16-10-2012 அன்று மதியம் 1 மணிக்கு GM அலுவலகம் முன்பாக தொடர் மின்வெட்டைக் கண்டித்தும் குறைந்த பட்ச போனஸ் வழங்கக்கோரியும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. GM அலுவலகக் கிளைச்செயலர் மெஹ்ராஜூதீன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலர் முருகேசன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும் BSNL நிர்வாகத்தைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
15-10-2012 அன்று FORUM OF BSNL UNIONS/ASSOCIATIONS சார்பாக தர்ணா போராட்டம் GM அலுவலகம் முன்பாக நடைபெற்றது.
தோழர். K.முருகேசன் DS/NFTE தலைமையேற்க தோழர் N.அழகர்சாமி ACS/SNEA துவக்கி வைக்க, தோழர்கள். அ. அருணாசலம்,N.V.சந்திரசேகர் /AIBSNLEA,V.பாலகுமார்,விஜய்பாபு/AIGETOA , S.சூரியன் கன்வீனர்,செல்வின் சத்தியராஜ்/BSNLEU M.சந்திரசேகரன்/SNEA, G.P.பாஸ்கரன்,L.கண்ணன், V.சூரப்பன்,M.சுந்தரம்,தோழியர்கள் உமா, அருணோதயம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்..தோழர்.V.K.P/AIBSNLEA நிறைவுரை ஆற்றினார். தோழர்.சு.கருப்பையா DS/AIBSNLEA நன்றியுரையாற்றினார்.
No comments:
Post a Comment