Thursday, September 13, 2012

தியாகத் தலைவனுக்கு அஞ்சலி:
 விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றவரும், இந்திய விடுதலைக்காகப் பாடுபட்டவரும், இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான தோழர் ஏ.எம். கோபு, தனது 82 வது வயதில் சென்னை விஜயா மருத்துவமனையில் காலமானார்.
மறைந்த புகழ் மிகுந்த தோழர், ஏ.எம்.கோபு அவர்களுக்கு NFTE மாவட்டச் சங்கத்தின் சார்பிலும்  உறுப்பினர்களின் சார்பிலும் அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறோம்.
போர்க்குணமும், அர்ப்பணிப்பு மிகுந்த தியாகமும் கொண்ட கோபு  மாணவர், இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என்று அனைத்து பகுதி மக்களுக்காகவும் தலைமை பொறுப்பு ஏற்று செயல்பட்டிருக்கிறார். இவர் பங்கேற்காத போராட்டங்களும் இல்லை. காலடி படாத தமிழ் நாட்டின் நிலப்பகுதியும் இல்லை.
தியாக, வாழ்க்கை சிறப்பைக் கொண்ட கோபு,  கம்யூனிஸ்டு கட்சி தடை செய்யப்பட்டக் காலத்தில், கொலைக் குற்றம் சாட்டப் பெற்று, காவல்துறையால் தேடப்பட்டு வந்தவர்.
திருவாரூரில் சுடப்பட்டு, ஒரு ஆண்டு பாதுகாப்பு கைதியாக, திருச்சி மத்திய சிறைச்சாலையிலும், மூன்று ஆண்டுகாலம் சேலம் மத்திய சிறைச்சாலையிலும் அடைக்கப்பட்டிருந்தார்.
தோழர்கள் ஜீவா, எம்.கல்யாணசுந்தரம், ப.மாணிக்கம், ஏ.எஸ்.கே முதலான தலைவர்களோடு உடன் இருந்து பணியாற்றிய சிறப்பையும் பெற்றுள்ளார். ஓய்வு ஒழிச்சலற்ற கோபுவின் கட்சிக்கானப் பணி வார்த்தைகளால் விவரிக்கக் கூடியதன்று.
தமிழகத்தில் தொழிற் சங்கத்தைக் கட்டி அமைத்ததில் கோபுவின் பங்கு குறிப்பிட்டு சொல்லத்தக்கதாகும்.
AITUC தொழற்சங்கத்தில் மாநிலத்தின் பொதுச்செயலாளராக பல ஆண்டுகள் பணியாற்றினார்.
உலகத் தொழிற் சங்க சம்மேளனத்தின் துணைத் தலைவராக 15 ஆண்டுகளுக்கு மேல், பணியாற்றியுள்ளார். இந்த காலத்தில் 98 நாடுகளில் பயணம் செய்துள்ளார்.
பலவேறு தொழிற் சங்கப்போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தி, தொழிலாளர்களுக்கான உரிமைகளை பெற்று தந்துள்ளார்.

அவரின் உடல்  தோழர்களின் / மக்களின் அஞ்சலிக்குப்பிறகு அவரது  விருப்பப்படி அரசு மருத்துவமனையில் ஒப்படைக்கப்படும்.





















































No comments:

Post a Comment