Sunday, November 3, 2013

அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்

மதுரையில்  போனஸ் கோரி பட்டினிப் போராட்டம்
மாவட்டத் தலைவர் கே.முருகேசன், மாவட்டச் செயலர் எஸ்.சிவகுருநாதன்,STR மாவட்டச் செயலர் பி,ராஜகோபால் ஆகியோர் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தோழர்கள் சேது, மாநில துணைத் தலைவர் லட்சம், மாநில அமைப்புச் செயலர் விஜயரங்கன், திருமங்கலம் ராஜேந்திரன்,K.வேலுச்சாமி, ஆறுமுகம் மற்றும் அதிகாரிகள் சங்க நிர்வாகிகள் வி.கே பரமசிவம்(AIBSNLEA),தெய்வேந்திரன்(SNEA) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் ஜெயராமன் நிறைவுரையாற்றி பட்டினிப்போரை ஜூஸ் கொடுத்து முடித்து வைத்தார்.


Friday, October 11, 2013

மாவட்டச் செயற்குழு

05-10-2013 அன்று கம்பம் நகரில் மாவட்டச் செயற்குழு மாவட்டத் தலைவர் தோழர்.K.முருகேசன் தலைமையில் நடைபெற்றது. மாநிலச் செயலர் தோழர். பட்டாபி கொடியேற்ற, மாவட்டத் துணைச் செயலர் தோழர்.B.சுருளிராஜ் அஞ்சலி செலுத்த, கம்பம் கிளைச் செயலர் தோழர்.ராஜா வரவேற்புரை நிகழ்த்திட, மாநில அமைப்புச் செயலர் தோழர்.சி.விஜயரங்கன் மாவட்டச் செயற்குழுவைத் துவக்கி வைத்து உரையாற்றினார்.

 மாவட்டச் செயலர் தோழர்.S.சிவகுருநாதன் செயல்பாட்டறிக்கையை சமர்ப்பித்தார். மாநிலத் துணைத்தலைவர் தோழர். M. லட்சம், தோழியர். பரிமளம், முன்னாள் மாவட்டச் செயலர் தோழர். ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

கிளைச் செயலர்கள், மாவட்டச் சங்க நிர்வாகிகள், திருமங்கலம் தோழர்.G.ராஜேந்திரன் ஆகியோர் அமைப்புநிலை விவாதத்தில் பங்கேற்று கருத்துக்களை முன்வைத்தனர். மாவட்டச் செயலரின் தொகுப்புரைக்குப் பின் துணைச்செயலர் தோழர்.A.நாகலிங்கம் நன்றி கூற இனிதே நிறைவு பெற்றது மாவட்டச் செயற்குழு. மாநிலச்செயலர் தனது சிறப்புரையில் டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கங்களின் முடிவுகள்,  ஜூனாகத் மத்திய செயற்குழு முடிவுகள், BSNL இன்றைய நிலை, நமது சங்கத்தின் எதிர்கால செயல்பாடுகள்/போராட்டங்கள் பற்றி விரிவாக விளக்கிப் பேசினார்.

மாவட்டச் செயற்குழு ஏற்பாடுகளை தோழர். லட்சம் தலைமையில் கம்பம் கிளைத் தோழர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Monday, October 7, 2013

திருமங்கலம்-புதிய கிளை துவக்க விழா


புதிய கிளை துவக்க விழா
03-10-2013 அன்று திருமங்கலத்தில் BSNLEU சங்கத்தின் முன்னாள் மாவட்டத்தலைவர் தோழர்.G.ராஜேந்திரன் தலைமையில் 13 தோழர்கள் நமது சங்கத்தில் இணைந்துள்ளனர். அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம்.

தோழர்.ஆர்.கே சங்கக் கொடியை விண்ணதிரும் முழக்கங்களுக்கிடையே ஏற்றிவைத்தார். சங்கப்பலகையை தோழர். சேது திறந்துவைத்தார்.

மாவட்டத்த்லைவர்,மாவட்டச் செயலர் தோழர்.சிவகுருநாதன், மாநில துணைத்தலைவர் தோழியர் பரிமளம், தோழர். சேது ஆகியோரின் வாழ்த்துரைக்குப்பின் தோழர். ஆர்.கே சங்கத்தில் இணைந்தோரை வரவேற்று சிறப்புரையாற்றினார். 
 

விஷம் போல் ஏறும் விலைவாசி  கட்டுப்படுத்த இயலா பணவீக்கம்  வேலை இல்லாத்திண்டாட்டம் குறைந்த பட்சக்கூலி பத்தாயிரம் விவசாயிகளுக்கு மானியம் என்று  மக்களை வதைக்கும் 10 அம்ச பிரச்சினைகளை தீர்க்க கோரி 
05-10-2013 அன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மதுரையில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் தோழியர். பத்மாவதி Ex.MLA, மாவட்டச் செயலாளர் தோழர். ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற மறியலில் மாநில சங்கத்தின் சிறப்பு அழைப்பாளரும் வழிகாட்டியுமான  தோழர்.சேது அவர்கள் பங்கேற்று கைதானார்.

Friday, September 27, 2013

தேசப்பிதா மகாத்மா காந்தி சிலை திறப்புவிழா 
மதுரை தல்லாகுளம் CSC அருகில் உள்ள தேசப்பிதா மகாத்மா காந்தி சிலையை சீர்படுத்த வேண்டுமென மாவட்ட மாநாட்டில் கோரிக்கை வைக்கப்பட்டது. 
நிர்வாகத்திலிருந்து செய்வதைவிட மதுரை நகரத்திலுள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பங்களிப்போடு இப்பணியை மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது. 
GM அவர்கள் நன்கொடை தந்து துவக்கிவைக்க ஊழியர்கள்/அதிகாரிகள் நன்கொடையினை அள்ளித்தந்தனர்.
21-09-2013 அன்று GM அவர்கள் தலைமையில் CGM அவர்கள் புனரமைக்கப்பட்ட காந்தி சிலையை திறந்துவைத்தார்.   
 
 
 நன்கொடை தந்திட்ட அனைவருக்கும் மற்றும் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றி!