மகளிர் தின நல்வாழ்த்துக்கள்
சுற்றறிக்கை:
அனைவருக்கும் புரட்சிகர மகளிர் தின வாழ்த்துக்கள்.
மார்ச் 8-ம் தேதியை உலக மகளிர் தினமாக நாம் கொண்டாடி வருகிறோம். வீட்டிற்குள்ளே இருந்த பெண் சமுதாயம் தற்போது வானில் பறந்து கொண்டிருக்கிறது என்றால், அதற்கு வித்திட்ட பல்வேறு போராட்டங்களின் வெற்றி தினமே இந்த மகளிர் தினமாகும்..
மார்ச் 8-ம் தேதிக்கும், மகளிருக்கும் என்ன சம்பந்தம் என்று உழைக்கும் கீழ்த்தட்டுப் பெண் வர்க்கமே அறிந்து கொள்ளாத தினமாகத்தான் இந்தப் பெண்கள் தினம் இன்றும் இருக்கிறது.சர்வதேச மகளிர் தினம் என்று ஒருநாள் வருவதற்குக் காரணமே இந்த உழைக்கும் பெண் வர்க்கம் தான் என்பது தங்கமுலாம் பூசப்படாத உண்மை
உலக மகளிர் தினத்தை வேண்டுமானால் நாம் எளிதாகக் கொண்டாடலாம். ஆனால் இந்த உலக மகளிர் தினம் கொண்டாடுவதற்கு காரணமான போராட்டமும், அதன் வெற்றிகளும் அவ்வளவு எளிதாகக் கிட்டியதல்ல. ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இது.
மகளிருக்கான பிரத்யேகமான கோரிக்கைகள் BSNLல் இன்னும் நிறைவேறாத கனவுகளாகவே நீடிக்கின்றன. குழந்தை பராமரிப்பு விடுப்புச் சலுகை மத்திய அரசு ஊழியர்களுக்கு அமுலுக்கு வந்துவிட்டது.ஆனால் BSNLEU சங்கம் மகளிருக்கான அந்த பிரத்யேக விடுப்பை சம்பளம் இல்லாத விடுப்பாக வழங்க National JCMல் ஏற்றுக்கொண்டது. ஆனால் NFTE தொடர்ந்து நிர்வாகத்துடன் பேசி சம்பளத்தோடு கூடிய விடுப்பை பெற்றுத் த்ந்துள்ளது. NFTE சங்கத்தின் முதல் வெற்றி இது.
சங்கப்பணிகளுக்கு சிறப்பு விடுப்பு, விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு விடுப்பு வழங்கப்படுகிறது. நமது மகளிரின் சமூகப் பொறுப்புகளையும் உணர்ந்து மாதம் ஒருநாள் சிறப்பு விடுப்பு வழங்கப்படவேண்டும் என NFTE கோரிக்கை விடுத்துள்ளது. நிச்சயமாக இந்தக் கோரிக்கையையும் வென்றிடுவோம்.
மகளிருக்கான சலுகைகளை வென்றிட சரியான தருணமிது!
வரிசை எண்:15 இணைந்த ஒன்பது கரங்கள் சின்னத்தில் வாக்களிப்பீர்!!
ஏப்ரல்-16 சரிபார்ப்பு தேர்தலில் NFTE-BSNLஐ முதன்மைச் சங்கமாக தேர்ந்தெடுப்பீர்!!!
|
தோழமையுடன் K.முருகேசன், மாவட்டச் செயலர், மதுரை தொலைதொடர்பு மாவட்டம் / செல்: 9443012121
No comments:
Post a Comment