கறுப்பு பணத்தைக் கட்டுப்படுத்த வெளிநாடுகளில் உள்ள தனது தூதரகங்களில், கூடுதலாக 14 வருமான வரி பிரிவை ஏற்படுத்த வெளியுறவு அமைச்சகத்திடம் மத்திய நிதியமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து சட்ட விரோதமாக பணம் பரிமாற்றம் செய்யப்படுவதை தவிர்க்கவும், வெளிநாட்டு வங்கிகளில் பணம் முதலீடு செய்யப்படுவதை கண்காணிக்கவும், இந்திய தூதரக அலுவலகங்களில் வருமான வரி பிரிவு துவங்கப்பட வேண்டும் என, நிதி அமைச்சகம் மத்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்து, எந்தெந்த நாடுகளில் இந்த அலுவலகங்களை துவங்க வேண்டும் என்ற பட்டியலையும் சமர்ப்பித்திருந்தது.இதையடுத்து, சைப்ரஸ், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, ஜப்பான், ஐக்கிய அரபு எமிரேட், இங்கிலந்து, அமெரிக்கா, மொரிஷியஸ், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில், வருமான வரி பிரிவுகள் துவங்கப்பட்டன.
இந்நிலையில், தற்போது கூடுதலாக, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 14 நாடுகளில் வருமான வரி பிரிவு அலுவலகங்களை துவங்கப்படவேண்டும் என, மத்திய நிதியமைச்சகம், வெளியுறவு அமைச்சகத்திடம் பரிந்துரை செய்துள்ளது.லோக்சபாவில், கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, அப்போதைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, இதுபோன்ற அலுவலகங்களை வெளிநாடுகளில் துவங்குவதற்கு கணிசமான அளவிற்கு நிதி ஒதுக்கப்படும் என, தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment