Tuesday, August 28, 2012

புதிய தொழிற்சங்க அங்கீகார விதிகளை அனைத்துச் சங்கங்களின் ஒத்த கருத்தின் அடிப்படையில் உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை துவங்குமாறு BSNL நிர்வாகத்தை CLC கேட்டுக்கொண்டுள்ளார்.
அதற்கான கூட்டத்தை BSNL நிர்வாகம் விரைவில் நடத்தவுள்ளது

Monday, August 27, 2012

மத்திய செயற்குழு:
இன்றும் நாளையும் (27 & 28) டெல்லியில் மத்திய செயற்குழு நடைபெற இருக்கிறது. அக்கூட்டத்தில்
  • 12-06-12 78.2% IDA இணைப்பு பற்றிய உடன்பாடு & உடன்பாட்டை விரைவில் அமுல்படுத்துதல்
  • புதிய அங்கீகார விதிகளை உருவாக்குதல்
  • 6வது சங்க அங்கீகாரத் தேர்தல்
  • BSNL நிதி நிலைமை & மேம்படுத்துதல் 
ஆகியவற்றைப் பற்றி விவாதிக்க உள்ளனர்.

           இன்று (27-08-2012) மதியம் 3 மணிக்கு எர்ணாகுளம் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் BSNL நிர்வாகமும் அனைத்துச் சங்க பிரதிநிதிகளும் பங்கேற்கும் கூட்டத்தை CLC கூட்டியுள்ளார். அக்கூட்டத்தில் புதிய அங்கீகார விதிகளை உருவாக்குவது பற்றி விவாதிக்கப்படும்.

Friday, August 24, 2012

1898 பதவிகளுக்கான JAO Part - II தேர்வு விரைவில் அறிவிக்கப்படவிருக்கிறது.

Thursday, August 23, 2012

TTA பயிற்சி வகுப்புகள் செப்டம்பர் 3வது வாரத்தில் துவக்கப்படலாம் எனத் தெரியவருகிறது.
வரும் நிகழ்வுகள்
  • ஆகஸ்ட் 27,28 தேதிகளில் NFTE மத்திய செயற்குழு டெல்லியில் நடைபெற இருக்கிறது. 
  • ஆகஸ்ட் 27 அன்று டெல்லியில் எர்ணாகுளம் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் BSNLல் புதிய அங்கீகார விதிகள் உருவாக்குதல் பற்றி விவாதிக்க BSNL நிர்வாகம், அனைத்துச் சங்க நிர்வாகிகள் கலந்து கொள்ளும் கூட்டம் சீப் லேபர் கமிஷனர் தலைமையில் நடைபெற உள்ளது.
  • ஆகஸ்ட் 28 BSNL போர்டு கூட்டம் நடைபெற உள்ளது.

Wednesday, August 22, 2012

ராஜ்ய சபாவில் VRS பற்றிய கேள்விக்கு இணை அமைச்சர் திரு.மிலிந் தியோரா அவர்கள் அளித்த பதில்:
  • BSNLலிடமிருந்து VRSக்கான குறிப்பு DOTக்கு வந்துள்ளது.
  • தகுதி: 45 வயதைக் கடந்த 15 ஆண்டுகள் சேவை புரிந்தவர்கள்
  • பணப்பயன்:  Ex-gratia சேவை முடித்த ஒவ்வொரு ஆண்டுக்கும் 60நாட்கள் சம்பளம் (Basic+DA) அல்லது மீதமுள்ள சேவை மாதங்களுக்கான சம்பளம், இதில் எது குறைவோ அது வழங்கப்படும். அதிகபட்சமாக 60 மாதச் சம்பளம் மட்டுமே வழங்கப்படும்.
  • வழக்கமான ஓய்வூதியப் பலன்களுடன் ( கிராஜூவிட்டி, பென்சன், விடுப்பு சம்பளம்) Ex-gratia ஒரு லட்சம் ஊழியர்களுக்கு ரூ.12371 கோடி செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
  • இத்துடன் வழக்கமான ஓய்வூதியப் பலன்கள் கிராஜூவிட்டி, பென்சன், விடுப்பு சம்பளம் போன்றவற்றிற்கு கூடுதல் செலவு ஏற்படும்.
BSNLல் உள்ள பெரும்பாலான தொழிற்சங்கங்கள் இத்திட்டத்தை எதிர்க்கின்றன.
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் வெல்லட்டும்:

மத்திய அரசின் வங்கி சீர்திருத்த மசோதா, அவுட் சோர்சிங் முறை, தனியார்மயமாக்கல் ஆகிய 6 கோரிக்கைகளை முன்வைத்து பொதுத்துறை வங்கி ஊழியர்கள் ஆகஸ்ட் 22,23 ஆகிய இரண்டு நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வேலைநிறுத்தம் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.