Thursday, June 13, 2013

78.2% IDA  01-01-2007 முதல் அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்பட்டாலும் HRA, Skill upgradation allowance,Medical allowance for outdoor treatment with voucher and etc. 68.8% IDA இணைப்பு அடிப்படையில் தான் வழங்கப்படும் என BSNL நிர்வாகம் இன்று உத்தரவு வெளியிட்டுள்ளது.
உத்தரவு நகல்: சொடுக்கவும்
 

 Joint Forum தலைவர்களிடம் உறுதியளித்தபடி பிரச்னைகளை தீர்த்து வைத்த GM அவர்களுக்கு நன்றி. 

Tuesday, June 11, 2013

அங்கீகாரம் பெற்ற பின் தலைமையேற்று நடைபெற்ற கூட்டுப் போராட்டத்தின்
முதல் வெற்றி
78.2% IDA இணைப்புக்கான உத்தரவை BSNL நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது. 

ஒவ்வொரு பிரச்னையிலும் சாதாரண தொழிலாளியின் உணர்வுகளை பிரதிபலித்து மத்திய சங்கத்திற்கு வழிகாட்டும் மாநிலச் செயலரின் அறிவாற்றலை தொழிலாளர்கள் தெரிந்துதான் மதுரை மாநாட்டில் தேர்ந்தெடுத்தோம். 
எத்தனை தரந்தாழ்ந்த விமர்சனங்கள் வந்தாலும், தான் கற்ற மார்க்சிய கொள்கை அடிப்படையில் தொழிலாளி நலனுக்காக தங்கக்காசு/வெள்ளிக்காசு என எதையும் எதிர்பார்க்காமல் தோழர் குப்தா/ஜெகன் ஆகியோரை மனதில் இருத்தி தொழிற்சங்கப் பணியாற்றும் தோழனே! பட்டாபியே!! உன் சேவை தொடரட்டும். 

மதுரையில் தோழர்.வெங்கடாசலம் SDE அவர்களுக்கு ஒட்டன்சத்திரம் மாறுதல் போடப்பட்டது. SNEA மாவட்டச் சங்கம்  10-06-2013 அன்று மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் என போராட்ட அறிவிப்பு கொடுத்தது. அனைத்துச் சங்க மாவட்டச் செயலர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
Forum of BSNL Unions/Associations சார்பாக NFTE மாவட்டச் செயலர், BSNLEU மாவட்டச் செயலர், AIBSNLEA மாவட்டச் செயலர் ஆகியோர் காலை 11 மணிக்கு நிர்வாகத்தைச் சந்தித்து  தோழர்.வெங்கடாசலம் SDE அவர்களின் மாற்றலை ரத்து செய்து மாவட்டத்தில் சுமுகமான நிலையை உருவாக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். நீண்ட நெடிய விவாதத்திற்குப்பின் CGM அவர்களிடம் ஒப்புதல் பெற்ற பின்      19-06-2013க்குள் மாற்றல் உத்தரவை ரத்து செய்வதாக உறுதியளித்தார். 
தோழியர். ஜெயலட்சுமி SDE அவர்களின் CCL ஒப்புதல் வழங்கப்படும் எனவும் அவர்களுக்கு போடப்பட்ட மாற்றல் உத்தரவை ரத்து செய்யவும் உறுதியளித்தார்.

இத்தகவலை SNEA சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்தோம். 
மதிய உணவு இடைவேளையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்துச் சங்க மாவட்டச் செயலர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசினர்.

Saturday, June 8, 2013

மாவட்டச் செயற்குழு

மாவட்டச் செயற்குழு வரும் 15-06-2013 அன்று தல்லாகுளம் CSC மனமகிழ் மன்றத்தில் மாவட்டத்தலைவர் தோழர்.C.விசயரங்கன் தலைமையில் நடைபெறும்.

Friday, June 7, 2013

ஒன்றுபட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி

01.01.2007 முதல் 78.2% IDA இணைப்பிற்கு DOT  ஒப்புதல் அளித்துள்ளது.

தகவல்:  மத்திய சங்கம்
07-06-2013  தேனியில் தர்ணா
தேனியில் எக்சேஞ்ச் வளாகத்தில் 78.2% IDA இணைப்பு உடன்பாட்டை அமுல்படுத்தக் கோரி தர்ணா போராட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 130க்கும் மேற்பட்ட தோழர்கள்/தோழியர்கள் கலந்துகொண்டனர். மாநில துணைத்தலைவர் தோழர்.M.லட்சம் தர்ணாவை துவக்கி வைத்தார். தோழர்.சேது , BSNLEU மாவட்டச் செயலர் தோழர்.சூரியன் மற்றும் அனைத்துச் சங்க நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.


06-06-2013 திண்டுக்கல்லில் தர்ணா

160க்கும் மேற்பட்ட தோழர்கள்/தோழியர்கள் கலந்து கொண்டனர்.


05-05-2013  மதுரையில் தர்ணா
மதுரை: பிஎஸ்என்எல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் மதுரை தல்லாகுளத்தில் நேற்று தர்ணா போராட்டம் நடந்தது. என்எப்டிஇ மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். போராட்டத்தில், 78.2 சதவீத அகவிலைப்படியை, அடிப்படை சம்பளத்தில் சேர்க்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.  தினகரன் செய்தி
30-05-2013 அன்று திண்டுக்கல் கிளைகளின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கிளையின் தலைவர் தோழர்.ராயப்பன் அவர்களுக்கு பணி ஓய்வு பாராட்டுவிழா நடைபெற்றது. அக்கூட்டத்தில் மாவட்டச் செயலர், மாவட்டத் தலைவர் கலந்துகொண்டு தோழரை வாழ்த்திப்பேசினார்கள்.