05-10-2013 அன்று கம்பம் நகரில் மாவட்டச் செயற்குழு மாவட்டத் தலைவர் தோழர்.K.முருகேசன் தலைமையில் நடைபெற்றது. மாநிலச் செயலர் தோழர். பட்டாபி கொடியேற்ற, மாவட்டத் துணைச் செயலர் தோழர்.B.சுருளிராஜ் அஞ்சலி செலுத்த, கம்பம் கிளைச் செயலர் தோழர்.ராஜா வரவேற்புரை நிகழ்த்திட, மாநில அமைப்புச் செயலர் தோழர்.சி.விஜயரங்கன் மாவட்டச் செயற்குழுவைத் துவக்கி வைத்து உரையாற்றினார்.
மாவட்டச் செயலர் தோழர்.S.சிவகுருநாதன் செயல்பாட்டறிக்கையை சமர்ப்பித்தார். மாநிலத் துணைத்தலைவர் தோழர். M. லட்சம், தோழியர். பரிமளம், முன்னாள் மாவட்டச் செயலர் தோழர். ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கிளைச் செயலர்கள், மாவட்டச் சங்க நிர்வாகிகள், திருமங்கலம் தோழர்.G.ராஜேந்திரன் ஆகியோர் அமைப்புநிலை விவாதத்தில் பங்கேற்று கருத்துக்களை முன்வைத்தனர். மாவட்டச் செயலரின் தொகுப்புரைக்குப் பின் துணைச்செயலர் தோழர்.A.நாகலிங்கம் நன்றி கூற இனிதே நிறைவு பெற்றது மாவட்டச் செயற்குழு. மாநிலச்செயலர் தனது சிறப்புரையில் டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கங்களின் முடிவுகள், ஜூனாகத் மத்திய செயற்குழு முடிவுகள், BSNL இன்றைய நிலை, நமது சங்கத்தின் எதிர்கால செயல்பாடுகள்/போராட்டங்கள் பற்றி விரிவாக விளக்கிப் பேசினார்.
மாவட்டச் செயற்குழு ஏற்பாடுகளை தோழர். லட்சம் தலைமையில் கம்பம் கிளைத் தோழர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

No comments:
Post a Comment