Saturday, December 6, 2014

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பி மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மதுரை மாநகர மாவட்டச் செயலர் தோழர். R.ஜெயராமன் தலைமையில் ஊர்வலமாகச் சென்று மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அந் நிகழ்வில் NFTE சார்பாக தோழர்கள் சேது, முருகேசன், நாகலிங்கம், விஸ்வநாதன், கனகவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.


டிசம்பர் 6 - அண்ணல் அம்பேத்கார் நினைவு தினம் 



ங்ள்... 
அன்பை வளர்க்க வேண்டும்...
வெறித்தனத்தை ஒழிக்க வேண்டும்..

சமத்துவத்தை வளர்க்க வேண்டும்.. 
அடிமைத்தனத்தை ஒழிக்க வேண்டும்..

சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டும்...
வேற்றுமையை ஒழிக்க வேண்டும்....

-அண்ணல் அம்பேத்கார்- 
டிசம்பர் 5  - அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் மற்றும் தனியார்மய திட்டங்களை கைவிட வலியுறுத்தி, தொழிற்சங்கங்கள் இணைந்து மதுரையில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தின.
எச்.எம்.எஸ்., ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ., ஐ.என்.டி.யூ.சி., திமுக தொழிற்சங்கம் ஆகியன இணைந்து, மதுரை தலைமை தபால் நிலையம் முன்பு இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தின. அப்போது தொழிலாளர் சட்டங்களில் திருத்தம் கொண்டுவருவது, ரயில்வே நிலையங்களை தனியார்மயமாக்குவது, காப்பீடு துறையில் அன்னிய முதலீடு ஆகிய மத்திய அரசின் நடவடிக்கைகளை கைவிடுமாறு, ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இதில்,  ஏ.ஐ.டி.யூ.சி சார்பில் நந்தாசிங், சி.ஐ.டி.யூ சார்பில் கருமலையான், ஐஎன்டியூசி சார்பில் கே.எஸ். கோவிந்தராஜன், எச்எம்எஸ் சங்கம் சார்பில் மதுரை கோட்ட எஸ்ஆர்எம்யூ செயலர் ஜெ.எம். ரபீக், உதவிச் செயலர் ராம்குமார், திமுக தொழிற்சங்கம் சார்பில் மகேஸ்வரி முருகன் ஆகியோர் பேசினர். 

Thursday, December 4, 2014

நீதியரசர் V.R.கிருஷ்ணய்யர் அவர்களுக்கு அஞ்சலி

சிறந்த சட்ட நிபுணரான கிருஷ்ணய்யர், இந்தியாவில் மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக குரல் கொடுத்து வந்தவர். இதற்காக வாய்ப்பு கிடைக்கும் இடங்களிலெல்லாம் பேசியும் வந்தவர். மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் அமைச்சரவையில் கேரளாவில் அமைச்சராக இருந்துள்ளார்.
கேரள உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றியவர். பின்னர் உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றினார். அப்போது பல வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்புகளை கூறியவர்.
வாழ்த்துகிறோம்
19-10-2014 அன்று நடைபெற்ற TM தேர்வில் மதுரை மாவட்டத்தில் கீழ்க்கண்ட தோழர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 
V. செந்தில்குமார், சின்னமனூர்
A. அருண், GM அலுவலகம், மதுரை
R. ரமேஷ்குமார், திருமங்கலம்
A. A. கிரி, திருப்பாலை, மதுரை
P. செல்லம், உசிலம்பட்டி
P. ஹேமலதா, GM அலுவலகம், மதுரை
P. சங்கர், பெரியகுளம்
S. வேல்முருகன், தேனி
வெற்றி பெற்ற தோழர்களுக்கு மதுரை மாவட்டச் சங்கத்தின் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

Tuesday, December 2, 2014

போராடும் வங்கி ஊழியர்களுக்கு வாழ்த்துக்கள்!

தமிழகம், புதுவை உள்ளிட்ட ஆறு மாநிலங்களைச் சேர்ந்த 1.5 லட்சம் வங்கி ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை (டிச.2) வேலைநிறுத்தம் செய்கின்றனர்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக மும்பையில் இந்திய வங்கிகள் நிர்வாக அமைப்பின் உயர் அதிகாரிகளுடன் வங்கி ஊழியர் சங்க நிர்வாகிகள் திங்கள்கிழமை நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
ஊதிய உயர்வு விகிதத்தில்தான் பிரச்னை: ""ஊதிய உயர்வை கடந்த 2012-ஆம் ஆண்டு நவம்பர் முதல் செயல்படுத்த இந்திய வங்கிகள் நிர்வாக அமைப்பின் உயர் அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர்.
எனினும், ஊதிய உயர்வு விகிதத்தை 23 சதவீதத்திலிருந்து ஓரளவு குறைத்துக் கொள்வதாக திங்கள்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஊழியர் தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியபோதிலும், 11 சதவீத ஊதிய உயர்வுதான் அளிக்க முடியும் என்ற பழைய நிலைப்பாட்டிலிருந்து மாற முடியாது என நிர்வாக அமைப்பினர் கூறி விட்டனர். இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது'' என்றார் சி.எச். வெங்கடாசலம்.
பிற மாநிலங்களில்...இதே போன்று, தில்லி, பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் டிசம்பர் 3-ஆம் தேதியும், மேற்கு வங்கம், ஒடிஸா, பிகார், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் டிசம்பர் 4-ஆம் தேதியும், மகாராஷ்டிரம், குஜராத், கோவா ஆகிய மாநிலங்களில் டிசம்பர் 5-ஆம் தேதியும் வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் வெல்லட்டும்.

Monday, December 1, 2014

செய்திகள்

  •  இன்று 01/12/2014 முதல் தமிழகத்தில் ERP முறை அமுல்படுத்தப்படுகின்றது. BLACKOUT PERIOD என்னும் பணிகளற்ற காலம் 10/12/2014 வரை டைப்பிடிக்கப்படும்.  15/12/2014லில் இருந்து ERP திட்டம் நடைமுறையில் செயல்படுத்தப்படும்.
  •  MTNL - BSNL  இணைப்பு பற்றி அரசு தீவிரமாக சிந்தித்து வருவதாகவும் அது பற்றி பரிசீலிக்க 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மேல்சபையில் கேள்வி நேரத்தில் நம்து துறை அமைச்சர் பதில் அளித்துள்ளார்.  
  • மேலும் விருப்ப ஓய்வு மற்றும் ஊழியர்களின் சம்பளச்சுமையில் ஒரு பகுதியை அரசே ஏற்றுக்கொள்ளுதல் போன்ற முந்தைய அரசின் பரிந்துரையின் மீது இன்னும்  முடிவெடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

  • அக்டோபர் 2014க்கான விலைவாசிப்படி உயர்வில் மாற்றமில்லை என்று கூறப்படுகின்றது. ஜனவரி 2015 விலைவாசிப்படி உயராமலோ  அல்லது குறைந்தோ போகலாம்.
  • மாற்றல் பிரச்சினைகளில் இருந்து உடல் ஊனமுற்ற ஊழியர்களுக்கு விலக்கு அளித்து BSNL  நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது. உடல் ஊனமுற்ற குழந்தைகள் இருந்தால்   அவர்களுக்கும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  • டிசம்பர் 5 அன்று அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் இணைந்து  மாநிலத் தலைநகரங்களில் மத்திய அரசின் ஊழியர் சட்டங்களை திருத்தும் போக்கிற்கு கண்டனம் தெரிவித்து எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கின்றன.