கிளைச்செயலர்கள் கருத்தரங்கம் &
தேர்தல் பிரச்சார துவக்கவிழா.
26-02-2013 அன்று சேலத்தில் தேர்தல் பிரச்சார துவக்க விழாவும் கிளைச் செயலர்கள் கருத்தரங்கமும் மாநிலத் தலைவர் தோழர்.நூருல்லா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. தோழர்கள் ஆர்.கே, முத்தியாலு, தமிழ்மணி, சேது, ஜெயபால் ஆகியோர் பங்கேற்று தோழர்கள் தேர்தல் களத்தில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என எழுச்சியுரையாற்றினர்.
மாநிலச் செயலர் பட்டாபி நமது நிறுவனம் எதிர்கொண்டுள்ள பிரச்னை, அதை நாம் எவ்வாறு எதிர்கொள்வது, அங்கீகாரத்திற்கு பின்னர் நாம் கவனம் செலுத்த வேண்டிய பிரச்னைகள், தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என விளக்கமாக உரையாற்றினார்.
அங்கீகாரத்தை நோக்கி NFTE-BSNL என்ற தேர்தலுக்கு பயன்படக்கூடிய தேர்தல் சிறப்பு ஒலிக்கதிரை தோழர்.ஆர்.கே வெளியிட நமது சின்னத்தின் அடையாளமாக ஒன்பது மூத்த தோழர்கள் பெற்றுக்கொண்டனர்.
கிட்டத்தட்ட 200 கிளைகளிலிருந்து 600 கிளைச்செயலர்களும் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். கிளைச்செயலர்கள் கருத்தரங்கில் பங்கேற்று தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.
விழாவினை சிறப்பாக நடத்திய சேலம் நூருல்லா, பாலகுமார், வெங்கட்ராமன் தலைமையிலான அனைத்து தோழர்களுக்கும் மதுரைமாவட்டச் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள்
No comments:
Post a Comment