Tuesday, November 25, 2014

நவம்பர் 27 வேலை நிறுத்தம்
JAC பேச்சுவார்த்தை

    நவம்பர் 27 வேலை நிறுத்தக்  கோரிக்கைகள் மீது பேச்சுவார்த்தை நடத்திட JAC  ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில்  தோழர்.அபிமன்யு அவர்களுக்கு BSNL  நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

பேச்சுவார்த்தை 25/11/2014 செவ்வாய் மாலை 5 மணிக்கு நடைபெறும்.
நமது பொதுச் செயலர் தோழர். சந்தேஷ்வர் சிங் பேச்சுவார்த்தையில் பங்கேற்க கொல்கத்தா சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு டெல்லி விரைந்துள்ளார்.

பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்தாலும்.. 

தோழர்கள் போராட்டம் வெற்றிபெற  முனைப்புடன் செயலாற்றவும். 

 புதுச்சேரி NFPTE வைரவிழா 




Monday, November 24, 2014

NFPTE
சம்மேளன வைரவிழா
22-11-2014 அன்று புதுவை சாய்பாபா திருமண மண்டபத்தில் மதியம்   02:30மணிக்கு கொடியேற்றத்துடன் விழா இனிதே துவங்கியது. தேசிய கொடியை மூத்த தோழர் சேலம் M.S. அவர்களும்சம்மேளன கொடியை  68 போராட்ட தியாகி தோழர் சுவாமிநாதனும் ஏற்றினர்.
தோழர் M.லட்சம் மாநில தலைவர் தலைமையேற்க ,
தோழர்கள்  K.அசோகராஜன், P.சென்னகேசவன் வரவேற்க,
தோழர் V.லோகநாதன் அஞ்சலியுரை நிகழ்த்த ,
தோழர் K.சேது துவக்கவுரை ஆற்றினார்.
விழாவில் தோழமை சங்க தலைவர்கள்
S.செல்லப்பா.  அகிலஇந்திய துணை செயலர்-BSNLEU,
A. பாபு ராதாகிருஷ்ணன்.மாநில செயலர்- BSNLEU,
D.சந்திரசேகரன். மாநில செயலர்-FNTO,
A.செல்லப்பாண்டியன். மாநில செயலர்-TEPU,
M.கோபிநாதன்.மாநில செயலர்-SNEA,
S.சிவகுமார். மாநில செயலர்-AIBSNLEA,
குணசேகரன் மாநில சங்க நிர்வாகி-AIBSNLOA,
P.N.பெருமாள். மாநில செயலர்-SEWA
D.சிவசங்கர்.மாநில தலைவர்.SNATTA, 
தோழர். தினேஷ் பொன்னையா AITUC ஆகியோர் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தனர்.
தோழர்கள் முத்தியாலு, தமிழ்மணி, ராபர்ட்ஸ், மாரி, சுப்பராயன் ஆகியோர் சம்மேளனத்தின் 60ஆண்டுகால வரலாற்றை நினைவு கூர்ந்தனர்.மாநிலத்தின் பல்வேறு  மாவட்டத்திலிருந்து பெரும்பாலான தோழர்களும்தோழியர்களும் 600க்கும் மேற்பட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
விழாவில் செப்.1968 ல் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற  
மூத்த தோழர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
தோழர்கள்.பட்டாபி,சம்மேளன செயலர்கள்  G.ஜெயராமன்.  SSG  ஆகியோர் சிறப்புரையாற்ற  தோழர்.ஆர்.கே நிறைவுரையாற்றி விழாவை முடித்து வைத்தார்.

மதுரை மாவட்ட்த்திலிருந்து 40க்கும்மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

விழாவினை குறுகிய காலத்தில் நடத்திய மாநில சங்கத்திற்கும் விழாவை ஏற்று சிறப்பான முறையில் நடத்தி தந்த புதுவை மாவட்ட செயலர் தோழர் P.காமராஜ்,மாவட்ட உதவிச் செயலர் செல்வரெங்கன், மாநிலப் பொருளாளர் அசோக்ராஜ் மற்றும் அனைத்து தோழர்களுக்கும் மதுரை மாவட்ட சங்கம் நெஞ்சார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறது.

Friday, November 21, 2014

NFPTE வைரவிழா 
22-11-2014 புதுச்சேரியில்
அணிதிரள்வோம்! 



Thursday, November 20, 2014

JAC  கூட்டு நடவடிக்கைக் குழு சார்பாக சிறப்புக்கூட்டம் 19-11-2014 அன்று மதுரை தல்லாகுளம் வளாகத்தில் தலைவர் தோழர். சிவகுருநாதன் தலைமையில் நடைபெற்றது. கன்வீனர் தோழர்.சூரியன் அனைவரையும் வரவேற்புரை நிகழ்த்தினார். அக்கூட்டத்தில்
SNATTA மாநிலச் செயலர் தோழர். அழகுபாண்டியராஜா
NFTE மாநிலத் துணைத் தலைவர் தோழர்.லட்சம்
BSNLEUமாநிலச் செயலர் தோழர்.பாபு ராதாகிருஷ்ணன்
TEPU மாநிலச் செயலர் தோழர்.செல்லப்பாண்டியன்
ஆகியோர் நவம்பர் 27 ஒருநாள் வேலைநிறுத்தக் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.


FNTO மாவட்டப் பொருளாளர் தோழர் ஸ்டாலின் நன்றி கூறினார்.









Monday, November 17, 2014

கிளை மாநாடுகள்:
  • 13-11-2014 அன்று EMM & NCR  கிளைகளின் இணைப்பு மாநாடு கீழமாசி வீதி தொலைபேசி நிலைய  TM Duty ரூமில் தோழர்கள் K.அழகர்சாமி தலைமையில் நடைபெற்றது. 
மாநிலச் சங்க நிர்வாகிகள் தோழர் விஜயரங்கன், தோழியர் பரிமளம், மாவட்டச் சங்க நிர்வாகிகள் சிவகுருநாதன்,முருகேசன், செந்தில், வேலுச்சாமி,ராஜேந்திரன்,ராஜ்குமார்  மற்றும் கிளைச் செயலர்கள்,முன்னணித் தோழர்கள் பங்கேற்றுச்சிறப்பித்தனர்.
 
    • EMM  கிளையில் தோழர்கள் பாலாஜி, காஜாமொகைதீன், சங்கிலி  ஆகியோர் முறையே தலைவர், செயலர், பொருளாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    Thursday, November 13, 2014

    கிளை மாநாடுகள்:
    • 12-11-2014 அன்று TMX கிளை மற்றும் North கிளைகளின் மாநாடு தல்லாகுளம் North TM Duty ரூமில்  நடைபெற்றது. 
    மாநிலச் சங்க நிர்வாகி தோழியர் பரிமளம், மாவட்டச் சங்க நிர்வாகிகள் சிவகுருநாதன்,முருகேசன், செந்தில், வேலுச்சாமி  மற்றும் கிளைச் செயலர்கள்,முன்னணித் தோழர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
    • TMX கிளையில் தோழர்கள் ராம்தாஸ், சீனிவாசன், மகேஸ்வரி ஆகியோர் முறையே தலைவர், செயலர், பொருளாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
    • North கிளையில் தோழர்கள் சங்கரையா, வீரன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் முறையே தலைவர், செயலர்,பொருளாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.