Friday, December 26, 2014


AITUC 18வது தமிழ் மாநில மாநாடு
டிசம்பர் 27,28- 2014 , தேனி
NFTE -BSNL தமிழ் மாநிலச் செயலர் தோழர். பட்டாபியும்
சென்னை தொலைபேசி மாநிலச் செயலர் மதிவாணன் அவர்களும் வாழ்த்துரை வழங்கவிருக்கின்றார்கள்.

தோழர்கள் SSG, காமராஜ், செல்வம்,விஜய் ஆரோக்கியராஜ் ஆகியோர் பிரதிநிதிகளாக பங்கேற்கவிருக்கின்றனர்


Thursday, December 25, 2014

இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!

Wednesday, December 24, 2014

தந்தை பெரியார் நினைவு தினம் - டிசம்பர் 24
          
  • கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.
  • ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்
  • பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு அளவுக்கு மீறிய நாணயமும், கட்டுப்பாடும், உறுதியும், தியாக உணர்வும் வேண்டும்.
  • என்னைப் பொறுத்தமட்டில், நான் ஒழுக்கத்துடன் நடந்தால், உண்மையை ஒழிக்காமல் எதையும் நேர்மையுடன் கடைப்பிடித்தால், அதற்கு தனிசக்தி உண்டு என்பதை நம்புகிறவன்.
க(த)ண்ணீர் ! க(த)ண்ணீர்!! அஞ்சலி!!!
தென்னிந்திய சினிமாவை புதிய கோணத்தில் படைத்தவர்.
ஆசிரியர், அலுவலக எழுத்தர், பின் நாடகத்துறை, சினிமா, சின்னத்திரை என பல்வேறு தளங்களில் தடம் பதித்தவர்.
மனித உறவுச் சிக்கல்களையும் உளவியல் சிக்கல்களையும் மூட நம்பிக்கைகளையும் படமாக படைத்தவர்.
கலைமாமணி, பத்மஸ்ரீ, தாதா பால்கே சாகேப்  விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது என சிகரம் தொட்டவர்.


Monday, December 15, 2014

மதுரை மாவட்ட மாநாடு 13-12-2014 அன்று GM அலுவலக மனமகிழ் மன்றத்தில் மாவட்டத் தலைவர் K.முருகேசன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. மாநிலச் செயலர் தோழர். பட்டாபி, தோழர். சேது, லட்சம், பரிமளம், காரைக்குடி மாவட்டச் செயலர் மாரி, விருதுநகர் மாவட்டச் செயலர் சக்கணன், இளைஞர் அணி சுபேதார்(காரைக்குடி), ரமேஷ்(விருதுநகர்),  மதுரை பொதுமேலாளர் திருமதி S.E.ராஜம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மாவட்டத் தலைவர் முருகேசன் முன்மொழிய கீழ்க்கண்ட  நிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவர்.                  தோழர். G. ராஜேந்திரன், TM,திருமங்கலம்
துணைத்             தோழர்கள். K.R.கலாவதி, STSO,தல்லாகுளம்
தலைவர்கள்.                             I.சுரேஷ்பாபு, TM, பட்டிவீரன்பட்டி
                                                          B.சுருளிராஜ், TM, கம்பம்
                                                          S.ஜோதிநாதன்,TM, எல்லீஸ்நகர்
செயலாளர்              தோழர். S.சிவகுருநாதன், SSO, GMஅலுவலகம்
துணைச்             தோழர்கள்  S.கோவிந்தராஜ், TM, திண்டுக்கல்
செயலாளர்கள்                         A.நாகலிங்கம், TM, GMஅலுவலகம்
                                                           S.பத்ரிநாராயணன், TM,பெருங்குடி
                                                           S.கிருஷ்ணமூர்த்தி,TTA,திண்டுக்கல்
பொருளாளர்            தோழர். D.செந்தில்குமார், TM,GMஅலுவலகம்
அமைப்பு                                     . R.ராஜேந்திரன், TM,மேலூர்
 செயலாளர்கள்                        S.கணேசன், TM, வத்தலக்குண்டு
                                                          M.ராஜ்குமார், TTA, கீழமாசிவீதி
                                                          R.ராஜசேகரன், TM, தல்லாகுளம்
சிறப்பு                 தோழர்கள்  இந்திராணி சுந்தர்ராஜ்,STM, GM office
அழைப்பாளர்கள்                    K.அழகர்சாமி, TM, NCR Exge, மதுரை
                                                          S.ஆனந்தராஜ், TM, பெரியகுளம்
                                                         வீரராகவன் TM, திண்டுக்கல்

Friday, December 12, 2014

”மதுரையில் கையெழுத்து இயக்கம் துவங்கியது”
"SAVE BSNL" என்ற முழக்கத்தோடு 1 கோடி பொதுமக்களிடம் கையெழுத்து பெறுவதற்கான முதற்கூட்டம் மதுரை வடக்குமாசிவீதி தொலைபேசியகம் (மீனாட்சி அம்மன் கோவில் அருகில்) முன்பாக NFTE மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமையில் துவங்கியது. 
மக்கள் பிரதிநிதியான மதுரை தெற்கு தொகுதி MLA  தோழர்.ஆர்.அண்ணாதுரை முதல் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். 
 K.முருகேசன் (NFTE-BSNL) தலைமையுரை
 கன்வீனர் S.சூரியன் (BSNLEU) வரவேற்புரை
 D.மகேஸ்வரி (TEPU) கோரிக்கை விளக்கவுரை
 V.K.பரமசிவம் (AIBSNLEA) கோரிக்கை விளக்கவுரை
S.கணேசன் SNEA அவர்கள் தோழர். அண்ணாதுரை MLA அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்கிறார்.  
N. சுரேஷ்குமார் பொதுச் செயலர் இன்சூரன்ஸ் AIIEA வாழ்த்துரை
























R.அண்ணாதுரை MLA அவர்கள் முதல் கையெழுத்திட்டு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைக்கிறார்.


















தோழர்.R.அண்ணாதுரை MLA அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்.

Thursday, December 11, 2014

Joint Forum சார்பாக மதியம் 1 மணிக்கு GM அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் NFTE மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது.
TEPU மாவட்டச் செயலர் முருகன், SNEA மாநில உதவிச் செயலர் கணேசன், AIBSNLEA CHQ Advisor V.K.பரமசிவம் , BSNLEU மாவட்டச் செயலர் சூரியன் ஆகியோர் போராட்ட கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.











நன்றி!
துணையை இழந்து துயருறும் நம் தோழனின் தோள் பற்றி ஆறுதல் சொல்ல தோழர்கள் சேது, லட்சம், சிவகுருநாதன், முருகேசன் ஆகியோரோடு மதுரை மாவட்டம் முழுவதுமிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் திரண்டனர்.
திண்டுக்கல் கோட்டத்திலிருந்து அதிகாரிகள் மற்றும் அனைத்துச் சங்க தோழர்களும் திரண்டனர்.

மாநிலச் செயலரோ சென்னையிலிருந்து ஓடோடி வந்திட்டார்.

மாநிலச் சங்க நிர்வாகிகள் தோழர்கள் மாரியுடன் 2 தோழர்கள்(காரைக்குடி), ராபர்ட்ஸ், சுப்பராயன் (கோவை), பரிமளம்(மதுரை), மனோகரன்,சுந்தரம், சித்துராஜ்(திருச்சி)

TEPU சங்கத்தின் மாநிலச் செயலர் தோழர். செல்லப்பாண்டியன்,மாவட்டச் செயலர் தோழர்.முருகன் மற்றும் நிர்வாகிகள் நேரு, சூரப்பன்

BSNLEU மாவட்டச் செயலர் தோழர். சூரியன், மற்றும்  நிர்வாகிகள் செல்வின் சத்யராஜ், ஜான் போர்ஜியா

ஆகியோர் நேரில் வந்து தோழர். விஜயரங்கனுக்கு ஆறுதல் சொல்லினர்.

துயறுரும் தோழனுக்கு கொட்டும் மழையிலும் ஓடி வந்து ஆறுதல் தந்திட்ட அனைவருக்கும் மதுரை மாவட்டச் சங்கத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


Tuesday, December 9, 2014

30-11-2014 அன்று சிவகங்கை அஞ்சல் கோட்ட ஊழியர்கள் நடத்திய 
NFPTE வைரவிழா மற்றும் தொழிற்சங்க கருத்தரங்கத்தில்
முன்னாள் NFPTE பொதுச் செயலாளர் தோழர்.D. ஞானையா அவர்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதி ........இங்கே சொடுக்கவும்


Monday, December 8, 2014

மதுரை மாவட்ட மாநாடு
13-12-2014 சனிக்கிழமை, TRC GM அலுவலகம்




Sunday, December 7, 2014

06-12-2014 அன்று திண்டுக்கல் Indoor,Outdoor, Rural கிளைகளின் இணைந்த மாநாடு தோழர்கள் C.பழனியாண்டி, பாலுச்சாமி, வெள்ளைச்சாமி ஆகியோரின் கூட்டுத் தலைமையில் சிறப்புடன் நடைபெற்றது.
மாநில மாவட்டச் சங்க நிர்வாகிகள் தோழர்கள் சேது, லட்சம், விஜயரங்கன், சிவகுருநாதன், முருகேசன், கோவிந்தராஜ், செபஸ்டியான் ஜெரோம், நாகலிங்கம், செந்தில்குமார், சுரேஷ்பாபு, கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



Saturday, December 6, 2014

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பி மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மதுரை மாநகர மாவட்டச் செயலர் தோழர். R.ஜெயராமன் தலைமையில் ஊர்வலமாகச் சென்று மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அந் நிகழ்வில் NFTE சார்பாக தோழர்கள் சேது, முருகேசன், நாகலிங்கம், விஸ்வநாதன், கனகவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.


டிசம்பர் 6 - அண்ணல் அம்பேத்கார் நினைவு தினம் 



ங்ள்... 
அன்பை வளர்க்க வேண்டும்...
வெறித்தனத்தை ஒழிக்க வேண்டும்..

சமத்துவத்தை வளர்க்க வேண்டும்.. 
அடிமைத்தனத்தை ஒழிக்க வேண்டும்..

சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டும்...
வேற்றுமையை ஒழிக்க வேண்டும்....

-அண்ணல் அம்பேத்கார்- 
டிசம்பர் 5  - அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் மற்றும் தனியார்மய திட்டங்களை கைவிட வலியுறுத்தி, தொழிற்சங்கங்கள் இணைந்து மதுரையில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தின.
எச்.எம்.எஸ்., ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ., ஐ.என்.டி.யூ.சி., திமுக தொழிற்சங்கம் ஆகியன இணைந்து, மதுரை தலைமை தபால் நிலையம் முன்பு இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தின. அப்போது தொழிலாளர் சட்டங்களில் திருத்தம் கொண்டுவருவது, ரயில்வே நிலையங்களை தனியார்மயமாக்குவது, காப்பீடு துறையில் அன்னிய முதலீடு ஆகிய மத்திய அரசின் நடவடிக்கைகளை கைவிடுமாறு, ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இதில்,  ஏ.ஐ.டி.யூ.சி சார்பில் நந்தாசிங், சி.ஐ.டி.யூ சார்பில் கருமலையான், ஐஎன்டியூசி சார்பில் கே.எஸ். கோவிந்தராஜன், எச்எம்எஸ் சங்கம் சார்பில் மதுரை கோட்ட எஸ்ஆர்எம்யூ செயலர் ஜெ.எம். ரபீக், உதவிச் செயலர் ராம்குமார், திமுக தொழிற்சங்கம் சார்பில் மகேஸ்வரி முருகன் ஆகியோர் பேசினர். 

Thursday, December 4, 2014

நீதியரசர் V.R.கிருஷ்ணய்யர் அவர்களுக்கு அஞ்சலி

சிறந்த சட்ட நிபுணரான கிருஷ்ணய்யர், இந்தியாவில் மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக குரல் கொடுத்து வந்தவர். இதற்காக வாய்ப்பு கிடைக்கும் இடங்களிலெல்லாம் பேசியும் வந்தவர். மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் அமைச்சரவையில் கேரளாவில் அமைச்சராக இருந்துள்ளார்.
கேரள உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றியவர். பின்னர் உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றினார். அப்போது பல வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்புகளை கூறியவர்.
வாழ்த்துகிறோம்
19-10-2014 அன்று நடைபெற்ற TM தேர்வில் மதுரை மாவட்டத்தில் கீழ்க்கண்ட தோழர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 
V. செந்தில்குமார், சின்னமனூர்
A. அருண், GM அலுவலகம், மதுரை
R. ரமேஷ்குமார், திருமங்கலம்
A. A. கிரி, திருப்பாலை, மதுரை
P. செல்லம், உசிலம்பட்டி
P. ஹேமலதா, GM அலுவலகம், மதுரை
P. சங்கர், பெரியகுளம்
S. வேல்முருகன், தேனி
வெற்றி பெற்ற தோழர்களுக்கு மதுரை மாவட்டச் சங்கத்தின் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

Tuesday, December 2, 2014

போராடும் வங்கி ஊழியர்களுக்கு வாழ்த்துக்கள்!

தமிழகம், புதுவை உள்ளிட்ட ஆறு மாநிலங்களைச் சேர்ந்த 1.5 லட்சம் வங்கி ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை (டிச.2) வேலைநிறுத்தம் செய்கின்றனர்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக மும்பையில் இந்திய வங்கிகள் நிர்வாக அமைப்பின் உயர் அதிகாரிகளுடன் வங்கி ஊழியர் சங்க நிர்வாகிகள் திங்கள்கிழமை நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
ஊதிய உயர்வு விகிதத்தில்தான் பிரச்னை: ""ஊதிய உயர்வை கடந்த 2012-ஆம் ஆண்டு நவம்பர் முதல் செயல்படுத்த இந்திய வங்கிகள் நிர்வாக அமைப்பின் உயர் அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர்.
எனினும், ஊதிய உயர்வு விகிதத்தை 23 சதவீதத்திலிருந்து ஓரளவு குறைத்துக் கொள்வதாக திங்கள்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஊழியர் தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியபோதிலும், 11 சதவீத ஊதிய உயர்வுதான் அளிக்க முடியும் என்ற பழைய நிலைப்பாட்டிலிருந்து மாற முடியாது என நிர்வாக அமைப்பினர் கூறி விட்டனர். இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது'' என்றார் சி.எச். வெங்கடாசலம்.
பிற மாநிலங்களில்...இதே போன்று, தில்லி, பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் டிசம்பர் 3-ஆம் தேதியும், மேற்கு வங்கம், ஒடிஸா, பிகார், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் டிசம்பர் 4-ஆம் தேதியும், மகாராஷ்டிரம், குஜராத், கோவா ஆகிய மாநிலங்களில் டிசம்பர் 5-ஆம் தேதியும் வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் வெல்லட்டும்.

Monday, December 1, 2014

செய்திகள்

  •  இன்று 01/12/2014 முதல் தமிழகத்தில் ERP முறை அமுல்படுத்தப்படுகின்றது. BLACKOUT PERIOD என்னும் பணிகளற்ற காலம் 10/12/2014 வரை டைப்பிடிக்கப்படும்.  15/12/2014லில் இருந்து ERP திட்டம் நடைமுறையில் செயல்படுத்தப்படும்.
  •  MTNL - BSNL  இணைப்பு பற்றி அரசு தீவிரமாக சிந்தித்து வருவதாகவும் அது பற்றி பரிசீலிக்க 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மேல்சபையில் கேள்வி நேரத்தில் நம்து துறை அமைச்சர் பதில் அளித்துள்ளார்.  
  • மேலும் விருப்ப ஓய்வு மற்றும் ஊழியர்களின் சம்பளச்சுமையில் ஒரு பகுதியை அரசே ஏற்றுக்கொள்ளுதல் போன்ற முந்தைய அரசின் பரிந்துரையின் மீது இன்னும்  முடிவெடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

  • அக்டோபர் 2014க்கான விலைவாசிப்படி உயர்வில் மாற்றமில்லை என்று கூறப்படுகின்றது. ஜனவரி 2015 விலைவாசிப்படி உயராமலோ  அல்லது குறைந்தோ போகலாம்.
  • மாற்றல் பிரச்சினைகளில் இருந்து உடல் ஊனமுற்ற ஊழியர்களுக்கு விலக்கு அளித்து BSNL  நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது. உடல் ஊனமுற்ற குழந்தைகள் இருந்தால்   அவர்களுக்கும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  • டிசம்பர் 5 அன்று அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் இணைந்து  மாநிலத் தலைநகரங்களில் மத்திய அரசின் ஊழியர் சட்டங்களை திருத்தும் போக்கிற்கு கண்டனம் தெரிவித்து எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கின்றன. 



Saturday, November 29, 2014

29-11-2014 அன்று மதுரையில் STR-STP சென்னை மற்றும் தமிழ்நாடு மாவட்டச் சங்கங்களின் இணைப்பு மாநாடு தோழர்கள் V.P.காத்தபெருமாள், S.M.கோவிந்தராஜன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.தோழர்கள் சுந்தர்பாபு,ராமகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்புரையாற்றினர். தோழர் அருணாசலம் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்.
தோழர். சேது மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார்.AIBSNLEA மாநிலச் செயலர் தோழர்.A.சிவக்குமார் வாழ்த்துரை வழங்கினார். அவரைத் தொடர்ந்து தோழர்கள் P.காமராஜ்,  மத்திய சஙக சிறப்பு அழைப்பாளர், புதுவை, மனோகரன், மாநில துணைத்தலைவர், திருச்சி
விஜயரங்கன்,மாநில அமைப்புச் செயலர், திண்டுக்கல், பரிமளம், மாநில துணைத் தலைவர்,
அல்லிராஜா, மாவட்டச் செயலர், வேலூர்,சிவகுருநாதன், மாவட்டச் செயலர்,மதுரை
முருகேசன், மாவட்டத் தலைவர், மதுரை வாழ்த்துரை வழங்கினர்.
மாநிலச் செயலர் தோழர். பட்டாபி சிறப்புரையாற்றினார்.
தோழர். ஆர்.கே நிறைவுப் பேருரையாற்ற
தோழர். மோகன்குமார் நன்றி கூற மாநாடு சிறப்புடன் முடிவடைந்தது.
புதிய நிர்வாகிகளாக தோழர்.P.ராஜகோபால் , R.அன்பழகன், S..M.கோவிந்தராஜன் ஆகியோர் முறையே தலைவர், செயலாளர், பொருளாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதிய நிர்வாகிகளுக்கு மதுரை மாவட்டச் சங்கத்தின் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.