Tuesday, May 12, 2015

உலக செவிலியர் தினம் – மே 12



















புனிதமான தொழில்களில் முதன்மையானது செவிலியர் பணி. அபாய கட்டத்தில் உள்ள நோயாளிகளுக்கு கவனிப்பு, காயங்களைச் சுத்தப்படுத்தி மருந்து போடுதல், ஸ்பாஞ்ச் வைத்துக் குளிப்பாட்டுதல் உட்பட பல வேலைகளை மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்பவர்கள்தான் செவிலியர்கள். ஆனால் அவர்களுக்கு முழுமையான பாராட்டுக்கள் கிடைப்பதில்லை.

நோயாளியைக் கவனிப்பதுடன் நோயாளியின் உறவினர்கள், விசிட்டர்கள், மருத்துவமனை நிர்வாகம் மற்றும் சக ஊழியர்களையும் செவிலியர்கள் சமாளிக்க வேண்டியுள்ளது.
இன்றைய நவீன செவிலியப் பணியின் தாய் எனக் கருதப்படும் பிளாரன்ஸ் நைட்டிங்கேல்அவர்களின் பிறந்த நாளான மே 12 உலக செவிலியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவில் பொது மருத்துவமனைகளில் 60 பேருக்கு ஒரு செவிலியர் இருக்கிறார். அதனால் அவர்கள் கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கிறது.
இத்தகைய சிறந்த சேவை புரியும் செவிலியர்களை நாமும் வாழ்த்திடுவோம்!

Tuesday, May 5, 2015

மதுரை கட்டபொம்மன் நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மேதின விழா நடைபெற்றது. கட்சி கொடியை மாவட்டச் செயலாளர் R.ஜெயராமன் கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார். மதுரை மாநகர் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினரும் நமது அமைப்பின் கன்வீனருமான தோழர். சேது மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


   மதுரை தொலைதொடர்பு மாவட்டம் முழுவதும்  அனைத்துக் கிளைகளிலும் மேதினக் கொடியேற்றம் வெகுசிறப்பாக நடைபெற்றது. மாநில, மாவட்டச் சங்க நிர்வாகிகள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
  மதுரை GM அலுவலகக் கிளையில் கிளையின் தலைவர் தோழர்.T.நெடுஞ்செழியன் தலைமையேற்க,கிளைச் செயலர் தோழர். A.மெஹ்ராஜுதீன் வரவேற்க,தோழர். சுல்தான் அலாவுதீன் அவர்களின் விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே தோழர். K.ஜெயப்பிரகாஷ் நமது சம்மேளனக் கொடியை ஏற்றிவைத்தார்.
    மாவட்டச் செயலர் தோழர்.சிவகுருநாதன், தோழியர் மதினா யாஸ்மின், தோழர். முருகேசன் ஆகியோர் மேதின வரலாறு, நடந்து முடிந்த போராட்ட அனுபவம், நமது எதிர்காலக் கடமைகள் பற்றி உரையாற்றினர்.


மாமேதை கார்ல் மார்க்ஸ் பிறந்த நாள் மே - 5



Sunday, May 3, 2015

திண்டுக்கல் நகரில் மேதினக் கொடியேற்ற நிகழ்வுகள்:


Tuesday, April 28, 2015


பெருந்திரள் பட்டினிப்போர் - CGM அலுவலகம் முன்பாக
29-04-2015 காலை 10 மணிக்கு
இயக்க மாண்பைக் காத்திட
பொய் வழக்கை உடைத்தெறிந்திட
திரண்டிடுவோம் சென்னையில்!

நாடு காத்திட.. நமது BSNL காத்திட 
நமது இரண்டு நாள் போராட்டம்..
நாடு முழுக்க நடந்து முடிந்துள்ளது.

கட்டபொம்மன்கள் காலமாகி விட்டாலும்...
எட்டப்பன்கள் மட்டும் எப்போதும் இறப்பதில்லை..
எந்த இயக்கத்திலும்.. 
எந்த போராட்டத்திலும்..
எந்த வேள்வியிலும்...
எட்டப்பன்கள் தங்கள் 
எட்டிக்குணத்தை.. 
எப்போதும் காட்டத்தவறுவதேயில்லை...
இதற்கு நமது  பகுதியும் விதிவிலக்கில்லை..

அதன் அடையாளங்கள்தான் ..
சென்னையில் தோழர்.மதிவாணன் மீது 
நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலும்...

நமது மாநிலச்செயலர் உள்ளிட்ட 
தமிழகத்தலைவர்கள் மீது 
தொடுக்கப்பட்டிருக்கும் போலி வழக்குகளும்...

இந்த அற்ப பதர்களை 
பாரதி சென்னையில்
பார்த்திருப்பான் போலும்..
எனவேதான் 
நெஞ்சு பொறுக்குதில்லையே  -இந்த 
நிலை கெட்ட மனிதரை 
நினைந்து விட்டால்.. 
என்று நொந்து பாடினான்..

எழுந்து நடப்பதற்கும் வலிமையற்ற 
எண்ணிலா மன நோயுடைய..
இந்த புல்லர்களை...
பொறியற்ற விலங்குகளை...
அவர்களுக்கு துணை போகும் 
அறிவிலிகளை..
தக்க விதத்தில் தண்டிப்போம்..

பயிர்களை விளைப்பது மட்டும் விவசாயமல்ல..
பாழும்  களைகளை களைவதும் விவசாயமே..

BSNLலில்...
களைகளைக் களைவோம்..
பயிர்களைக் காப்போம்..

Saturday, April 25, 2015

சென்னை தொலைபேசி மாநிலச் செயலர் மதிவாணன் அவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து மதுரை CTMX வாசலில் 24-04-15 காலை 11 மணிக்கு நடைபெற்ற ஆர்ப்பாட்ட பதிவுகள்: