Tuesday, September 11, 2012

CHQ செய்திகள்:



78.2% IDA இணைப்பிற்கான கோப்பு DOTயின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.


ஏற்கனவே நடைபெற்ற JAOPart-II தேர்வில் தேர்ச்சி பெற்ற பாடங்களுக்கு விலக்கு அளிக்கக்கோரி நிர்வாகத்திற்கு மத்திய சங்கம் கடிதம் எழுதியுள்ளது.


ஏற்கனவே நடைபெற்ற TTA தேர்வெழுவதற்கான தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை மீண்டும் தேர்வெழுத நிர்பந்திக்காமல் விலக்கு அளிக்க வேண்டும் என NFTE-BSNL நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
NE -12 ஊதிய விகிதத்திற்கான உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
ஊதிய விகிதம் ரூ.16390 - 33830
22-02-2012 தேதியிலிருந்து அமுலாக்கப்படும்.
உத்தரவு எண்: Corporate Office TE Section No: 27-7/2008-TE-II(Up-gradation) Dated 11-09-2012

Monday, September 10, 2012

       தமிழ் மாநில செயற்குழு
  •  மத்திய செயற்குழு உற்சாகத்துடன் நடந்து முடிந்த வேளையில்,
  • 78.2% IDA இணைப்பு BSNL Management Committee, BSNL Board இவைகளைக்கடந்து  DOTக்கு ஒப்புதலுக்கு செல்லும் வேளையில்
  • லேண்ட்லைன்/பிராட்பேண்ட் சரண்டரை தடுத்து புதிய இணைப்புகளை அதிகப்படுத்த நிர்வாகம்,தொழிற்சங்கங்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து பணியாற்ற வேண்டிய சூழ்நிலையில்
தமிழ் மாநில செயற்குழு வரும் அக்டோபர் 7ந்தேதி ஞாயிற்றுக்கிழமை மதுரை GM அலுவலக மனமகிழ் மன்றத்தில் நடைபெறவிருக்கிறது.
மாநில செயற்குழுவிற்கு வருகை தரும் மாநிலச் சங்க நிர்வாகிகள், மத்திய சங்க நிர்வாகிகள், மாவட்டச் செயலர்கள் அனைவரையும் மதுரை மாவட்டச் சங்கத்தின் சார்பாகவும் 4வது மாநில மாநாட்டின் வரவேற்புக்குழுவின் சார்பாகவும் வருக! வருக!! என வரவேற்கிறோம்
நம்பிக்கை தந்திட்ட கருத்தரங்கம்:
மதுரை SSAவில் 08-09-2012 அன்று நிர்வாகமும் அனைத்துச் சங்கங்களும் இணைந்து நமது தரைவழி / பிராட்பேண்ட்/ மொபைல் சேவை பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கத்தை நடத்தியது.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள்/ஊழியர்கள் 150 பேர் பங்கேற்றனர்.
  • தயாரித்து வழங்கப்பட்ட 45 கேள்விகளுக்கு கலந்துகொண்ட அனைவரும் தங்களது பகுதியிலுள்ள அனைத்து அதிகாரிகள்/ஊழியர்களின் கருத்துக்களை எழுத்து மூலம் பதிவு செய்தனர்.
  • DGM(HR) துவக்கவுரை நிகழ்த்த அனைத்து மாவட்டச் செயலர்களும் அதிகாரிகளும்/ஊழியர்களும் விவாதத்தில் பங்கேற்றனர்.
  • மதுரை அமெரிக்கன் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் முனைவர் திரு.பிரபாகரன் அவர்கள் விழிப்புணர்வு உரையாற்றினார்.
இறுதியாக GM அவர்கள் தொகுக்கப்பட்ட கருத்துக்களுக்கு விளக்கமளித்து உரையாற்றினார். லேண்ட்லைன் சரண்டரை கூட்டாக சேர்ந்து தடுப்பது, பிராட்பேண்ட் எண்ணிக்கையை அதிகரிப்பது, புதிய இணைப்பு/ MNP மூலமாக மொபைல் எண்ணிக்கையை உயர்த்துவது, அதன் மூலம் மதுரை மாவட்ட வருவாயை உயர்த்துவது என நமது கடமையை இணைந்து செய்திடுவோம் எனக்கூறி கருத்தரங்கை நிறைவு செய்தார்.
இந்த கருத்தரங்கம் அதிகாரிகள்/ஊழியர்களிடையே ஒரு உத்வேகத்தை / இணைந்து பணியாற்றக்கூடிய சூழ்நிலையை  ஏற்படுத்தும், அதன்மூலம் மதுரை SSA வளர்ச்சியை நோக்கி  நடைபோடும் என்று நம்புகிறோம். 

Thursday, September 6, 2012

ஆளெடுப்பு விதிகள்(Recruitment Rules):

TTA ஆளெடுப்பு விதிகளுக்கு  BSNL போர்டு ஒப்புதல் அளித்துள்ளது. அதனடிப்படையில் 10+2 தகுதி இல்லாதவர்களுக்கு அதற்கான தகுதித் தேர்வு நடத்தப்பட இருக்கிறது.

TM ஆளெடுப்பு விதிகளுக்கு BSNL போர்டு ஒப்புதல் அளித்துள்ளது. மெட்ரிக்குலேசன் அடிப்படை தகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பென்சன் போராட்டம்:
செப்டம்பர் 2000 போராட்டத்தில் முதன்மையான கோரிக்கை BSNLல் சேர்ந்த பின்பும் அரசு பென்சன் தொடர வேண்டும் என்பது. அதுமட்டுமல்ல BSNLல் சேர்ந்த பின்பு ஏதோ ஒரு காரணத்திற்காக டிஸ்மிஸ் செய்யப்பட்டாலும் DOTல் பணிபுரிந்த காலத்திற்கான பென்சன் தரப்பட வேண்டும் என்பது உடன்பாடு.
அஎத உடன்பாட்டின் அம்சம் இதுவரை அமுலாக்கப்படவில்லை. தொடர்ந்து நமது மாநிலச் சங்கம் வற்புறுத்தியதின் விளைவாக மத்திய சங்கத்தின் தொடர் முயற்சியால் இன்று உத்த்ரவு வெளியாகியுள்ளது.
தோழர். குப்தாவின் தீர்க்கதரிசன, மனித நேய உடன்பாட்டை அமுலுக்கு கொண்டுவர பாடுபட்ட தமிழ் மாநிலச் செயலர் தோழர்.பட்டாபிக்கும் மத்திய சங்கத் தலைவர்களுக்கும் வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம்.
உள்ளே! வெளியே!!
12 ண்டுகளாக  ITS அதிகாரிகள், நமது BSNL நிறுவனத்திற்குள் வராமல் அடம்பிடித்துகொண்டு  தானடித்த மூப்பாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர்,இவர்களுக்கு வக்காலத்து வாங்கும் வகையில் நமது நிறுவனமும், மேலும் ITS களுக்கு வலுசேர்க்கும் வகையில் DEPUTATION  நீடிக்கும் வகையாக
செயல்படுவது நமது நிறுவனத்தை சீரழிக்கவே பயன்படும்,
எனவே நிறுவனம் காக்க ஊழியர்கள்/ அதிகாரிகள் இணைந்து நடத்தும் உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் 18-09-2012 அன்று நடத்த நமது அகில இந்திய தலைமை அறைகூவல் விடுத்துள்ளது