Monday, August 25, 2014
Friday, August 22, 2014
பொய்யும்
புரட்டும்......
2010-ல் கொடைக்கானல் மலைப்பகுதியில் (Unmanned) ஆளில்லா தொலைபேசியகங்களுக்கு Long stay ஊழியர்களை பணியமர்த்தும்போது
அனைத்து Non-Executive
சங்கங்களையும்
நிர்வாகம் அழைத்துப் பேசியது.
அக்கூட்டத்தில்
வத்தலக்குண்டு கோட்டத்திலிருந்து ஊழியர்களை
அனுப்புவது,
ஏற்கனவே மலைப்பகுதியில் 2
ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியிருந்தால் அந்த ஊழியருக்கு விதிவிலக்கு.
மலைப்பகுதிக்கு செல்பவர்களுக்கு Tenure 1 ஆண்டுகாலம்.
Tenure முடித்தவுடன் அவரது பழைய இடத்திற்கு மாற்றப்படுவார்
அல்லது அவர் கேட்ட இட்த்திற்கு மாற்றப்படுவார் என முடிவெடுக்கப்பட்ட்து.
அந்த அடிப்படையில்தான்
மலைப்பகுதியில் 2 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியிருந்ததால் தோழர்.O.மச்சக்காளை TM அவர்களுக்கு அன்று விலக்கு அளிக்கப்பட்டது.
அனைத்து
சங்கங்களும் ஒத்துக்கொண்ட Existing Policyயை கடைப்பிடிக்க வேண்டுமென்றால் தோழர்.O.மச்சக்காளை TM அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும்.
ஆனால் BSNLEU அன்று ஒத்துக்கொண்டதை இன்று
மறுக்கிறது. நிர்வாகமும் தலையாட்டுகிறது.
வத்தலக்குண்டு கோட்ட்த்தில் Long Stayல் முதலாவதாக இருப்பவர் தோழர்.
பிச்சைக்கண்ணு TM.
அவர் Sales Teamல் வேலை பார்க்கிறார். அவருக்கு
மாற்றல் போடவில்லை, காரணம் கேட்டால்
அவருடைய Headquarters திண்டுக்கல் ஏனென்றால் அவருடைய JTO திண்டுக்கல்லில் இருக்கிறார் என்று சொல்கிறது
BSNLEUவும் நிர்வாகமும்.
ஆனால் 26-06-14 அன்று
வத்தலக்குண்டில் நடைபெற்ற வத்தலக்குண்டு கிளை மாநாட்டில் தோழர். பிச்சைக்கண்ணு TM. கிளைச் செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல்லில் பணிபுரிபவர் வத்தலக்குண்டு கிளையில் உறுப்பினராக இருக்கமுடியுமா? BSNLEU சங்க அமைப்பு விதி அனுமதிக்கிறதா?
நிர்வாகமும் அனுமதிக்கும்?
இப்படி
பொய்யும் புரட்டும் எத்தனை நாளைக்கு?
Wednesday, August 20, 2014
அநீதி களைய..
மாநிலச்செயலர் அறப்போர்..
- மதுரை மாவட்டத்தில் கொடைக்கானல் மலைப்பகுதியில் டென்யூர் முடித்த 3 TM களுக்கு மாற்ற்ல் தர இழுத்தடிக்கும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும்
- மாற்றுச் சங்கத்திற்கு சாதகமாக தினம் ஒரு கொள்கையை உருவாக்கும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும்
- உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பின்பு இரவு 10மணிக்கு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒத்துக்கொண்ட 2 TMகளின் மாற்றல் உத்தரவை மறுநாள் மறுக்கும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும்
- மாற்றல் கொள்கை பற்றி கருத்துக் கேட்பு கூட்டம் என்று சொல்லி அனைத்துச் சங்கங்களையும் அழைத்து கருத்து திணிப்பு கூட்டம் நடத்திய மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும்
- பிரச்னையைத் தீர்ப்பதிற்குப் பதில் NFTE சங்கத்தை பழிவாங்க நினைக்கும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும்
- கார்ப்பரேட் உத்தரவு, மாநில நிர்வாகத்தின் வழிகாட்டுதல் எதையும் மதியாத மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும்
- மாநிலச் செயலரை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்யும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும்
மாநிலச்செயலர் தோழர்.பட்டாபி 28/08/2014 முதல்
காலவரையற்ற உண்ணாவிரதம்
தோழர்களே... அநீதி களைந்திட.. அணி திரள்வீர்..
Thursday, May 1, 2014
இயற்கை தந்தது இருபத்து நாலு மணி நேரம்…..
இன்னுயிர் நீத்த தியாகிகள் தந்தது எட்டு மணி நேரம்..
இன்றோ..
எட்டுமணி.. எத்தனையோ இடங்களில் எட்டாக்கனி..
இங்கு..
சமவேலை என்பார்.. சம ஊதியம் என்பார்..
ஆனால்..
சுமை வேலை சொல்வார் .. சுகமற்ற ஊதியம் தருவார்..
இப்படி...
கிட்டிய உரிமைகள் எட்டிப்போகும் இழிநிலை பாரீர்..
இனி...
மோடிகள் ஆண்டாலும்.. லேடிகள்.. ஆண்டாலும்
வாடி நிற்பது என்னவோ உழைப்பவனின் வயிறுதான்..
நமக்கும் கீழே வாடுபவர் கோடி...
அவர் வாட்டம் போக்கிட உயர்த்திடு செங்கொடி...
Wednesday, April 23, 2014
23-04-2014 NJCM முடிவுகள்:
ஊதியப் பிடித்தம் நிறுத்தம்
01-10-2000க்கு முன் தரப்பட்ட பதவி உயர்வை இன்கிரிமெண்ட் தேதிக்கு விருப்பம் கொடுத்த ஊழியர்களுக்கு தற்போது 2008 DOT உத்தரவைக்காட்டி அவ்வாறு இன்கிரிமெண்ட் தேதிக்கு மாற்றித் தர முடியாது என்க்கூறி பல ஊழியர்களுக்கு சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது.
மதுரை மாவட்டத்தில் 136 TM ஊழியர்களுக்கு பிடித்தம் செய்யப்படுகிறது.
இப்பிரச்னையை மத்திய சங்கத்திற்கு மாநிலச் சங்கத்தின் மூலமாக கொண்டு சென்றோம். மதுரை மாநில மாநாட்டிற்கு வந்திருந்த தோழர்கள் இஸ்லாம், சந்தேஷ்வர் சிங் ஆகியோரிடம் நேரடியாக பிரச்னையை பேசினோம். கடலூர் ஒலிக்கதிர் பொன்விழாவிற்கு வந்தபோதும் தோழர்.இஸ்லாம் அவர்களிடம் நினைவூட்டப்பட்டது.
- இன்று நடைபெற்ற NJCM கூட்டத்தில் ஊதியப் பிடித்தம் உடனடியாக நிறுத்தி வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
- JTO offciating பிரச்னையில் விரைவில் உத்தரவுகள் வெளிவரும்.
விரிவான செய்திகள் மாநிலச் செயலர் சென்னை திரும்பியவுடன்
Wednesday, April 2, 2014
Sunday, March 23, 2014
இந்நாள் மனித குல வரலாற்றில் குறிப்பிடத்தக்க நாள் பகத்சிங், ராசகுரு, சுகதேவ் ஆகிய உண்மை யான மாவீரர்கள் தூக்க லிடப்பட்ட நாள் (1931)
பகத்சிங் பி.ஏ. படித்துக் கொண்டிருந்த கால கட்டத்தில். வழக்கம் போல் பெற்றோர் திருமண ஏற்பாட் டைத் தொடங்கினார்கள்.
பகத்சிங் என்ன சொன்னான் தெரியுமா? இது திருமணம் செய்து கொண்டு மகிழும் கால கட்டம் அல்ல; என் உடல் உள்ளம், பொருள், ஆவி அத்தனையையும் நாட்டுக்கே உரித்தானவை என்ற எண்ணத்தில் நானி ருக்கிறேன் என்று சொன்னான்.
பகத்சிங் என்ன சொன்னான் தெரியுமா? இது திருமணம் செய்து கொண்டு மகிழும் கால கட்டம் அல்ல; என் உடல் உள்ளம், பொருள், ஆவி அத்தனையையும் நாட்டுக்கே உரித்தானவை என்ற எண்ணத்தில் நானி ருக்கிறேன் என்று சொன்னான்.
சினிமாவே உலகம் என்றும் சீட்டி அடித்துக் கொண்டு திரியும் இளைஞர் கள் இவற்றையெல்லாம் தெரிந்து கொள்வார்களாக!
நவஜவான் சபை ஒன்றையும் தொடங்கினான். அந்த அமைப்பில் உள்ளவர் கள் பூணூல்,நாமம், விபூதிப்பட்டை, குடுமி, தாடி, தலைப்பாகை முதலிய மதத் தொடர்புடைய அனைத்துச் சின்னங்களையும் தூக்கி எறிந்தனர்.
சிறைக் கொட்டடியில் தூக்குக் கயிறை முத்தமிட இருந்த அந்த நேரத்தில், சீக்கியரான சிறை அதிகாரி ஒருவர் சீக்கியர்களின் புனித நூலைக் கொடுத்து, கடைசி நேரத்திலாவது பிரார்த்தனை செய் என்று கேட்டுக் கொண்டபோது, பகத் சிங் மறுத்து விட்டான்!
இளைஞர்களே எண்ணிப் பாருங்கள்
Subscribe to:
Posts (Atom)