மதுரையில் தோழர்.வெங்கடாசலம் SDE அவர்களுக்கு ஒட்டன்சத்திரம் மாறுதல் போடப்பட்டது. SNEA மாவட்டச் சங்கம் 10-06-2013 அன்று மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் என போராட்ட அறிவிப்பு கொடுத்தது. அனைத்துச் சங்க மாவட்டச் செயலர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
Forum of BSNL Unions/Associations சார்பாக NFTE மாவட்டச் செயலர், BSNLEU மாவட்டச் செயலர், AIBSNLEA மாவட்டச் செயலர் ஆகியோர் காலை 11 மணிக்கு நிர்வாகத்தைச் சந்தித்து தோழர்.வெங்கடாசலம் SDE அவர்களின் மாற்றலை ரத்து செய்து மாவட்டத்தில் சுமுகமான நிலையை உருவாக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். நீண்ட நெடிய விவாதத்திற்குப்பின் CGM அவர்களிடம் ஒப்புதல் பெற்ற பின் 19-06-2013க்குள் மாற்றல் உத்தரவை ரத்து செய்வதாக உறுதியளித்தார்.
தோழியர். ஜெயலட்சுமி SDE அவர்களின் CCL ஒப்புதல் வழங்கப்படும் எனவும் அவர்களுக்கு போடப்பட்ட மாற்றல் உத்தரவை ரத்து செய்யவும் உறுதியளித்தார்.
இத்தகவலை SNEA சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்தோம்.
தோழியர். ஜெயலட்சுமி SDE அவர்களின் CCL ஒப்புதல் வழங்கப்படும் எனவும் அவர்களுக்கு போடப்பட்ட மாற்றல் உத்தரவை ரத்து செய்யவும் உறுதியளித்தார்.
இத்தகவலை SNEA சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்தோம்.
மதிய உணவு இடைவேளையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்துச் சங்க மாவட்டச் செயலர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசினர்.
No comments:
Post a Comment