Tuesday, December 2, 2014

போராடும் வங்கி ஊழியர்களுக்கு வாழ்த்துக்கள்!

தமிழகம், புதுவை உள்ளிட்ட ஆறு மாநிலங்களைச் சேர்ந்த 1.5 லட்சம் வங்கி ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை (டிச.2) வேலைநிறுத்தம் செய்கின்றனர்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக மும்பையில் இந்திய வங்கிகள் நிர்வாக அமைப்பின் உயர் அதிகாரிகளுடன் வங்கி ஊழியர் சங்க நிர்வாகிகள் திங்கள்கிழமை நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
ஊதிய உயர்வு விகிதத்தில்தான் பிரச்னை: ""ஊதிய உயர்வை கடந்த 2012-ஆம் ஆண்டு நவம்பர் முதல் செயல்படுத்த இந்திய வங்கிகள் நிர்வாக அமைப்பின் உயர் அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர்.
எனினும், ஊதிய உயர்வு விகிதத்தை 23 சதவீதத்திலிருந்து ஓரளவு குறைத்துக் கொள்வதாக திங்கள்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஊழியர் தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியபோதிலும், 11 சதவீத ஊதிய உயர்வுதான் அளிக்க முடியும் என்ற பழைய நிலைப்பாட்டிலிருந்து மாற முடியாது என நிர்வாக அமைப்பினர் கூறி விட்டனர். இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது'' என்றார் சி.எச். வெங்கடாசலம்.
பிற மாநிலங்களில்...இதே போன்று, தில்லி, பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் டிசம்பர் 3-ஆம் தேதியும், மேற்கு வங்கம், ஒடிஸா, பிகார், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் டிசம்பர் 4-ஆம் தேதியும், மகாராஷ்டிரம், குஜராத், கோவா ஆகிய மாநிலங்களில் டிசம்பர் 5-ஆம் தேதியும் வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் வெல்லட்டும்.

Monday, December 1, 2014

செய்திகள்

  •  இன்று 01/12/2014 முதல் தமிழகத்தில் ERP முறை அமுல்படுத்தப்படுகின்றது. BLACKOUT PERIOD என்னும் பணிகளற்ற காலம் 10/12/2014 வரை டைப்பிடிக்கப்படும்.  15/12/2014லில் இருந்து ERP திட்டம் நடைமுறையில் செயல்படுத்தப்படும்.
  •  MTNL - BSNL  இணைப்பு பற்றி அரசு தீவிரமாக சிந்தித்து வருவதாகவும் அது பற்றி பரிசீலிக்க 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மேல்சபையில் கேள்வி நேரத்தில் நம்து துறை அமைச்சர் பதில் அளித்துள்ளார்.  
  • மேலும் விருப்ப ஓய்வு மற்றும் ஊழியர்களின் சம்பளச்சுமையில் ஒரு பகுதியை அரசே ஏற்றுக்கொள்ளுதல் போன்ற முந்தைய அரசின் பரிந்துரையின் மீது இன்னும்  முடிவெடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

  • அக்டோபர் 2014க்கான விலைவாசிப்படி உயர்வில் மாற்றமில்லை என்று கூறப்படுகின்றது. ஜனவரி 2015 விலைவாசிப்படி உயராமலோ  அல்லது குறைந்தோ போகலாம்.
  • மாற்றல் பிரச்சினைகளில் இருந்து உடல் ஊனமுற்ற ஊழியர்களுக்கு விலக்கு அளித்து BSNL  நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது. உடல் ஊனமுற்ற குழந்தைகள் இருந்தால்   அவர்களுக்கும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  • டிசம்பர் 5 அன்று அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் இணைந்து  மாநிலத் தலைநகரங்களில் மத்திய அரசின் ஊழியர் சட்டங்களை திருத்தும் போக்கிற்கு கண்டனம் தெரிவித்து எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கின்றன. 



Saturday, November 29, 2014

29-11-2014 அன்று மதுரையில் STR-STP சென்னை மற்றும் தமிழ்நாடு மாவட்டச் சங்கங்களின் இணைப்பு மாநாடு தோழர்கள் V.P.காத்தபெருமாள், S.M.கோவிந்தராஜன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.தோழர்கள் சுந்தர்பாபு,ராமகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்புரையாற்றினர். தோழர் அருணாசலம் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்.
தோழர். சேது மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார்.AIBSNLEA மாநிலச் செயலர் தோழர்.A.சிவக்குமார் வாழ்த்துரை வழங்கினார். அவரைத் தொடர்ந்து தோழர்கள் P.காமராஜ்,  மத்திய சஙக சிறப்பு அழைப்பாளர், புதுவை, மனோகரன், மாநில துணைத்தலைவர், திருச்சி
விஜயரங்கன்,மாநில அமைப்புச் செயலர், திண்டுக்கல், பரிமளம், மாநில துணைத் தலைவர்,
அல்லிராஜா, மாவட்டச் செயலர், வேலூர்,சிவகுருநாதன், மாவட்டச் செயலர்,மதுரை
முருகேசன், மாவட்டத் தலைவர், மதுரை வாழ்த்துரை வழங்கினர்.
மாநிலச் செயலர் தோழர். பட்டாபி சிறப்புரையாற்றினார்.
தோழர். ஆர்.கே நிறைவுப் பேருரையாற்ற
தோழர். மோகன்குமார் நன்றி கூற மாநாடு சிறப்புடன் முடிவடைந்தது.
புதிய நிர்வாகிகளாக தோழர்.P.ராஜகோபால் , R.அன்பழகன், S..M.கோவிந்தராஜன் ஆகியோர் முறையே தலைவர், செயலாளர், பொருளாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதிய நிர்வாகிகளுக்கு மதுரை மாவட்டச் சங்கத்தின் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். 













Thursday, November 27, 2014


27-11-2014 வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தோழமையோடு NFTE -BSNL மதுரை மாவட்டச் சங்கத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.

Wednesday, November 26, 2014

STR- STP மாவட்டச் சங்கங்களின் இணைந்த மாநாடு
29-11-2014  காலை 10 மணி, மதுரை

25/11/2014 அன்று BSNL நிர்வாகத்துடன் JAC கூட்டு நடவடிக்கை குழு தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில்ஏதும் முன்னேற்றமில்லை.

ஊழியர்கள் பிரச்சினை தீர்வில் BSNL  நிர்வாகம் வழக்கம் போலவே தனது மெத்தனத்தை வெளிப்படுத்துகின்றது. 

எனவே தோழர்களே!. 

நாளை 27/11/2014 நாடு தழுவிய

ஒரு நாள் வேலை நிறுத்தத்தை


வெற்றிகரமாக்குவோம்.

Tuesday, November 25, 2014

நவம்பர் 27 வேலை நிறுத்தம்
JAC பேச்சுவார்த்தை

    நவம்பர் 27 வேலை நிறுத்தக்  கோரிக்கைகள் மீது பேச்சுவார்த்தை நடத்திட JAC  ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில்  தோழர்.அபிமன்யு அவர்களுக்கு BSNL  நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

பேச்சுவார்த்தை 25/11/2014 செவ்வாய் மாலை 5 மணிக்கு நடைபெறும்.
நமது பொதுச் செயலர் தோழர். சந்தேஷ்வர் சிங் பேச்சுவார்த்தையில் பங்கேற்க கொல்கத்தா சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு டெல்லி விரைந்துள்ளார்.

பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்தாலும்.. 

தோழர்கள் போராட்டம் வெற்றிபெற  முனைப்புடன் செயலாற்றவும்.