வெற்றிகரமாக நடந்து முடிந்த மத்திய செயற்குழு:
நமது சங்கத்தின் மத்திய செயற்குழுக்கூட்டம் டெல்லியில் ஆகஸ்ட் 27,28 தேதிகளில் நடைபெற்றது.
மத்திய செயற்குழு நடைபெறும்வேளையில் 78.2% IDA இணைப்பிற்கான ஒப்புதலை BSNL Board வழங்கியதை செயற்குழு மகிழ்ச்சியோடு வரவேற்றது.
DOTயிடமிருந்து ஒப்புதலை விரைவில் பெறுவதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து மத்திய சங்கம் மேற்கொள்ளும் என அறிவித்துள்ளது.
உறுப்பினர் சந்தா ரூ.20/- என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல், புதிய அங்கீகார விதிகளை உருவாக்குதல், அனைத்துச் சங்கங்களுக்கும் குறைந்த பட்ச தொழிற்சங்க உரிமைகள் மற்றும் ஊழியர் பிரச்னைகளும் விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 27 அன்று CLCயுடன் நடைபெற்ற கூட்டத்தில் 13 சங்கங்கள் கலந்துகொண்டுள்ளன. TEPU, BSNLMS ஆகிய இரு சங்கங்கள் மட்டுமே புதிய அங்கீகார விதிகளை உருவாக்க எதிர்ப்பை தெரிவித்துள்ளன. ஒன்றுக்கும் மேற்பட்ட சங்கங்களுக்கு அங்கீகாரம், அனைத்துச் சங்கங்களுக்கும் குறைந்த பட்ச உரிமைகளை உள்ளடக்கிய BSNLக்கென்று தனியாக அங்கீகார விதிகளை உருவாக்குவதற்கான கூட்டத்தை நடத்திட CLC உத்தரவிட்டதின் அடிப்படையில் BSNL நிர்வாகம் விரைவில் அக்கூட்டத்தை நடத்தவுள்ளது.
No comments:
Post a Comment