Thursday, November 27, 2014
Wednesday, November 26, 2014
25/11/2014 அன்று BSNL
நிர்வாகத்துடன் JAC
கூட்டு நடவடிக்கை குழு தலைவர்கள் நடத்திய
பேச்சுவார்த்தையில்ஏதும் முன்னேற்றமில்லை.
ஊழியர்கள் பிரச்சினை தீர்வில் BSNL
நிர்வாகம் வழக்கம் போலவே தனது
மெத்தனத்தை வெளிப்படுத்துகின்றது.
எனவே தோழர்களே!.
நாளை 27/11/2014 நாடு
தழுவிய
ஒரு நாள்
வேலை நிறுத்தத்தை
வெற்றிகரமாக்குவோம்.
Tuesday, November 25, 2014
நவம்பர் 27 வேலை நிறுத்தம்
JAC பேச்சுவார்த்தை
நவம்பர் 27 வேலை நிறுத்தக் கோரிக்கைகள் மீது பேச்சுவார்த்தை
நடத்திட JAC ஒருங்கிணைப்பாளர்
என்ற முறையில் தோழர்.அபிமன்யு
அவர்களுக்கு BSNL நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
பேச்சுவார்த்தை 25/11/2014 செவ்வாய் மாலை 5 மணிக்கு
நடைபெறும்.
நமது பொதுச் செயலர் தோழர். சந்தேஷ்வர் சிங் பேச்சுவார்த்தையில் பங்கேற்க கொல்கத்தா
சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு டெல்லி விரைந்துள்ளார்.
பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்தாலும்..
தோழர்கள் போராட்டம் வெற்றிபெற முனைப்புடன் செயலாற்றவும்.
Monday, November 24, 2014
NFPTE
சம்மேளன
வைரவிழா
22-11-2014 அன்று புதுவை சாய்பாபா
திருமண மண்டபத்தில் மதியம்
02:30மணிக்கு கொடியேற்றத்துடன் விழா இனிதே துவங்கியது. தேசிய கொடியை மூத்த தோழர்
சேலம் M.S. அவர்களும், சம்மேளன கொடியை 68 போராட்ட தியாகி தோழர் சுவாமிநாதனும் ஏற்றினர்.
தோழர் M.லட்சம்
மாநில தலைவர் தலைமையேற்க ,
தோழர்கள் K.அசோகராஜன், P.சென்னகேசவன் வரவேற்க,
தோழர் V.லோகநாதன்
அஞ்சலியுரை நிகழ்த்த ,
தோழர் K.சேது
துவக்கவுரை ஆற்றினார்.
விழாவில் தோழமை சங்க தலைவர்கள்
S.செல்லப்பா. அகிலஇந்திய
துணை செயலர்-BSNLEU,
A. பாபு
ராதாகிருஷ்ணன்.மாநில செயலர்- BSNLEU,
D.சந்திரசேகரன். மாநில
செயலர்-FNTO,
A.செல்லப்பாண்டியன். மாநில
செயலர்-TEPU,
M.கோபிநாதன்.மாநில செயலர்-SNEA,
S.சிவகுமார். மாநில செயலர்-AIBSNLEA,
குணசேகரன் மாநில சங்க நிர்வாகி-AIBSNLOA,
P.N.பெருமாள். மாநில செயலர்-SEWA
D.சிவசங்கர்.மாநில தலைவர்.SNATTA,
தோழர். தினேஷ் பொன்னையா AITUC ஆகியோர் வாழ்த்துரை வழங்கி
சிறப்பித்தனர்.
தோழர்கள் முத்தியாலு, தமிழ்மணி, ராபர்ட்ஸ்,
மாரி, சுப்பராயன் ஆகியோர் சம்மேளனத்தின் 60ஆண்டுகால வரலாற்றை நினைவு கூர்ந்தனர்.மாநிலத்தின் பல்வேறு மாவட்டத்திலிருந்து பெரும்பாலான
தோழர்களும், தோழியர்களும் 600க்கும் மேற்பட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
விழாவில்
செப்.1968 ல்
நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற
மூத்த
தோழர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
தோழர்கள்.பட்டாபி,சம்மேளன
செயலர்கள் G.ஜெயராமன். SSG ஆகியோர் சிறப்புரையாற்ற
தோழர்.ஆர்.கே
நிறைவுரையாற்றி விழாவை முடித்து வைத்தார்.
மதுரை
மாவட்ட்த்திலிருந்து 40க்கும்மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
விழாவினை
குறுகிய காலத்தில் நடத்திய மாநில சங்கத்திற்கும், விழாவை ஏற்று சிறப்பான முறையில்
நடத்தி தந்த புதுவை மாவட்ட செயலர் தோழர் P.காமராஜ்,மாவட்ட
உதவிச் செயலர் செல்வரெங்கன், மாநிலப் பொருளாளர் அசோக்ராஜ் மற்றும் அனைத்து தோழர்களுக்கும்
மதுரை மாவட்ட சங்கம் நெஞ்சார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறது.
Subscribe to:
Comments (Atom)
.gif)






