இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்
Monday, August 20, 2012
Saturday, August 18, 2012
3வது ஆண்டாக BSNL நட்டம்
2011-12ம் ஆண்டிற்கான வரவு செலவு வெளியிடப்பட்டுள்ளது.
ரூ.8851கோடி நட்டம் என இணை அமைச்சர் மிலிந்த் தியோரா அறிவித்துள்ளார்.
மேலும் நட்டத்துக்கு காரணம் அதிகப்படியான ஊதியச் செலவு மற்றும் 3G ஸ்பெக்ட்ரத்திற்கு கட்டணம் செலுத்தியது எனவும் தெரிவித்துள்ளார்.
அதிகப்படியான ஊதியச் செலவைக் குறைக்க 45 வயதிற்கு மேற்பட்ட ஊழியர்களை VRS மூலம் குறைப்பதற்கான திட்டத்தை தயார்படுத்தியுள்ளது எனவும் கூறியுள்ளார்.
Thursday, August 16, 2012
கறுப்பு பணத்தைக் கட்டுப்படுத்த வெளிநாடுகளில் உள்ள தனது தூதரகங்களில், கூடுதலாக 14 வருமான வரி பிரிவை ஏற்படுத்த வெளியுறவு அமைச்சகத்திடம் மத்திய நிதியமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து சட்ட விரோதமாக பணம் பரிமாற்றம் செய்யப்படுவதை தவிர்க்கவும், வெளிநாட்டு வங்கிகளில் பணம் முதலீடு செய்யப்படுவதை கண்காணிக்கவும், இந்திய தூதரக அலுவலகங்களில் வருமான வரி பிரிவு துவங்கப்பட வேண்டும் என, நிதி அமைச்சகம் மத்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்து, எந்தெந்த நாடுகளில் இந்த அலுவலகங்களை துவங்க வேண்டும் என்ற பட்டியலையும் சமர்ப்பித்திருந்தது.இதையடுத்து, சைப்ரஸ், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, ஜப்பான், ஐக்கிய அரபு எமிரேட், இங்கிலந்து, அமெரிக்கா, மொரிஷியஸ், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில், வருமான வரி பிரிவுகள் துவங்கப்பட்டன.
இந்நிலையில், தற்போது கூடுதலாக, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 14 நாடுகளில் வருமான வரி பிரிவு அலுவலகங்களை துவங்கப்படவேண்டும் என, மத்திய நிதியமைச்சகம், வெளியுறவு அமைச்சகத்திடம் பரிந்துரை செய்துள்ளது.லோக்சபாவில், கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, அப்போதைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, இதுபோன்ற அலுவலகங்களை வெளிநாடுகளில் துவங்குவதற்கு கணிசமான அளவிற்கு நிதி ஒதுக்கப்படும் என, தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, August 10, 2012
Subscribe to:
Posts (Atom)