Tuesday, January 8, 2013

தோழர் குப்தா இயற்கையுடன் கலந்தார்.

மகத்தான மனிதன் காலத்தால் அழியாத காவிய மகன் உடல் தகனம் செய்யப்பட்டது. இடுகாட்டிற்கு அவரது பூதவுடலை அவரது மகன்கள் சலீல்,கபில் மற்றும் குடும்பத்தார் வேனில் எடுத்து வந்தனர்.

இராணுவ அதிகாரிகளும் இறுதி மரியாதை செலுத்திட வந்திருந்தனர்.

தொழிற்சங்க தலைவர்கள் சந்தேஷ்வர் சிங், நம்பூதிரி, அபிமன்யூ, ஜெயபிரகாஷ், துவா, ராஜ்பால், கோயல், சித்ரபாசு, எம்.பி.சிங், சுரேஷ்குமார்,கோலி, பக்‌ஷி, ஆர்.கே, பட்டாபி, அஞ்சல் தலைவர்கள் மற்றும் டெல்லி தோழர்கள் மயானத்தில் உறவினர்களுடன் கூடியிருந்தனர். தோழர். குப்தாவின் உடலுக்கு உறவினர்களுக்கு அடுத்து மலரஞ்சலிதனை செய்தனர்.

தமிழகத்திலிருந்து மயானத்திற்கு வந்திருந்த தோழர்கள் ரத்னா, என்.கே, வீரராகவன், பாட்சா ஆகியோர் மாலை அணிவித்து வணங்கினர்.

உடல் எரியூட்டப்பட்டபின்னர் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. தோழர்கள் சந்தேஷ்வர் சிங், நம்பூதிரி, அபிமன்யூ, ஆர்.கே, பட்டாபி, ஜெயபிரகாஷ், பக்‌ஷி, சுரேஷ்குமார் மற்றும் அஞ்சல் தலைவர்கள் குப்தாவின் மகத்தான வாழ்வுதனை நினைவு கூர்ந்து, அவரது சிறந்த பண்புகளை தொடர்ந்து கடைப்பிடிக்க உறுதி கூறினர்.

பின்னர் சம்மேளன அலுவலகத்தில் தலைவர்கள்  சந்தேஷ்வர் சிங், துவா, மதிவாணன், சித்ரபாசு, ஜெயராமன், ஆர்.கே, பட்டாபி கூடினர். குப்தா பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்ட புகைப்படங்களை சம்மேளன அலுவலகப் பணியாளர்கள் எடுத்து வைத்து துக்கத்தை பகிர்ந்துகொண்டனர்.

டெல்லியில் வருகிற 15 அன்று மத்திய, பொதுத்துறை, மத்திய சங்க தலைவர்கள் மற்றும் தோழர்கள் பங்கேற்கும் மாபெரும் அஞ்சலி நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அனைத்து சங்க தலைவர்கள் திரண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர். சென்னையில் தோழர்கள் முத்தியாலு, முரளி, ஆறுமுகம், மனோஜ், விஜயகுமார்,  வள்ளிநாயகம், லிங்கமூர்த்தி, கிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன், நடராஜன், சோமசுந்தரம், பரிமளாஜெகன், ஏ.டி.ஆர், சிவா மற்றும் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செய்தனர்.

No comments:

Post a Comment