பெருந்திரள் பட்டினிப்போர் - CGM அலுவலகம் முன்பாக
29-04-2015 காலை 10 மணிக்கு
இயக்க மாண்பைக் காத்திட
பொய் வழக்கை உடைத்தெறிந்திட
திரண்டிடுவோம் சென்னையில்!
நாடு காத்திட.. நமது BSNL காத்திட
நமது இரண்டு நாள் போராட்டம்..
நாடு முழுக்க நடந்து முடிந்துள்ளது.
கட்டபொம்மன்கள் காலமாகி விட்டாலும்...
எட்டப்பன்கள் மட்டும் எப்போதும் இறப்பதில்லை..
எந்த இயக்கத்திலும்..
எந்த போராட்டத்திலும்..
எந்த வேள்வியிலும்...
எட்டப்பன்கள் தங்கள்
எட்டிக்குணத்தை..
எப்போதும் காட்டத்தவறுவதேயில்லை...
இதற்கு நமது பகுதியும் விதிவிலக்கில்லை..
அதன் அடையாளங்கள்தான் ..
சென்னையில் தோழர்.மதிவாணன் மீது
நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலும்...
நமது மாநிலச்செயலர் உள்ளிட்ட
தமிழகத்தலைவர்கள் மீது
தொடுக்கப்பட்டிருக்கும் போலி வழக்குகளும்...
இந்த அற்ப பதர்களை
பாரதி சென்னையில்
பார்த்திருப்பான் போலும்..
எனவேதான்
நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த
நிலை கெட்ட மனிதரை
நினைந்து விட்டால்..
என்று நொந்து பாடினான்..
எழுந்து நடப்பதற்கும் வலிமையற்ற
எண்ணிலா மன நோயுடைய..
இந்த புல்லர்களை...
பொறியற்ற விலங்குகளை...
அவர்களுக்கு துணை போகும்
அறிவிலிகளை..
தக்க விதத்தில் தண்டிப்போம்..
பயிர்களை விளைப்பது மட்டும் விவசாயமல்ல..
பாழும் களைகளை களைவதும் விவசாயமே..
BSNLலில்...
களைகளைக் களைவோம்..
பயிர்களைக் காப்போம்..