Monday, October 7, 2013

திருமங்கலம்-புதிய கிளை துவக்க விழா


புதிய கிளை துவக்க விழா
03-10-2013 அன்று திருமங்கலத்தில் BSNLEU சங்கத்தின் முன்னாள் மாவட்டத்தலைவர் தோழர்.G.ராஜேந்திரன் தலைமையில் 13 தோழர்கள் நமது சங்கத்தில் இணைந்துள்ளனர். அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம்.

தோழர்.ஆர்.கே சங்கக் கொடியை விண்ணதிரும் முழக்கங்களுக்கிடையே ஏற்றிவைத்தார். சங்கப்பலகையை தோழர். சேது திறந்துவைத்தார்.

மாவட்டத்த்லைவர்,மாவட்டச் செயலர் தோழர்.சிவகுருநாதன், மாநில துணைத்தலைவர் தோழியர் பரிமளம், தோழர். சேது ஆகியோரின் வாழ்த்துரைக்குப்பின் தோழர். ஆர்.கே சங்கத்தில் இணைந்தோரை வரவேற்று சிறப்புரையாற்றினார். 
 

விஷம் போல் ஏறும் விலைவாசி  கட்டுப்படுத்த இயலா பணவீக்கம்  வேலை இல்லாத்திண்டாட்டம் குறைந்த பட்சக்கூலி பத்தாயிரம் விவசாயிகளுக்கு மானியம் என்று  மக்களை வதைக்கும் 10 அம்ச பிரச்சினைகளை தீர்க்க கோரி 
05-10-2013 அன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மதுரையில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் தோழியர். பத்மாவதி Ex.MLA, மாவட்டச் செயலாளர் தோழர். ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற மறியலில் மாநில சங்கத்தின் சிறப்பு அழைப்பாளரும் வழிகாட்டியுமான  தோழர்.சேது அவர்கள் பங்கேற்று கைதானார்.

No comments:

Post a Comment