Friday, February 15, 2013

அங்கீகாரத்தை நோக்கி அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!! வணக்கம். 6வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் 16-04-2013 அன்று நடைபெறும். BSNLக்கே உரிய புதிய அங்கீகார விதிகளின்படி தேர்தல் நடைபெற உள்ளது. 15 சதம் பெரும் இரு சங்கங்கள் அங்கீகாரம் பெறும். 7 சதம் பெறும் சங்கம் தேசிய,மாநில,மாவட்ட JCMல் ஒருவர் இடம்பெறலாம். புதிய அங்கீகார விதிகள் உருவாக்கப் பாடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தோழர்.குருதாஸ்தாஸ் குப்தா, நமது மாநில மாநாட்டில் பங்கேற்ற AITUC பொதுச்செயலாளர் G.L.தார், நமது பொதுச்செயலாளர் தோழர்.C.சிங், தலைவர் தோழர். இஸ்லாம், மாநிலச் செயலர் தோழர்.பட்டாபி ஆகியோருக்கு மாவட்டச் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். பிப்ரவரி 4,5 தேதிகளில் நடைபெற்ற விரிவடைந்த மத்திய செயற்குழுவில் தற்போதுள்ள கூட்டணிச் சங்கங்களோடு (BSNL Workers Alliance) தேர்தலை சந்திப்பது, மேலும் SNATTA , SEWA BSNL –ன் ஆதரவைக்கோருவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் ஏற்பட்ட இழப்புகளை மீட்டெடுக்க, BSNL நிறுவனத்தை லாபமீட்டும் துறையாக மாற்றிட அங்கீகாரத்தை பெறுவோம் என்ற சூளுரையோடு மத்திய செயற்குழு நிறைவுபெற்றது. மாவட்டத்திலிருந்து தோழர்கள் முருகேசன், விஜயரங்கன்,லட்சம்,சேது ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்டச்செயற்குழு: 10-02-2013 அன்று மதுரையில் செயற்குழு மாவட்டத் தலைவர் தோழர்.C.விஜயரங்கன் தலைமையில் நடைபெற்றது. தோழர்கள் சேது,லட்சம், பரிமளம் ஆகியோர் ஓங்கோல் மத்திய செயற்குழு முடிவுகளைப் பற்றியும், 78.2 IDA இணைப்புக்கான போராட்டங்கள், பிப்ரவரி 20,21 பொதுவேலைநிறுத்தத்தில் பங்கேற்க வேண்டியதின் அவசியத்தையும் விளக்கிப் பேசினர். அமைப்புநிலை விவாதத்தில் மாவட்டச் சங்க நிர்வாகிகள்,கிளைச்செயலர்கள் பங்கேற்றனர். மாநில மாநாட்டிற்காக பணியாற்றிய அனைவருக்கும் வரவேற்புக்குழு தலைவர் தோழர். P.ராஜகோபால் தலைமையில் பொதுச்செயலர் தோழர்.K.சேது சால்வை அணிவித்து கெளரவித்தார். வரவேற்புக்குழு பொதுச்செயலர் தோழர்.K.சேது அவர்களுக்கு அனைவரும் சேர்ந்து சால்வை அணிவித்து கெளரவித்தோம். மதுரை வருவாய் மாவட்டத்திற்கு தோழர்கள் S.ராஜேந்திரன், R.ராஜேந்திரன் (TM,MEL), திண்டுக்கல் மாவட்டத்திற்கு தோழர்கள் S.கோவிந்தராஜ், (TM,DDG), I.சுரேஷ்பாபு,(TM, Pachaloor), தேனி வருவாய் மாவட்டத்திற்கு தோழர்கள் S.ஜான்சன் மாணிக்கராஜன் (STSO, TEI), B.சுருளிராஜ்(TM,CBM), மகளிர் குழுவிற்கு தோழியர்கள் T.பரிமளம், இந்திராணிசுந்தர்ராஜ் ஆகியோர் தேர்தல் பணிக்குழு கன்வீனர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேற்கண்ட தோழர்கள் அந்தந்த பகுதியிலுள்ள மாவட்டச் சங்க நிர்வாகிகள், கிளைச் செயலர்களுடன் கலந்துபேசி தேர்தல் பணிக்குழுக்களை அமைத்து தேர்தல் பணியைத் துவக்கிட மாவட்டச் செயற் குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. • பிப்ரவரி 20,21 பொதுவேலைநிறுத்தம்: அரசியல் பேதமின்றி அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள்,பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் என அனைவரும் ஓரணியில் திரண்டு போராட அறைகூவல் விடப்பட்டுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக தொழிலாளர் விரோதக் கொள்கைகளை கடைப்பிடிக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், தினந்தோறும் பெட்ரோல்,டீசல் விலையேற்றத்தால் ஏறும் விலைவாசி உயர்வைக் கண்டித்தும், நமது BSNL நிறுவனத்தின் விரிவாக்கத்திற்கு முட்டுக்கட்டைபோடுகின்ற, பங்கு விற்பனை செய்யத் துடிக்கின்ற, VRS திட்டத்தை அமுல்படுத்த நிர்ப்பந்திக்கின்ற மத்திய அரசைக் கண்டித்தும் நடைபெறும் இப்போராட்டத்தில் அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டுகிறோம். • பிப். 26 செவ்வாய்கிழமையன்று சேலத்தில் கிளைச்செயலர்கள் பங்கேற்கும் கருத்தரங்கமும் 6வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் பிரச்சார துவக்க விழாவும் நடைபெற இருக்கிறது. கிளைச்செயலர்கள்,மாவட்டச் சங்க நிர்வாகிகள், முன்னணி தோழர்கள் திரளாக பங்கேற்க வேண்டுகிறோம். • பிப்.23-ல் நடைபெறும் கொடைக்கானல், வத்தலக்குண்டு, நிலக்கோட்டை கிளை மாநாடுகளில் மாநிலச் செயலர் தோழர். பட்டாபி பங்கேற்கிறார். தோழர்கள் திரளாக கலந்துகொள்வீர். • தேர்தல் அறிவிப்பு: தேர்தல் அறிவிப்பு நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுவிட்டது. 18 சங்கங்கள் தேர்தலில் பங்கேற்க விண்ண்ப்பித்துள்ளன. கிளைச்செயலர்கள் கிளைக்கூட்டங்களை அலுவலகத்திற்குள் நடத்தி தேர்தல் பணியைத் துவக்க வேண்டுகிறோம். தேர்தல் களம் தயார். பொறுப்புக்கள் நிறைந்த பொறுப்புள்ள சங்கம் NFTE என்ற மாநிலச் செயலரின் கூற்றை நிருபிக்கும் தருணமிது. தொழிலாளர்கள் தங்களது வாக்குகளை அச்சமின்றி பயன்படுத்தும் சூழலை உருவாக்குவோம். அங்கீகாரத்தை நோக்கி பயணிப்போம். தோழமை வாழ்த்துக்களுடன், தோழமையுள்ள, 13-02-2013 மதுரை-2 K.முருகேசன்

No comments:

Post a Comment