றிய 
ஒலிக்கதிரின் பொன்விழா 
களம் பல கண்ட கடலூரில் 
வந்தோர் திகைக்க வராதோர்  தகிக்க 
வந்தும் வராதோர் மனம் புகைக்க 
வரலாற்றுக் கல்வெட்டாய்  
வலிமையான முத்திரை பதித்துள்ளது..

FLEXIBLE செயல்பாடு .. 
FLEX FULL ஏற்பாடு.. 
என கடலூர் மாவட்டம் கலக்கிட..

மதுரை மண்ணின் பேர் காத்த
தொடக்கம் முதல் இறுதிவரை
ஓய்வறியா தலைமை

நமது சிந்தை நிறைந்த தந்தை 
தோழர்.குப்தாவிற்கு முதலாண்டு 
நினைவுப்புகழ் அஞ்சலி செலுத்திட..

மனித நேய மானுடன்
எரிதழலாய் துவக்கவுரையாற்றிட

இயக்கத்தின், ஒலிக்கதிரின்
வரலாறு,தியாகத் தலைவர்களை
நினைவு கூர்ந்து,தொடர்ந்து
இயக்கத்தை கட்டிக் காக்க
கட்டியங்கூறிய மாநிலச் செயலரின்
உணர்ச்சிமிகு உரை

சகோதர சங்கத்தலைவர்களும் 
சகல சங்கத்தலைவர்களும் 
முதன்மைப் பொதுமேலாளரும் 
இணைந்த கரங்களாய் வாழ்த்துரை வழங்கிட 

அகில இந்தியத்தலைவரும் 
அகில இந்தியபொதுச்செயலரும் 
பறந்து வந்து சிறப்புரை செய்திட..

தலைவர்களின் தலைவிகளுக்கு 
தக்க மரியாதை அளித்திட..

தஞ்சையும்.. குடந்தையும்..சேலமும்..
நாற்காலி என்னும் உடனடி உண்மை நாடகத்தில் 
அனைவரையும் கொள்ளை கொள்ள 

கவியரங்கத்தில் கவிஞர்கள் 
ஒலிக்கதிரின் மேன்மை சொல்ல..

கருத்தரங்கத்தில் 
ஒலிக்கதிரின் 50 ஆண்டு பணியை 
5 மணித்துளிகளில் தோழர்கள் 
கடுகைத்துளைத்து குறுகத்தரிக்க 

தமிழகத்தின் தலை சிறந்த பேச்சாளர் 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச்செயலர் 
தோழர். தா.பாண்டியன் அவர்கள் நிறைவுரையாற்ற 

இடை இல்லா நிகழ்ச்சிகளோடு..
நீங்கா நினைவுகளோடு.. 
நெஞ்சம் நிறைத்தது.. 
ஒலிக்கதிர் பொன்விழா மாநாடு.. 

ஒலிக்கதிரின் வீச்சும்.. 
பொன்விழா பற்றிய பேச்சும்.. 
நீண்ட நாள் ஓங்கி ஒலித்திடும்..
 
 

Sunday, January 5, 2014

ஜனவரி 6  ஒலிக்கதிர் பொன்விழா

கடலூரில் திரள்வோம்! 

தொழிற்சங்க பிதாமகன் நினைவோடு!