Wednesday, August 21, 2013

ஆகஸ்ட் 21
ஜீவா பிறந்த நாள்
”தாங்கொண்ட கொள்கை தழைக்கப் பெரிதுழைப்பார்
  தீங்கு வரக்கண்டு சிரித்திடுவார் - யாங்காணோம்
 துன்பச் சுமைதாங்கி சீவானந்தம் போன்ற
 அன்புச் சுமை தாங்கும் ஆள்”     
- பாவேந்தர் பாரதிதாசன்

தமிழகத்தின் தென்கோடியில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குக்கிராமத்திலே பிறந்தவர் ‘சொரிமுத்து’ என்ற வினோதப் பெயருடன் வளர்ந்தவர் – ஜீவானந்தம் என்ற பெயரால் புகழ் பரப்பியவர். தொழிலாளர் இயக்கத்திற்கும பொதுவுடைமைத் தத்துவத்திற்கும் ஜீவ நாடியாக துடித்து, சமதர்ம்ப் பெருந்தொண்டுகள் புரிந்து, தம் கொள்கைகளுக்காகப் போராடி வாழ்கைக் களத்தில் வீர மரணம் எய்தினார். இது ஒரே வாக்கியத்தில் ஜீவாவின் கதை.
இவரது அரசியல் பிரவேசமும், தனித்தமிழ் முழக்கமும் சுயமரியாதைக் கர்ச்சனையும், தேசீய ஆவேசமும் எல்லாம் இவரைக் கம்யூனிசப் பாதையில் திரும்பிச் சமதர்ம சமுதாயக் குறிக்கோளை நோக்கிச் செலுத்தி விட்டன. இதற்குப் பரிசு தடியடியும் மாறி மாறி சிறைவாசமும், நாடு கடத்தலும் ஆகிய ஒரே பயங்கர வாழ்வு!
பயங்கரம் என்பது பார்ப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும்தான்; இவருக்கல்ல. 
“அன்பின் உருவமாய், பண்பின் களமாய், தியாகத்தின் சின்னமாய், உழைப்பின் உறைவிடமாய் விளங்கிய ஜீவா அவர்களைக் கண்ட கண்கள், பேச்சினைக் கேட்ட செவிகள், வளர்ந்த சிந்தனைகள் உண்மையிலேயே மண்ணில் பயனுற்றனவாகும். அவர் புகழ் போற்றி, ஜீவாவின் கருத்துக்களைப் பரப்புவோமாக,”
“குளிரும் சுடுதலும் உயிருக்கு இல்லை;
  சோர்வு வீழ்ச்சிகள் தொண்டருக்கு இல்லை;
  எடுமினோ அறப்போரினை”

– பாரதி

No comments:

Post a Comment