Thursday, May 1, 2014

இயற்கை தந்தது இருபத்து நாலு  மணி நேரம்…..

 இன்னுயிர் நீத்த தியாகிகள் தந்தது எட்டு  மணி நேரம்..

இன்றோ..
எட்டுமணி.. எத்தனையோ இடங்களில் எட்டாக்கனி..

இங்கு..
சமவேலை என்பார்.. சம ஊதியம் என்பார்..

ஆனால்..
சுமை வேலை சொல்வார் .. சுகமற்ற ஊதியம்  தருவார்..

இப்படி...
கிட்டிய உரிமைகள் எட்டிப்போகும் இழிநிலை பாரீர்..

இனி...
மோடிகள் ஆண்டாலும்.. லேடிகள்.. ஆண்டாலும் 
வாடி நிற்பது என்னவோ உழைப்பவனின் வயிறுதான்..

நமக்கும் கீழே வாடுபவர் கோடி...

அவர் வாட்டம் போக்கிட உயர்த்திடு  செங்கொடி...



Wednesday, April 23, 2014

23-04-2014 NJCM முடிவுகள்:
ஊதியப் பிடித்தம் நிறுத்தம்
01-10-2000க்கு முன் தரப்பட்ட பதவி உயர்வை இன்கிரிமெண்ட் தேதிக்கு விருப்பம் கொடுத்த ஊழியர்களுக்கு  தற்போது 2008 DOT உத்தரவைக்காட்டி அவ்வாறு இன்கிரிமெண்ட் தேதிக்கு மாற்றித் தர முடியாது என்க்கூறி பல ஊழியர்களுக்கு சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது. 
மதுரை மாவட்டத்தில் 136 TM ஊழியர்களுக்கு பிடித்தம் செய்யப்படுகிறது.
இப்பிரச்னையை மத்திய சங்கத்திற்கு மாநிலச் சங்கத்தின் மூலமாக கொண்டு சென்றோம். மதுரை மாநில மாநாட்டிற்கு வந்திருந்த தோழர்கள் இஸ்லாம், சந்தேஷ்வர் சிங் ஆகியோரிடம் நேரடியாக பிரச்னையை பேசினோம். கடலூர் ஒலிக்கதிர் பொன்விழாவிற்கு வந்தபோதும் தோழர்.இஸ்லாம் அவர்களிடம் நினைவூட்டப்பட்டது. 
  • இன்று  நடைபெற்ற NJCM கூட்டத்தில் ஊதியப் பிடித்தம் உடனடியாக நிறுத்தி வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.   
  • JTO offciating பிரச்னையில் விரைவில் உத்தரவுகள் வெளிவரும்.
விரிவான செய்திகள் மாநிலச் செயலர் சென்னை திரும்பியவுடன் 

Wednesday, April 2, 2014

சென்னை கூட்டுறவு சங்க RGB தேர்தலில் NFTE BSNLEU  இணைந்துAIBSNLEA, SNEA, SEWA சங்கங்களின் ஆதரவோடு நிறுத்திய 4 (2+2) வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.
வாக்களித்த அனைத்துச் சங்க உறுப்பினர்களுக்கும் NFTE மாவட்டச் சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி.

Sunday, March 23, 2014


இந்நாள் மனித குல வரலாற்றில் குறிப்பிடத்தக்க நாள் பகத்சிங்ராசகுருசுகதேவ் ஆகிய உண்மை யான மாவீரர்கள் தூக்க லிடப்பட்ட நாள் (1931)
பகத்சிங் பி.ஏ. படித்துக் கொண்டிருந்த கால கட்டத்தில். வழக்கம் போல் பெற்றோர் திருமண ஏற்பாட் டைத் தொடங்கினார்கள்.
பகத்சிங் என்ன சொன்னான் தெரியுமாஇது திருமணம் செய்து கொண்டு மகிழும் கால கட்டம் அல்லஎன் உடல் உள்ளம்பொருள்ஆவி அத்தனையையும் நாட்டுக்கே உரித்தானவை என்ற எண்ணத்தில் நானி ருக்கிறேன் என்று சொன்னான்.
சினிமாவே உலகம் என்றும் சீட்டி அடித்துக் கொண்டு திரியும் இளைஞர் கள் இவற்றையெல்லாம் தெரிந்து கொள்வார்களாக!
நவஜவான் சபை ஒன்றையும் தொடங்கினான். அந்த அமைப்பில் உள்ளவர் கள் பூணூல்,நாமம்விபூதிப்பட்டைகுடுமிதாடிதலைப்பாகை முதலிய மதத் தொடர்புடைய அனைத்துச் சின்னங்களையும் தூக்கி எறிந்தனர்.
சிறைக் கொட்டடியில் தூக்குக் கயிறை முத்தமிட இருந்த அந்த நேரத்தில்,  சீக்கியரான சிறை அதிகாரி ஒருவர் சீக்கியர்களின் புனித நூலைக் கொடுத்துகடைசி நேரத்திலாவது பிரார்த்தனை செய் என்று கேட்டுக் கொண்டபோதுபகத் சிங் மறுத்து விட்டான்!
இளைஞர்களே எண்ணிப் பாருங்கள்

Thursday, March 20, 2014

அருமைத் தோழர்களே! தோழியர்களே!!
       வணக்கம். ஏப்ரல் 1ந்தேதி நடைபெறவிருக்கும் சென்னை சொசைட்டி தேர்தலில் NFTE + BSNLEU கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வீர்!


Tuesday, March 18, 2014

காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டித்து
NFTE, BSNLEU, ஒப்பந்த தொழிலாளர்கள் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.
NFTE மாவட்டத் தலைவர் கே.முருகேசன் தலைமையில் மதியம் 1 மணிக்கு GM அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. BSNLEU மாநில அமைப்புச்செயலர் செல்வின் சத்யராஜ், NFTE மாவட்டச்செயலர் சிவகுருநாதன், ஒப்பந்த ஊழியர் சோணைமுத்து ஆகியோர் கண்டன உரையாற்றினர்.BSNLEU மாவட்டச்செயலர் சூரியன் நன்றியரையாற்றினார்.

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 28 வயதே நிரம்பிய இராஜா என்ற கூலித்தொழிலாளி காட்டுமிராண்டித்தனமாக பாதுகாப்பு படை 
கிங்கரன் ஒருவனால் சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். 
நியாயம் கேட்க சென்ற AITUC தோழர்கள்
 மிருகத்தனமாக தாக்கப்பட்டுள்ளனர். 

எந்த அரசாக இருந்தாலும் , எந்த நிர்வாகமாக இருந்தாலும் தொழிலாளர்களைத் துன்புறுத்துவது என்பது 
இந்த தேசத்தில் தொடர்கதையாக உள்ளது.

 பாதுகாப்பு படை வீரர்களே ஊழியர்களின் பாதுகாப்பை அழிப்பது மாபாதக செயலாகும். இந்த காட்டுமிரண்டித்தனத்தை கடுமையாக கண்டிக்கின்றோம். 

Monday, March 17, 2014

இதயம் கணக்கும்.. 
கண்ணீர் அஞ்சலி! 

விருதுநகர் மாவட்டச்சங்கத்தின்
முன்னோடித்தோழரும் 
இயக்கத்தின் ஒற்றுமைக்காக
மாவட்டச் செயலர் பதவியை
விட்டுக் கொடுத்த

சிவகாசித்தோழர்.
ஜாபர் சாதிக் சேட் 

நேற்று 16/03/2014  இரவு 
மாரடைப்பால் காலமானார்.

அன்பு நிறைந்த சகோதரன்..
பண்பு நிறைந்த தோழன்..
இயக்கத்தில் உணர்வானவன்..
கொள்கையில் உருக்கானவன்..

நேற்று இரவு கலகலப்பாக 
அனைவரிடமும் கை குலுக்கிச்சென்றான் 
இன்றோ நம்மை கைவிட்டுச்சென்றான் 

ஈடு இணையில்லாத
அவனது மறைவு 
இயக்கத்திற்கு 
ஈடு செய்ய இயலாத.. இழப்பு..

கண்ணீரை மட்டுமே 
நம்மால் 
காணிக்கையாக்க  முடிகின்றது..