Monday, December 31, 2012

IDA உயர்வு

IDA 4.2% சதம் உயர்ந்துள்ளது. 
 67.3+4.2=71.5% ஜனவரி 2013 முதல்

Thursday, December 27, 2012

BSNL புதிய சங்க அங்கீகார விதிகள் அறிவிப்பு


நமது மத்திய மாநிலச் சங்கங்களின் அதிலும் குறிப்பாக அகில இந்திய தலைவர் இஸ்லாம், பொதுச்செயலாளர் சந்தேஷ்வர் சிங், நமது மாநிலச் செயலர் பட்டாபி ஆகியோரின் தொடர் முயற்சியால் அங்கீகரிக்கப்பட்ட சங்கத்தின் தடைகளை தகர்த்தெறிந்து புதிய சங்க அங்கீகார விதிகள் உருவாக்கப்பட்டுள்ளது.

மத்திய மாநிலச் சங்கங்களுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்.

Monday, December 10, 2012

வரவேற்புக்குழுக்கூட்டம்:

07-12-2012 அன்று வரவேற்புக்குழுக் கூட்டம் வரவேற்புக்குழு தலைவர் P.ராஜகோபால் தலைமையில் நடைபெற்றது. 

மாநிலச் செயலர் தோழர். பட்டாபி,மாநிலத் துணைத்தலைவர் குடந்தை ஜெயபால் கலந்துகொண்டு வரவேற்புக்குழுவிற்கு பாராட்டு தெரிவித்து மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கான ஆலோசனைகளையும் வழங்கினர்.

தோழியர்கள்.இந்திராணிசுந்தர்ராஜ்,பரிமளம், தோழர்கள்.லட்சம்,விஜயரஙகன், சிவகுருநாதன், ராஜேந்திரன்,சிவசுப்பிரமணியன்,ராஜ்குமார்,ரகு மற்றும் கிளைச் செயலர்கள், மாவட்டச் சங்க நிர்வாகிகள்,முன்னணி தோழர்கள் கலந்துகொண்டனர். 

SNATTA மாநிலச் செயலர் P.அழகுபாண்டியராஜா கலந்துகொண்டு வாழ்த்திப் பேசினார்.

முன்னாள் மாவட்டச் செயலர் ராஜேந்திரன் மாநாட்டு நன்கொடையாக ரூ.20000/- கூட்டத்தில் மாநிலச் செயலரிடம் வழங்கினார். மாநில,மாவட்டச் சங்கத்தின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.

Thursday, December 6, 2012


டிசம்பர் 6 : டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தில் அவரது பொன்மொழிகளை கடைப்பிடிக்க உறுதியேற்போம்.

·        முக்கியமான மூன்று விஷயங்களில் நாம் நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். அவை பொது ஒழுக்கம்முன்னேற்றத்தில் சிரத்தைசிந்தனையில் மகத்தான புரட்சி என்பனவாகும்.
·        நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று. முதல் தெய்வம் அறிவு;இரண்டாவது தெய்வம் சுயமரியாதைமூன்றாவது தெய்வம்நன்னடத்தை. இவற்றைத் தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை.
·        வெற்றியோ தோல்வியோ எதுவரினும் கடமையைச் செய்வோம். யார் பாராட்டினாலும்பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும்நேர்மையும் வெளியாகும்போது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்.
·        எவனொருவன் தானே சரணடையாமல்மற்றவர்களின் இச்சைப்படி செயல்படாமல்எதனையும் சோதனைக்குட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கின்றானோ அவனே சுதந்திர மனிதன். 

Tuesday, December 4, 2012


மாவட்டச் செயலர்கள் தங்கள் மாவட்டங்களுக்கு 
ஒதுக்கப்பட்ட  மாநாட்டு நிதியினை விரைவில் அனுப்பிவைத்து வரவேற்பு குழுவிற்கு உதவுமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

மாவட்டச்செயலர்,  மதுரை தொலைதொடர்பு மாவட்டம்






1973 மாநில மாநாட்டு நிகழ்ச்சிகள்








  புதிய அங்கீகார விதிகளை உருவாக்குவதற்கான முன்வரைவு (Draft Proposal) நிர்வாகத்தால் அனைத்துச் சங்கங்களுக்கும் தரப்பட்டு அதன்மீது கருத்துக்கள் கோரப்பட்டது.

NFTE,FNTO உட்பட 10 சங்கங்கள் இணைந்து தங்கள் கருத்துக்களை நிர்வாகத்திற்கு அளித்துள்ளன.