Saturday, February 9, 2013


வெற்றிக்கு கட்டியங்கூறிய ஓங்கோல் மத்திய செயற்குழு



















தமிழகத்திலிருந்து 70க்கும் மேற்பட்ட தோழர்கள் செயற்குழுவில் கலந்துகொண்டனர்.
 மதுரை மாவட்டத்திலிருந்து மாவட்டச் செயலர் முருகேசன், மாநில துணைத் தலைவர் லட்சம், மாநில அமைப்புச் செயலர் விஜயரங்கன், தோழர். சேது ஆகியோர் கலந்துகொண்டனர்.
 

  
அகில இந்திய தலைவர் தோழர்.இஸ்லாம் தேசியக்கொடியை ஏற்றி வைக்க, மூத்த  தோழரும் முன்னாள் ஆந்திர மாநிலத்தின் செயலாளருமான மதுசூதனராவ் சம்மேளனக்கொடியை ஏற்றி வைத்தார். தோழர்.குப்தாவின் நினைவு ஸ்தூபிக்கு அனைவரும் மலரஞ்சலி செலுத்திவிட்டு அரங்கினுள் நுழைந்தனர்.
தோழர்.மதுசூதனராவ் தனது 45 ஆண்டுகால குப்தாவுடனான அனுபவங்களை நினைவு கூர்ந்து அஞ்சலி உரை ஆற்றினார்  


பொதுச் செயலர், துணைப்பொதுச்செயலர் உரைக்குப்பின்னர் மாநிலச் செயலர்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.

அனைவராலும் கவனிக்கப்பட்ட நமது மாநிலச் செயலர் பட்டாபியின் சிறப்பான உரையிலிருந்து ....

அங்கீகாரம் இல்லாத நிலையிலும் நமது சங்கம் கடந்த 2 ஆண்டுகளில் செய்த சாதனைகளை பட்டியலிட்டு, மத்திய சங்கத்திற்கு பாராட்டினை தெரிவித்தார்.

·       இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர்.குருதாஸ் தாஸ் குப்தா, AITUC செயலாளர் தோழர். G.L.தார் ஆகியோரின் முன்முயற்சியாலும் பொதுச்செயலர், தலைவர் ஆகியோரின் தொடர் முயற்சியாலும் BSNLக்கென்று புதிய அங்கீகார விதிகளை உருவாக்கியது.
·      டிஸ்மிஸ் செய்யப்பட்டாலும் DOT காலத்திற்கான பென்சனை பெற்றுத் தந்தது.
·      பதவி உயர்வின்போது மறுக்கப்பட்ட HRA பெற்றுத் தந்தது.
·      அதிகாரிகளைவிட மேம்பட்ட ஊதிய நிர்ணயமுறை
·      பெண் ஊழியர்கள் MRS திட்டத்தில் தனது பெற்றோர் அல்லது கணவரது பெற்றோரை விருப்பத்தின் அடிப்படையில் சேர்த்துக்கொள்ள உத்தரவு.
·      விடுப்பை காசாக்குதல் பணத்திற்கு வருமான வரி விலக்கு பெற்றுத் தந்தது.
·      10 வருட சேவைக்குப்பின் முழு ஓய்வூதியம்
·      கருணை அடிப்படை பணிக்கு 3வருட நிபந்தனை நீக்கம்.
·      2007ல் பதவி உயர்வுக்குப்பின்னர் விருப்ப அடிப்படையில் புதிய ஊதிய நிர்ணயம்
·      கட்டாய மாற்றலில் சென்றவர்கள் திரும்பி வர விருப்ப மாற்றல் வழங்க புதிய முறை.

நாம் வெற்றிபெற ஒவ்வொரு மாநிலச் சங்கமும் எவ்வளவு வாக்குகளை பெறவேண்டும் என புள்ளி விபரங்களுடன் வேண்டுகொள் விடுத்தார்.

நாம் அங்கீகாரத்திற்குப்பின்னர் கவனம் செலுத்த வேண்டிய கோரிக்கைகளை முன்வைத்தார்.

·          SC/ST ஊழியர்களுக்கு பதவி உயர்வில் 1 ஆண்டு சலுகை.
·          கருணை அடிப்படை பணிக்கு SC/ST ஊழியர்களுக்கு 55 புள்ளிகளில் தளர்வு.
·          நிரப்பப்படாத SC/ST காலியிடங்களுக்கு சிறப்பு ஆளெடுப்பு தேர்வு
·          பெண் ஊழியர்களுக்கு மாதத்திற்கு ஒரு நாள் சிறப்பு விடுப்பு
·          மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதைப்போல குழந்தை பராமரிப்பு விடுப்பு
·          B.E, M.B.A  படித்தவர்களுக்கு 10% சிறப்பு ஒதுக்கீடு
  


இறுதியாக பொதுச்செயலரும் தலைவரும் நம்பிக்கை தரக்கூடிய எழுச்சியுரையால் உற்சாகத்துடன் நிறைவுபெற்றது விரிவடைந்த தேசிய  செயற்குழு.




No comments:

Post a Comment