Thursday, July 19, 2012

IDA உத்தரவு

ஜூலை முதல் உயர்ந்துள்ள 4.8 சத IDAவிற்கான உத்தரவு வெளியாகியுள்ளது.

உத்தரவு எண்: No.14-1/2012 PAT(BSNL)  Date 19.07.2012
கலைஞர் டிவிக்கு வந்த ரூ.52 கோடி: ஜே.பி.சி சந்தேகம் எழுப்புகிறது.
 
கலைஞர் டிவி கடனாகப்பெற்ற ரூ.200 கோடியைத் திருப்பிச் செலுத்துவதற்காகப் பல வழிகளில் பணம் திரட்டப்பட்டுள்ளது. இதில் கொல்கட்டாவை மையமாகக் கொண்டு செயல்படும் 18 நிறுவனங்கள் டிவி சேனலுக்கு ரூ.52 கோடி அளித்துள்ளன. இதற்கு பங்குகள் ஏதும் ஒதுக்கப்படாமலேயே இந்த தொகை திரட்ட்டப்பட்டுள்ளது. இந்த 18 நிறுவனங்களும் போலியானவை என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிறுவனங்களின்  முந்தைய கால நடவடிக்கைகள் குறித்து விசாரித்து வருவதாக மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம் பாராளுமன்ற கூட்டுக்குழுவிடம் தெரிவித்துள்ளது.

Tuesday, July 17, 2012

மதுரையில் நடக்கவிருக்கும் மாநில மாநாட்டுக்கு நிதியை அள்ளித் தாருங்கள்.
அதே நேரத்தில் மாநாட்டை வெகு சிறப்பாக நடத்துவதற்கான உங்கள் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் வரவேற்கிறோம்.
 
உங்களது ஆலோசனைகளையும் கருத்துக்களையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
தோழர். ஞானையாவுடன் சந்திப்பு:
      நமது இயக்கத்தின் மூத்த தலைவர்கள் இன்றும் நாளையும் தோழர். ஞானையாவுடன் கடந்த கால அரசியல், தொழிற்சங்க நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ளவிருக்கின்றனர்.

Monday, July 16, 2012




BSNL டவர்கள்  ரிலையன்ஸ் கம்பெனியோடு பங்கீடு?

BSNL தனது டவர்களை (RIL-Reliance Industries limited) ரிலையன்ஸ் கம்பெனியோடு பங்கீடு செய்துகொள்ளப்போகிறது என பைனான்சியல் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது.

ரிலையன்ஸ் கம்பெனி 4G சேவையை (broadband wireless access or BWA) இந்த வருடக் கடைசியில் துவங்கவிருக்கிறது.

இன்றைய மார்க்கெட் நிலவரப்படி மாதம் ரூ.15000 முதல் ரூ.18000 வரையுள்ள வாடகையில் 20 சத தள்ளுபடி விலை செய்து ரூ.12000 என மாத வாடகையை BSNL நிர்ணயம் செய்யப்போவதாக தெரிகிறது.

ரிலையன்ஸ் செய்தி தொடர்பாளரிடம்  இதைப்பற்றிக்கேட்டபோது கருத்துக் கூற மறுத்துவிட்டார்.
BSNL CMD திரு.உபாத்யாயா அவர்கள் பைனான்சியல் எக்ஸ்பிரஸுக்கு அனுப்பியுள்ள செய்தியில அனைத்து மொபைல் ஆபரேட்டர்களுடன் BSNL டவர்களை பங்கீடு செய்வதற்கான உடன்படிக்கை நிறைவடையும் நிலையில் உள்ளது. தற்போது டெல்லிக்கு வெளியில் மீட்டிங்கில் இருக்கிறேன்”.

Wednesday, July 11, 2012

ஜூலை 2012 முதல் உயர்த்தப்படவேண்டிய IDA 4.8%க்கான DPE உத்தரவு வெளியாகியுள்ளது.

BSNL உத்தரவு விரைவில் வெளிவரும்.

Sunday, July 8, 2012

GPF பட்டுவாடா

GPF பட்டுவாடா...

GPF பட்டுவாடா சம்பந்தமாக கார்ப்பரேட் அலுவலகம் புதிய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
விண்ணப்பங்கள் பிரதிமாதம் 20ந்தேதிக்குள் தரப்படவேண்டும்.
25ந்தேதி  ஒப்புதல் பெறப்பட்டு

முதல் வாரத்தில்  பணமிருந்தால் மட்டுமே GPF பணப்பட்டுவாடா செய்யப்படும்.
GPF பட்டுவாடாவிற்கு சில ஒழுங்குமுறைகளை ஏற்படுத்துவதில் தவறில்லை. ஆனால் பணமிருந்தால் மட்டுமே என்பது சரியல்ல.
GPF என்பது ஊழியர்களின் சேமிப்பு பணம். அதை  தடுப்பது நியாயமற்ற செயல்.
தலமட்டங்களில் GPF என்பது ஊழியர்களின் மாதாந்திர வாழ்வாதார பிரச்னை.
ஆகவே உடனடியாக தலையிட்டு பிரச்னையை தீர்க்க வேண்டும் என மாநிலச் சங்கம் மத்திய சங்கத்தை வலியுறுத்தியுள்ளது.