Sunday, April 28, 2013


மதுரை சொசைட்டி தேர்தல் 27-04-2013 அன்று நடைபெற்றது.
மொத்த வாக்காளர்கள்: 1642
பதிவான வாக்குகள்:1134

விருதுநகர்,காரைக்குடி, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம்,திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலிருந்தும் உறுப்பினர்கள் வந்து வாக்களித்தனர்.
அதற்கு உதவிய அனைத்து மாவட்டச் செயலர்களுக்கும், அழைத்து வந்த பொறுப்பாளர்களுக்கும் மாவட்டச் சங்கத்தின் சார்பாகவும் தேர்தல் பணிக்குழு சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். 

Thursday, April 25, 2013


மதுரை மாநகரின் சித்திரை திருவிழா:

மீனாட்சி திருக்கல்யாணம்

கள்ளழகர் வைகை ஆற்றில் லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு 



Tuesday, April 23, 2013

  • மதுரையில் உள்ள BSNL பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கத்தின் இயக்குனர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகின்ற 27-04-2013 அன்று நடைபெற உள்ளது. 

  • ஊழல் மற்றும் லஞ்ச லாவண்யங்களை சொசைட்டியில் அனுமதிக்கக் கூடாது
       என்ற கருத்தின் அடிப்படையில்

NFTE      மாவட்டச் செயலர்,
FNTO      மாவட்டச் செயலர்,
BSNLEU  மாவட்டத்தலைவர் ,
TEPU        மாவட்டச் செயலர்,
SEWA      மாவட்டத் தலைவர்,
SNATTA  மாவட்டச் செயலர்
ஆகியோர் தலைமையில் இந்த தேர்தலை ஒன்றுபட்டு சந்திக்கிறோம்.

* கூட்டுறவு நாணயச் சங்கத்தை 
                                நாணயமாக நடத்திட
*கூட்டுறவு நாணயச் சங்கத்தின் 
                                நாணயத்தைக் காப்பாற்றிட

அனைத்து தோழர்கள், தோழியர்கள் கீழ்க்கண்ட வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டுகிறோம். 


Thursday, April 18, 2013

எந்தவொரு சங்கமும் மொத்த வாக்குகளில் 50%க்கு மேல் பெறவில்லை.
ஆதலால் NFTE சங்கத்திற்கும் அங்கீகாரம் தரப்படும்.
அங்கீகார சங்கங்கள் இரண்டுக்கும் சம அந்தஸ்து தரப்படும்.
NFTE க்கு JCMல் அனைத்து மட்டங்களிலும் 4  அல்லது 5 இடங்கள் கிடைக்கும்.

மதுரை மாவட்டத்தில் பதிவான வாக்குகள்:  1773

                              NFTE : 585
                              BSNLEU: 797
                              FNTO:  199
                              BSNLWRU: 103
18-04-2013
ஊழியர்களின் நலன் காத்திட, நிறுவனத்தைக் காத்திட NFTE சங்கத்திற்கு  BSNL ஊழியர்கள் உத்தரவிடும் நாள் இன்று!

Wednesday, April 17, 2013


                
தேர்தலில் வாக்களித்த அனைவருக்கும் நெஞ்சுநிறை நன்றி!

வாக்கு சேகரித்த  மதுரை, திண்டுக்கல், தேனி தேர்தல் பணிக்குழு கன்வீனர்களுக்கும் அவர்களுடன் இணைந்து பணியாற்றிய அனைத்து தோழர்களுக்கும் மாநிலச் சங்க நிர்வாகிகளுக்கும் SNATTA தோழர்களுக்கும் மாவட்டச் சங்கத்தின் சார்பாக மனமார்ந்த நன்றி!

தேர்தலை திறம்பட நடத்தி முடித்த நிர்வாகத்திற்கும் நன்றி!

மதுரை மாவட்டத்தில்
மொத்த வாக்குகள் : 1831
பதிவான வாக்குகள் : 1772
பதிவு சதவிகிதம் : 96.7%

Monday, April 15, 2013

மாநில மாநாட்டு சிறப்பு மலர் வெளியீட்டுவிழா காட்சிகள்
கடந்த 05-04-2013 அன்று மதுரை GM அலுவலகத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் மாநில மாநாட்டு சிறப்பு மலரை வரவேற்புக்குழு தோழர்கள் சேது,ராஜகோபால்,சிவகுருநாதன், ராஜ்குமார் ஆகியோர் முன்னிலையில் மாநிலச் செயலர் தோழர். பட்டாபி  வெளியிட முதல் இரு பிரதிகளை மாநிலத் துணைச் செயலர் தோழர். சங்கர், மாநில துணைத் தலைவர் தோழர். லட்சம் ஆகிய இருவரும் பெற்றுக்கொண்டனர். 

மாநிலச் செயலரின் மதுரை தேர்தல் பிரச்சாரப் பயணக் காட்சிகள் சில:

Saturday, April 13, 2013

வெற்றிக்கு கட்டியங்கூறிய
தேர்தல் பிரச்சார சிறப்புக்கூட்டம்  12-04-2013

மதுரை மாவட்டத்தின் தேர்தல் பிரச்சார சிறப்புக்கூட்டம் மதுரை தல்லாகுளம் CSC அருகில் தோதல் பணிக்குழு கன்வீனர் தோழர்.S.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. 
மாவட்டச்செயலர் தோழர்.முருகேசன், SNATTA மாநிலச்செயலர் தோழர். அழகுபாண்டியராஜா ஆகியோர் உரைக்குப் பின்னர் தோழர்.ஆர்.கே எழுச்சியுரையாற்றினார். தோழர். சிவகுருநாதன் நன்றி கூறினார்.

Sunday, April 7, 2013

தேர்தல் பிரச்சார சிறப்புக்கூட்டம்  12-04-2013



உற்சாகமிக்க தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள்: 05-04-2013
காலை 9.30 மணிக்கு கீழமாசிவீதி தொலைபேசி நிலையத்தில் மாநிலச் செயலர் பட்டாபி, SNATTA மாநிலச் செயலர் P.அழகுபாண்டியராஜா, மாநிலத்துணைச்செயலர் நெல்லை சங்கர் ஆகியோர் வாக்கு கேட்டு உரை நிகழ்த்தினர்.

காலை 11 மணிக்கு தல்லாகுளம் வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாநிலச் செயலர் பட்டாபி, SNATTA மாவட்டச் செயலர் முனியாண்டி, மாநிலத்துணைச்செயலர் நெல்லை சங்கர் ஆகியோர் வாக்கு கேட்டு உரை நிகழ்த்தினர்.

மதியம் 1.30 மணிக்கு GM அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாநிலச் செயலர் பட்டாபி, SNATTA மாநிலச் செயலர் P.அழகுபாண்டியராஜா,  , மாநிலத்துணைச்செயலர் நெல்லை சங்கர், மாநிலத்துணைத் தலைவர்கள் லட்சம்,பரிமளம் ஆகியோர் வாக்கு கேட்டு உரை நிகழ்த்தினர்.

Thursday, April 4, 2013

JTO தேர்வுக்கான விதிகளில் மாற்றம்:
எந்த ஆண்டுக்கான(vacancy year) காலியிடங்களுக்கு தேர்வெழுத விண்ணப்பித்தவர்கள் அந்த ஆண்டில் ஜுலை 1ந்தேதி 50 வயதுக்குள் இருந்தால் தேர்வெழுதலாம் என்ற உத்தரவு வெளியாகியுள்ளது. கோரிக்கையை வென்றெடுத்த மத்திய, மாநிலச் சங்கங்களுக்கு வாழ்த்துக்கள்.

Wednesday, April 3, 2013

மதுரை மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரக்கூட்டங்கள்:
மாநிலச் செயலர் தோழர். பட்டாபியுடன் மாநிலச் சங்க, மாவட்டச் சங்க நிர்வாகிகள்
04-04-2013  - திண்டுக்கல்
  • காலை 10 மணி வாயிற்கூட்டம்
ஊழியர்களை நேரடியாகச் சென்று வாக்கு சேகரித்தல்
  • மதியம் 11 மணி  - பழனியில் வாக்கு சேகரித்தல்
  • மாலை 4.30 மணி தேனியில் சிறப்புக்கூட்டம்
05-04-2013  மதுரை
காலை 09.30மணி கீழமாசிவீதி தொலைபேசிநிலையம்
            11 மணி தல்லாகுளம் வளாகம்
             1.30 மணி GM அலுவலகம்