Friday, September 28, 2012

IDA உயர்வு :

IDA 5.8% உயர்ந்துள்ளது.

( 61.5 + 5.8 = 67.3 ) 

01-10-2012 முதல் IDA 67.3%

Thursday, September 27, 2012

BSNL தின சலுகை :

 13வது BSNL தினத்தையொட்டி பிரிபெய்டு மொபைல் சந்தாதாரர்களுக்கு கீழ்க்கண்ட சலுகைகளை மாநில நிர்வாகம் வழங்க உள்ளது.

 சலுகை காலம் : 01-10-2012 முதல் 07-10-2012 வரை

 
MRP of Top-up voucher/C-top-up/                               Usage value offered with Top-up voucher in Rs.
Flexi top-up in Rs. (incl. of S.Tax)
     200                                                                                    240     500                                                                                     600
  1000                                                                                   1200    6000                                                                                   7200
 உததரவு எண் : GM S & M-CM/165/RCVs& TOPUPs/2012-13/98 Dated @ Chennai-6 the 26.09.12
 

Saturday, September 22, 2012

 


புதிய அங்கீகார விதிகள்:

       ஒன்றுக்கும் மேற்பட்ட சங்கங்களுக்கு அங்கீகாரம், அனைத்துச் சங்கங்களுக்கும் குறைந்தபட்ச தொழிற்சங்க சலுகைகள் என்ற கோரிக்கைகளுக்காக டெல்லியில் முதன்மை தொழிலாளர் ஆணையாளர் முன்னிலையில் நடைபெற்ற கூட்ட முடிவின் அடிப்படையில் BSNLக்கென்று புதிய அங்கீகார விதிகளை உருவாக்குவதற்காக அனைத்துச் சங்கங்களின் கருத்துக்களை எழுத்து மூலம் அக்டோபர் 1ந்தேதிக்குள் தரவேண்டும் என நிர்வாகம் அனைத்து பொதுச்செயலாளர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது.

Friday, September 21, 2012


20-09-2012 அன்று மதிய உணவு இடைவேளையில் GM அலுவலகம் முன்பாக சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டைக் கண்டித்தும், டீசல் விலை உயர்வை திரும்ப்ப் பெறக் கோரியும்  , கேஸ் சிலிண்டரின் எண்ணிக்கையில் கட்டுப்பாட்டை நீக்க கோரியும்  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அனைத்துச் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் தலைவர் தோழர்.K.முருகேசன் ( மாவட்டச் செயலர் NFTE ) தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலர்கள் / மாநிலச் சங்க நிர்வாகிகள் தோழர்கள் சூரியன் (BSNLEU), சந்திரசேகர் (SNEA), அருணாசலம் (AIBSNLEA), முத்துக்குமார் (FNTO), முருகன் (TEPU), பாலகுமார் (AIGEOTA), அழகுபாண்டியராஜா (SNATTA) ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

18-09-2012 அன்று மதிய உணவு இடைவேளையில் GM அலுவலகம் முன்பாக ITS Absorbtion பிரச்னையில் நிர்வாகம் காட்டும் மெத்தனப்போக்கைக் கண்டித்தும் டெல்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பை அமுல்படுத்தக் கோரியும் மாபெரும் ஆர்ப்பாட்டம் அனைத்துச் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் தலைவர் தோழர்.K.முருகேசன் (மாவட்டச் செயலர் NFTE  ) தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலர்கள் தோழர்கள் சூரியன் (BSNLEU), சந்திரசேகர் (SNEA), கருப்பையா (AIBSNLEA), முருகன் (TEPU), பாலகுமார் (AIGEOTA), குருசாமி (SEWA) ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

Thursday, September 13, 2012

  • TTA பயிற்சி வகுப்புகள் வரும் 17-09-2012, 24-09-2012  ஆகிய தினங்களில் மீனம்பாக்கம் ட்ரெயினிங் சென்டரில் 2 பேட்ச்களும் 01-10-2012 அன்று 2 பேட்ச்கள் மறைமலை நகர் ட்ரெயினிங் சென்ட்ரிலும் தொடங்க உள்ளது.
முயற்சி எடுத்த மாநிலச் சங்கத்திற்கும் மத்திய சங்கத்திற்கும் நன்றி!
தியாகத் தலைவனுக்கு அஞ்சலி:
 விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றவரும், இந்திய விடுதலைக்காகப் பாடுபட்டவரும், இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான தோழர் ஏ.எம். கோபு, தனது 82 வது வயதில் சென்னை விஜயா மருத்துவமனையில் காலமானார்.
மறைந்த புகழ் மிகுந்த தோழர், ஏ.எம்.கோபு அவர்களுக்கு NFTE மாவட்டச் சங்கத்தின் சார்பிலும்  உறுப்பினர்களின் சார்பிலும் அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறோம்.
போர்க்குணமும், அர்ப்பணிப்பு மிகுந்த தியாகமும் கொண்ட கோபு  மாணவர், இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என்று அனைத்து பகுதி மக்களுக்காகவும் தலைமை பொறுப்பு ஏற்று செயல்பட்டிருக்கிறார். இவர் பங்கேற்காத போராட்டங்களும் இல்லை. காலடி படாத தமிழ் நாட்டின் நிலப்பகுதியும் இல்லை.
தியாக, வாழ்க்கை சிறப்பைக் கொண்ட கோபு,  கம்யூனிஸ்டு கட்சி தடை செய்யப்பட்டக் காலத்தில், கொலைக் குற்றம் சாட்டப் பெற்று, காவல்துறையால் தேடப்பட்டு வந்தவர்.
திருவாரூரில் சுடப்பட்டு, ஒரு ஆண்டு பாதுகாப்பு கைதியாக, திருச்சி மத்திய சிறைச்சாலையிலும், மூன்று ஆண்டுகாலம் சேலம் மத்திய சிறைச்சாலையிலும் அடைக்கப்பட்டிருந்தார்.
தோழர்கள் ஜீவா, எம்.கல்யாணசுந்தரம், ப.மாணிக்கம், ஏ.எஸ்.கே முதலான தலைவர்களோடு உடன் இருந்து பணியாற்றிய சிறப்பையும் பெற்றுள்ளார். ஓய்வு ஒழிச்சலற்ற கோபுவின் கட்சிக்கானப் பணி வார்த்தைகளால் விவரிக்கக் கூடியதன்று.
தமிழகத்தில் தொழிற் சங்கத்தைக் கட்டி அமைத்ததில் கோபுவின் பங்கு குறிப்பிட்டு சொல்லத்தக்கதாகும்.
AITUC தொழற்சங்கத்தில் மாநிலத்தின் பொதுச்செயலாளராக பல ஆண்டுகள் பணியாற்றினார்.
உலகத் தொழிற் சங்க சம்மேளனத்தின் துணைத் தலைவராக 15 ஆண்டுகளுக்கு மேல், பணியாற்றியுள்ளார். இந்த காலத்தில் 98 நாடுகளில் பயணம் செய்துள்ளார்.
பலவேறு தொழிற் சங்கப்போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தி, தொழிலாளர்களுக்கான உரிமைகளை பெற்று தந்துள்ளார்.

அவரின் உடல்  தோழர்களின் / மக்களின் அஞ்சலிக்குப்பிறகு அவரது  விருப்பப்படி அரசு மருத்துவமனையில் ஒப்படைக்கப்படும்.