Monday, July 16, 2012




BSNL டவர்கள்  ரிலையன்ஸ் கம்பெனியோடு பங்கீடு?

BSNL தனது டவர்களை (RIL-Reliance Industries limited) ரிலையன்ஸ் கம்பெனியோடு பங்கீடு செய்துகொள்ளப்போகிறது என பைனான்சியல் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது.

ரிலையன்ஸ் கம்பெனி 4G சேவையை (broadband wireless access or BWA) இந்த வருடக் கடைசியில் துவங்கவிருக்கிறது.

இன்றைய மார்க்கெட் நிலவரப்படி மாதம் ரூ.15000 முதல் ரூ.18000 வரையுள்ள வாடகையில் 20 சத தள்ளுபடி விலை செய்து ரூ.12000 என மாத வாடகையை BSNL நிர்ணயம் செய்யப்போவதாக தெரிகிறது.

ரிலையன்ஸ் செய்தி தொடர்பாளரிடம்  இதைப்பற்றிக்கேட்டபோது கருத்துக் கூற மறுத்துவிட்டார்.
BSNL CMD திரு.உபாத்யாயா அவர்கள் பைனான்சியல் எக்ஸ்பிரஸுக்கு அனுப்பியுள்ள செய்தியில அனைத்து மொபைல் ஆபரேட்டர்களுடன் BSNL டவர்களை பங்கீடு செய்வதற்கான உடன்படிக்கை நிறைவடையும் நிலையில் உள்ளது. தற்போது டெல்லிக்கு வெளியில் மீட்டிங்கில் இருக்கிறேன்”.

No comments:

Post a Comment