Friday, August 10, 2012

வரவேற்புக்குழு வங்கிக் கணக்கை துவங்கியுள்ளது.
வங்கியின் பெயர்: யூனியன் பேங்க் ஆப் இந்தியா
கணக்கு எண்: 552502010006044
கிளை: நரிமேடு, மதுரை-2
பெயர்: The General secretary, Reception Committee, NFTE TN 4th Circle Conference

Tuesday, August 7, 2012

தகவல்:
                 NFTE தமிழ் மாநிலச் செயலர் தோழர். பட்டாபி இன்று 07-08-2012 மாலை 5மணிக்கு தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே ”வளர்ச்சிப் பாதையில் சர்வோதயம்-மார்க்சியம் ஒரு ஒப்பீடுஎன்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.

Tuesday, July 31, 2012

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் தீ விபத்து:

இக்கோரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

     காயமுற்றவர்கள் விரைவில் குணமடையவேண்டும் என்ற விருப்பத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
தென்னக ரயில்களில் முதன்மையான ரயில் எனக் கருதப்படும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளானது பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரயில் விபத்துக்கு காரணமாக , போதிய ஊழியர்களை பணிக்கு அமர்த்தாதது, பணித்திறன் குறைந்த ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் அமர்த்துவது, தண்டவளச் சிதைவுகளை கண்காணிப்பதில் கவனக்குறைவு, காலத்திற்கேற்ற நவீன தீ விபத்து தடுப்புக்கருவிகள் இல்லாதது ஆகியவையே எனக் கம்யூனிஸ்ட் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

Sunday, July 22, 2012

ரமலானை வரவேற்போம்!!!
ரமலானை வரவேற்போம்!!!
 
                 புனிதமும்,கண்ணியமும்,ரஹ்மத்தும் நிறைந்த மாதமான ரமலான் மாதமிது. ஈமான் கொண்ட அனைவரும் இந்த மாதத்தில்  தங்களுடைய 5 கடமைகளில் ஒன்றான நோன்பை நிறைவேற்றி அல்லாஹ்வின் பொருத்தத்தை அடைய ஆவலாகவும், சந்தோஷமாகவும் உள்ளனர்.
                 ஏனென்றால் நோன்பு முஸ்லிம்களின் உள்ளங்களிலும், வாழ்க்கையிலும் நல்லதொரு மாற்றங்களை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அடுத்து வருகின்ற பதினோரு மாதங்களுக்குக்கான ஒரு பயிற்சியாகவும் உள்ளது. மேலும் முஸ்லிம்களுக்கு இது ஒரு வசந்த காலம் என்று கூறும் அளவுக்கு நன்மைகள் பொதிந்து கிடக்கின்றன.
             இறைவனை நினைவு கூர்தல், தர்மம் செய்தல், நோன்பு நோற்றல், ஐவேளை தொழுதல், இரவுநேர வணக்கங்கள், சொல்-செயல்-எண்ணங்கள் என்று அனைத்திலும் இறையச்சத்தை பேணுதல் என்று ஒரு அமைதியான, நிம்மதியான சூழலை ரமலான் நம்மிடையே ஏற்படுத்தி விடுகின்றது.ரமலானின் முழு பலனையும் அனைவரும் அடையவேண்டும் என அன்புடன் வாழ்த்துகிறோம்.

Saturday, July 21, 2012

இன்கம்டாக்ஸ் ரிட்டர்ன்:
மாதச் சம்பளம் மட்டுமே பெறும் ஊழியர்கள் தங்களது மொத்த வருமானம் ரூ.5 லட்சத்திற்கு குறைவாக இருந்தால் (சேமிப்புகளை கழித்தது போக) இன்கம்டாக்ஸ் ரிட்டர்ன் பண்ணத் தேவையில்லை.
உத்தரவு எண்: Central Board of Direct Taxes (CBDT) vide its Notification No. 9/2012 dated 17th February, 2012
தகவல்:

நீங்கள் BSNL லேண்ட்லைன் வைத்திருந்தால் http://www.flash.bsnl.co.in/ என்ற இணையதளத்திற்குள் சென்று உங்களது மின்னஞ்சல் முகவரியையும் மொபைல் எண்ணையும் பதிவு செய்தால் தொலைபேசி பில் உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு வந்து சேரும்.
உங்களது மொபைலில் நினைவூட்டல் சேவையும் கிடைக்கும்.

Friday, July 20, 2012

மாமதுரை அழைக்கிறது


மாறி வரும் சூழ்நிலையில்
புதிய தொழில் நுட்ப சவால்களை சமாளிக்க
இருக்கும் ஊழியர்கள் அருகி வரும் சூழ்நிலையில்
இயக்கத்தின் செயல்பாட்டில் புதுமை படைக்க
BSNL வளர்ச்சிக்கு திட்டமிட
BSNL ஐ சீர்குலைக்கும் அரசின் முயற்சிகளை எதிர்கொள்ள
நிர்வாகத்தின் ஊழியருக்கெதிரான போக்குகளை மாற்றி அமைக்க
கூடல்நகரில் கூடுவோம்
மாநாடு சிறக்க சிறப்பான பங்களிப்பை தாரீர்

- மதுரை மாவட்ட வரவேற்புக் குழு