Thursday, March 28, 2013




IDA 3.4 சதம் உயர்ந்துள்ளது.

01-04-2013 முதல் IDA 74.9 ஆக இருக்கும்.  (71.5 + 3.4)


BSNLEU அங்கீகாரத்தில் இனியும் தொடர்ந்தால் IDAவும் நிறுத்திவைத்துவிடுவார்கள்.

அதனால் வரும் ஏப்ரல் 16ல் நடைபெறும் உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலில் வரிசை எண் 15ல்  NFTE சின்னத்தில் வாக்களிப்பீர்!

Wednesday, March 27, 2013

செட்டிநாட்டு சுவையுடன் கருத்துக்களை பரிமாற 

துவங்கியுள்ளது NFTEயின் மற்றுமொரு வலைத்தளம்

http://nftebsnlkkdi.blogspot.in

JAO தேர்வில் மதுரையில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
1. சித்ரா.M, TSO
2. அக்னஸ் அருணோதயம் .Z ,STSO
3. மீனாட்சி ரவி , SSO
4. முத்துபாண்டி K ,TTA
5. ரமணி A ,TSO
6. ரகு. R , SSO
7. அமுதா.N , SSO
8. தங்கவேலு.G ,SSO
9. ஜோதியம்மாள்.R , SSO


Sunday, March 17, 2013

                      NFTE-BSNL , SNATTA சங்கங்களுக்கிடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இன்று டெல்லியில் நடைபெற்ற  SNATTA மத்திய செயற்குழுக் கூட்டத்தில் வரும் 6வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலில் NFTE-BSNLக்கு வாக்களிப்பது என ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டதின் அடிப்படையில் இரு சங்கங்களின் பொதுச்செயலர்களும் உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளனர்.

SNATTA தோழர்களை வாழ்த்தி வரவேற்கிறோம்.

வாருங்கள் தோழர்களே!

கடந்த 8 ஆண்டுகால வேதனைகளை

துடைத்தெறிவோம்!

BSNLஐ வளமாக்குவோம்!!

Saturday, March 16, 2013

13-03-2013 அன்று விருதுநகரில் நடைபெற்ற தேர்தல் சிறப்புக்கூட்டத்தில் BSNLEC மாவட்டச் செயலர் தோழர். S.தளவாய்பாண்டியன், TEPU மாவட்டச் செயலர் தோழர். அரிமா ஜெபக்குமார், ATM மாவட்டச் செயலர் தோழர். பாண்டி ஆகியோரும் BSNLEU சங்கத்திலிருந்து 5 சிவகாசி தோழர்கள் மாநிலச்செயலர் முன்னிலையில் நமது சங்கத்தில் இணைந்தனர்.
இணைந்திட்ட தோழர்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறோம்.



Friday, March 8, 2013

தனது இறுதி மூச்சுவரை மக்களுக்காக உழைத்திட்ட,

அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடிய

செம்படையின் தலைவனுக்கு வீரவணக்கம்.



மகளிர் தின நல்வாழ்த்துக்கள்
 
 சுற்றறிக்கை: 


மார்ச் 8-ம் தேதியை உலக மகளிர் தினமாக நாம் கொண்டாடி வருகிறோம். வீட்டிற்குள்ளே இருந்த பெண் சமுதாயம் தற்போது வானில் பறந்து கொண்டிருக்கிறது என்றால், அதற்கு வித்திட்ட பல்வேறு போராட்டங்களின் வெற்றி தினமே இந்த மகளிர் தினமாகும்..
மார்ச் 8-ம் தேதிக்கும்மகளிருக்கும் என்ன சம்பந்தம் என்று உழைக்கும் கீழ்த்தட்டுப் பெண் வர்க்கமே அறிந்து கொள்ளாத தினமாகத்தான் இந்தப் பெண்கள் தினம் இன்றும் இருக்கிறது.சர்வதேச மகளிர் தினம் என்று ஒருநாள் வருவதற்குக் காரணமே இந்த உழைக்கும் பெண் வர்க்கம் தான் என்பது தங்கமுலாம் பூசப்படாத உண்மை
உலக மகளிர் தினத்தை வேண்டுமானால் நாம் எளிதாகக் கொண்டாடலாம். ஆனால் இந்த உலக மகளிர் தினம் கொண்டாடுவதற்கு காரணமான போராட்டமும், அதன் வெற்றிகளும் அவ்வளவு எளிதாகக் கிட்டியதல்ல. ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இது.
அனைவருக்கும் புரட்சிகர மகளிர் தின வாழ்த்துக்கள்.

மகளிருக்கான பிரத்யேகமான கோரிக்கைகள் BSNLல் இன்னும் நிறைவேறாத கனவுகளாகவே நீடிக்கின்றன. குழந்தை பராமரிப்பு விடுப்புச் சலுகை மத்திய அரசு ஊழியர்களுக்கு அமுலுக்கு வந்துவிட்டது.ஆனால் BSNLEU சங்கம் மகளிருக்கான அந்த பிரத்யேக விடுப்பை சம்பளம் இல்லாத விடுப்பாக வழங்க National JCMல் ஏற்றுக்கொண்டது. ஆனால் NFTE தொடர்ந்து நிர்வாகத்துடன் பேசி சம்பளத்தோடு கூடிய விடுப்பை பெற்றுத் த்ந்துள்ளது. NFTE சங்கத்தின் முதல் வெற்றி இது.

சங்கப்பணிகளுக்கு சிறப்பு விடுப்பு, விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு விடுப்பு வழங்கப்படுகிறது. நமது மகளிரின் சமூகப் பொறுப்புகளையும் உணர்ந்து மாதம் ஒருநாள் சிறப்பு விடுப்பு வழங்கப்படவேண்டும் என NFTE கோரிக்கை விடுத்துள்ளது. நிச்சயமாக இந்தக் கோரிக்கையையும் வென்றிடுவோம்.
மகளிருக்கான சலுகைகளை வென்றிட சரியான தருணமிது!
வரிசை எண்:15 இணைந்த ஒன்பது கரங்கள் சின்னத்தில் வாக்களிப்பீர்!!
ஏப்ரல்-16 சரிபார்ப்பு தேர்தலில் NFTE-BSNLஐ முதன்மைச் சங்கமாக தேர்ந்தெடுப்பீர்!!!

 







தோழமையுடன்  K.முருகேசன், மாவட்டச் செயலர், மதுரை தொலைதொடர்பு மாவட்டம் / செல்: 9443012121

Thursday, March 7, 2013

குழந்தை பராமரிப்பு விடுப்பு


Child Care Leave:
        குழந்தை பராமரிப்பு விடுப்புச் சலுகை மத்திய அரசு ஊழியர்களுக்கு அமுலுக்கு வந்துவிட்டது.ஆனால் BSNLEUசங்கம் மகளிருக்கான அந்த பிரத்யேக விடுப்பை சம்பளம் இல்லாத விடுப்பாக வழங்க National JCMல் ஏற்றுக்கொண்டது.

   ஆனால் NFTE சங்கம் தொடர்ந்து நிர்வாகத்துடன் பேசியதன்  விளைவாக  குழந்தை பாராமரிப்பு விடுப்பினை மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக வழங்கிட BSNL மேனேஜ்மெண்ட் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் உத்தரவு வெளியாகும்.

NFTE சங்கத்தின் முதல் வெற்றி இது.



  • JTO இலாகா போட்டித் தேர்வு சம்பந்தமாக எழுப்பப்பட்ட விளக்கங்களுக்கான உத்தரவு நாளை வெளியாகும்.

Sunday, March 3, 2013

கடலூர் மாவட்ட மாநாடு 02-03-2013 அன்று நடைபெற்றது. மாவட்டச் சங்க நிர்வாகிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் தோழர்.ஸ்ரீதர் மாவட்டச் செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

”அங்கீகாரத்தை நோக்கி NFTE” என்ற போராட்டத்தில் உங்களது பணி சிறக்க வாழ்த்துகிறோம்.

உங்களது தலைமையில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம்.

தாரபாதா, ஹென்றிபார்ட்டன்
தாதாகோஷ்,O.P.குப்தா
கட்டி வளர்த்த சம்மேளனத்தை
கட்டிக் காப்போம்!
கட்டிக் காப்போம்!!

பாடுபடும் தொழிலாளிக்கு
ஜாதியில்லை,மதமில்லை
மொழியில்லை,இனமில்லை
கொளகை உண்டு,கோஷம் உண்டு
கோரிக்கைகள் வெற்றி பெற
கோடிக்கைகள் போராடும்
கோடிக்கால் பூதமடா!
தொழிலாளி வர்க்கமடா!!