டிசம்பர் 5 - அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகள்
மற்றும் தனியார்மய திட்டங்களை கைவிட வலியுறுத்தி, தொழிற்சங்கங்கள் இணைந்து
மதுரையில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தின.
எச்.எம்.எஸ்., ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ., ஐ.என்.டி.யூ.சி., திமுக
தொழிற்சங்கம் ஆகியன இணைந்து, மதுரை தலைமை தபால் நிலையம் முன்பு இந்த ஆர்ப்பாட்டத்தை
நடத்தின. அப்போது தொழிலாளர் சட்டங்களில் திருத்தம் கொண்டுவருவது, ரயில்வே
நிலையங்களை தனியார்மயமாக்குவது, காப்பீடு துறையில் அன்னிய முதலீடு ஆகிய மத்திய அரசின்
நடவடிக்கைகளை கைவிடுமாறு, ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இதில், ஏ.ஐ.டி.யூ.சி
சார்பில் நந்தாசிங், சி.ஐ.டி.யூ சார்பில் கருமலையான், ஐஎன்டியூசி சார்பில்
கே.எஸ். கோவிந்தராஜன், எச்எம்எஸ் சங்கம் சார்பில் மதுரை கோட்ட எஸ்ஆர்எம்யூ செயலர்
ஜெ.எம். ரபீக், உதவிச் செயலர் ராம்குமார், திமுக தொழிற்சங்கம்
சார்பில் மகேஸ்வரி முருகன் ஆகியோர் பேசினர்.
No comments:
Post a Comment